← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக.

“கர்த்தர் சமீபமாயிருக்கிறார். பிலிப்பியர் 4:5 வேதாகமத்தில் ஒரு முக்கிய நபரான மோசே, சாந்தகுணத்துக்கு பெயர் பெற்றவர். அவர் ஒரு தலைவராக, தீர்க்கதரிசியாக, மற்றும் கர்த்தருக்கும், இஸ்ரவேலர்களுக்கும் இடையே மத்தியஸ்தராக இருந்தபோதிலும், தொடர்ந்து தனது சாந்தகுணத்தை வெளிப்படுத்தினார். மக்களின் குறைகள் மற்றும் கீழ்ப்படியாமையின் நடுவிலும், மோசே பொறுமையுடனும் இரக்கத்துடனும் இருந்தார், அடிக்கடி அவர்கள் சார்பாக கர்த்தரிடம் பரிந்து பேசினார். அவருடைய மனஉளைச்சலின் நேரங்களில், மோசே தொடர்ந்து கர்த்தரின் வழிகாட்டுதலை நாடினார், மேலும் சாந்தகுணத்தின் அடையாளமாக தாழ்மையை வெளிப்படுத்தினார். மோசேயின் சாந்தகுணம் அவரது குடும்பத்துடனான காரியங்களிலும் காணப்பட்டது. அவர் தனது மாமனார் எத்திரோவின் ஆலோசனையை மனமுவந்து ஏற்றுக்கொண்டார், மனத்தாழ்மையையோடு, மற்றவர்களிடமிருந்து ஞானத்தைப் பெற்றுக்கொள்ள ஆர்வமான மனதுடனும் காணப்பட்டார். தலைமைத்துவத்தில், ஆவிக்குரியத் தன்மை மற்றும் சாந்தகுணத்துடன் எப்படி வாழ்வது என்பதை மோசேயின் வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. மற்றவர்களுடனான உங்கள் தொடர்புகள் மற்றும் நடத்தைகளில் நீங்கள் எவ்வளவு சாந்தகுணத்தோடு இருக்கிறீர்கள் என்பதை ஆராயுங்கள்.2. நீங்கள் வகிக்கும் பொறுப்புகளை உங்கள் அகந்தைக்கு சாக்குப்போக்காக பயன்படுத்துகிறீர்களா?3. இஸ்ரவேலர்களை வழிநடத்தும் போது மோசே செய்ததைப் போல உங்கள் தலைமைத்துவத்தில் நீங்கள் எவ்வாறு சாந்தகுணத்தை வளர்க்க முடியும்? * மோசேயின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து, மற்றவர்களுடன் உங்கள் தொடர்புகளில் மனத்தாழ்மையையும் பொறுமையையும் வெளிப்படுத்த கர்த்தரின் வழிகாட்டுதலையும் கிருபையையும் நாடுங்கள்.* இயேசுவுடனான உங்கள் உறவைப் பிரதிபலிக்க சாந்தகுணமுள்ளவர்களாய் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பிறரிடம் சாந்தகுணத்தோடு இருக்க எனக்கு உதவிச் செய்யும். உங்கள் அன்புக்கும், இரக்கத்துக்கும் என் வாழ்க்கை ஒரு உதாரணமாக இருக்கட்டும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 3 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். பிலிப்பியர் 4:5 வேதாகமத்தில் ஒரு முக்கிய நபரான மோசே, சாந்தகுணத்துக்கு பெயர் பெற்றவர். அவர் ஒரு தலைவராக, தீர்க்கதரிசியாக, மற்றும் கர்த்தருக்கும், இஸ்ரவேலர்களுக்கும் இடையே மத்தியஸ்தராக இருந்தபோதிலும், தொடர்ந்து தனது சாந்தகுணத்தை வெளிப்படுத்தினார். மக்களின் குறைகள் மற்றும் கீழ்ப்படியாமையின் நடுவிலும், மோசே பொறுமையுடனும் இரக்கத்துடனும் இருந்தார், அடிக்கடி அவர்கள் சார்பாக கர்த்தரிடம் பரிந்து பேசினார். அவருடைய மனஉளைச்சலின் நேரங்களில், மோசே தொடர்ந்து கர்த்தரின் வழிகாட்டுதலை நாடினார், மேலும் சாந்தகுணத்தின் அடையாளமாக தாழ்மையை வெளிப்படுத்தினார். மோசேயின் சாந்தகுணம் அவரது குடும்பத்துடனான காரியங்களிலும் காணப்பட்டது. அவர் தனது மாமனார் எத்திரோவின் ஆலோசனையை மனமுவந்து ஏற்றுக்கொண்டார், மனத்தாழ்மையையோடு, மற்றவர்களிடமிருந்து ஞானத்தைப் பெற்றுக்கொள்ள ஆர்வமான மனதுடனும் காணப்பட்டார். தலைமைத்துவத்தில், ஆவிக்குரியத் தன்மை மற்றும் சாந்தகுணத்துடன் எப்படி வாழ்வது என்பதை மோசேயின் வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. மற்றவர்களுடனான உங்கள் தொடர்புகள் மற்றும் நடத்தைகளில் நீங்கள் எவ்வளவு சாந்தகுணத்தோடு இருக்கிறீர்கள் என்பதை ஆராயுங்கள்.2. நீங்கள் வகிக்கும் பொறுப்புகளை உங்கள் அகந்தைக்கு சாக்குப்போக்காக பயன்படுத்துகிறீர்களா?3. இஸ்ரவேலர்களை வழிநடத்தும் போது மோசே செய்ததைப் போல உங்கள் தலைமைத்துவத்தில் நீங்கள் எவ்வாறு சாந்தகுணத்தை வளர்க்க முடியும்? * மோசேயின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து, மற்றவர்களுடன் உங்கள் தொடர்புகளில் மனத்தாழ்மையையும் பொறுமையையும் வெளிப்படுத்த கர்த்தரின் வழிகாட்டுதலையும் கிருபையையும் நாடுங்கள்.* இயேசுவுடனான உங்கள் உறவைப் பிரதிபலிக்க சாந்தகுணமுள்ளவர்களாய் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பிறரிடம் சாந்தகுணத்தோடு இருக்க எனக்கு உதவிச் செய்யும். உங்கள் அன்புக்கும், இரக்கத்துக்கும் என் வாழ்க்கை ஒரு உதாரணமாக இருக்கட்டும். ஆமென்.