← செய்திகளுக்குத் திரும்பு
உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்..
படத்தைப் பதிவிறக்கு

உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ...

“நீதிமொழிகள் 11:25 வேதாகமத்தில், ஆபிரகாம் தனது உதாரகுணத்தின் மூலம் செழிப்பானவராக காணப்பட்டார். ஆதியாகமம் 13 இல், ஆபிரகாமும் அவருடைய மருமகன் லோத்தும் ஏராளமான ஆடுகளையும், மந்தைகளையும் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களின் மந்தைகள் பெருகியதால் மேய்ச்சல் நிலம் தொடர்பாக அவர்களின் மந்தை மேய்ப்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதில் ஆபிரகாம் மிகுந்த இரக்கம் உள்ளவராக இருந்தார். எந்த மனக்கசப்பும், சுயநலமும் இல்லாமல் லோத்திடம் முதலாவது குடியேறுவதற்குரிய இடத்தை தேர்ந்தெடுக்கும்படிக் கூறினார். லோத்து சோதோம் மற்றும் கொமோராவைச் சுற்றியுள்ள செழிப்பான சமவெளிகளைத் தேர்ந்தெடுத்து, ஆபிராமுக்கு சற்று பார்பதற்கு செழிப்புக் குறைந்த இடத்தை விட்டுச் சென்றார். என்றாலும், கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதித்தார், பொருள், செல்வத்தை விட அவர் திரளான ஜாதிகளுக்குத் தகப்பன் ஆனார், அவருடைய விசுவாசமும் பெருந்தன்மையும் கர்த்தர் தனது ஜனத்திடம் விரும்பும் உறவின் அடிப்படை மாதிரிகளாயிருந்தன. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. உதாரகுணமுடையவர்களாய் இருக்க நீங்கள் தயங்குகிறீர்களா?2. தாராளமாய் கொடுக்க உங்களைப் பயமும் கவலைகளும் தடுக்கிறதா?3. உங்கள் வாழ்க்கையில் உதாரகுணமுள்ள இருதயத்தை எப்படி வளர்த்துக் கொள்வது? * தனக்கென தேவைகள் இருந்தாலும், பிறருக்கு முதலிடம் கொடுக்க்கூடிய‌ ஆபிரகாமின் உதாரகுணமுள்ளமனது எப்படி கர்த்தருடைய இருதயத்தோடு ஒத்துப்போகிறது என்பதற்கு ஒரு சக்திவாய்ந்த உதாரணம்.* மற்றவர்களுக்கு முதலிடம் கொடுக்கும் இந்தக் கொள்கையைப் பின்பற்றுங்கள்.*அப்பொழுது உண்மையிலேயே கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது குணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், என் எண்ணங்களிலும், நோக்கங்களிலும் உதாரகுணத்தோடு இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 2 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். நீதிமொழிகள் 11:25 வேதாகமத்தில், ஆபிரகாம் தனது உதாரகுணத்தின் மூலம் செழிப்பானவராக காணப்பட்டார். ஆதியாகமம் 13 இல், ஆபிரகாமும் அவருடைய மருமகன் லோத்தும் ஏராளமான ஆடுகளையும், மந்தைகளையும் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களின் மந்தைகள் பெருகியதால் மேய்ச்சல் நிலம் தொடர்பாக அவர்களின் மந்தை மேய்ப்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதில் ஆபிரகாம் மிகுந்த இரக்கம் உள்ளவராக இருந்தார். எந்த மனக்கசப்பும், சுயநலமும் இல்லாமல் லோத்திடம் முதலாவது குடியேறுவதற்குரிய இடத்தை தேர்ந்தெடுக்கும்படிக் கூறினார். லோத்து சோதோம் மற்றும் கொமோராவைச் சுற்றியுள்ள செழிப்பான சமவெளிகளைத் தேர்ந்தெடுத்து, ஆபிராமுக்கு சற்று பார்பதற்கு செழிப்புக் குறைந்த இடத்தை விட்டுச் சென்றார். என்றாலும், கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதித்தார், பொருள், செல்வத்தை விட அவர் திரளான ஜாதிகளுக்குத் தகப்பன் ஆனார், அவருடைய விசுவாசமும் பெருந்தன்மையும் கர்த்தர் தனது ஜனத்திடம் விரும்பும் உறவின் அடிப்படை மாதிரிகளாயிருந்தன. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. உதாரகுணமுடையவர்களாய் இருக்க நீங்கள் தயங்குகிறீர்களா?2. தாராளமாய் கொடுக்க உங்களைப் பயமும் கவலைகளும் தடுக்கிறதா?3. உங்கள் வாழ்க்கையில் உதாரகுணமுள்ள இருதயத்தை எப்படி வளர்த்துக் கொள்வது? * தனக்கென தேவைகள் இருந்தாலும், பிறருக்கு முதலிடம் கொடுக்க்கூடிய‌ ஆபிரகாமின் உதாரகுணமுள்ளமனது எப்படி கர்த்தருடைய இருதயத்தோடு ஒத்துப்போகிறது என்பதற்கு ஒரு சக்திவாய்ந்த உதாரணம்.* மற்றவர்களுக்கு முதலிடம் கொடுக்கும் இந்தக் கொள்கையைப் பின்பற்றுங்கள்.*அப்பொழுது உண்மையிலேயே கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது குணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், என் எண்ணங்களிலும், நோக்கங்களிலும் உதாரகுணத்தோடு இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.