ஞாயிறு, 21 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார். சங்கீதம் 107:35 - உங்கள் வாழ்க்கையில் ஒரு வறட்சியின் பாதையில் கடந்து செல்வது போல் நீங்கள் உணருகிறீர்களா?- ஒரு பள்ளத்தில் சிக்கிக்கொண்டது போலவும் தப்பிக்கொள்ளும்படியான போக்கைக் கண்டறிய முடியவில்லை என்றும் எண்ணுகிறீர்களா?- உங்களைக் கவனித்துக் கொள்ள உங்களுக்குத் தனிப்பட்ட நேரமில்லாத அளவுக்கு உங்கள் அன்றாட வேலைகளால் நீங்கள் மிகவும் அவதிப்படுகிறீர்களா?- ஒருவேளை நீங்கள் ஒரு பாலைவனத்தில் சிக்கிக்கொண்டது போலவும், வறண்ட நிலமும் எரிக்கும் வெப்பமும் சூழ்ந்திருப்பதுபோலவும் உணரலாம். - ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், உங்கள் வாழ்க்கையில் உள்ள வறட்சியை நீரூற்றுகளாய்த் தேவனால் மாற்ற முடியும்.- அவர் இஸ்ரவேலர்களுக்குப் பாலைவனத்தில் ஒரு பாறையிலிருந்து தண்ணீரை வரவழைத்தது போல், உங்கள் ஆத்துமாவுக்கு ஜீவனையும் மன உற்சாகத்தையும் அவரால் தர முடியும். - உங்கள் சரீரம், ஆவி மற்றும் மனம் புத்துயிர் பெற, உங்கள் பரபரப்பான கால அட்டவணையிலிருந்து சற்று விலகி, தேவனுடன் அவர் பிரசன்னத்தில் அமர்ந்திருப்பதைப் பற்றி யோசியுங்கள்.- உங்கள் தற்போதைய நிலைமையை ஆராய்வதின் மூலமும், எதிர்காலத்திற்கான அவரது ஆலோசனையைப் பெறுவதன் மூலமும் உங்கள் வாழ்க்கையில் தெளிவையும் வழிகாட்டலையும் பெற்றுக்கொள்ளலாம்.- அவருக்காகக் காத்திருப்பது, புத்துணர்ச்சியூட்டும் நீரூற்றைப் போல உங்களுக்குப் புத்துயிர் அளித்து, உங்கள் சோர்வுற்ற ஆவிக்குப் புதிய ஜீவனைத் தருகிறது.- அவருடைய ஜீவத்தண்ணீரால் உங்களை நிரப்பவும் உங்கள் தாகத்தைத் தணிக்கவும் அவருக்கு இடங்கொடுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமது பலத்தையும் வழிகாட்டலையும் நாடி இன்று நான் உம்மிடம் வருகிறேன். தயவுகூர்ந்து, நீரூற்றைப் போல என்னை புத்துணர்ச்சியூட்டி புதுப்பியும். எனக்கு தெளிவு, மற்றும் மனச்சாமாதானம் தந்து, என் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டறிய உதவியருளும். ஆமென்.
தேவன் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை...
“ஞாயிறு, 21 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார். சங்கீதம் 107:35 - உங்கள் வாழ்க்கையில் ஒரு வறட்சியின் பாதையில் கடந்து செல்வது போல் நீங்கள் உணருகிறீர்களா?- ஒரு பள்ளத்தில் சிக்கிக்கொண்டது போலவும் தப்பிக்கொள்ளும்படியான போக்கைக் கண்டறிய முடியவில்லை என்றும் எண்ணுகிறீர்களா?- உங்களைக் கவனித்துக் கொள்ள உங்களுக்குத் தனிப்பட்ட நேரமில்லாத அளவுக்கு உங்கள் அன்றாட வேலைகளால் நீங்கள் மிகவும் அவதிப்படுகிறீர்களா?- ஒருவேளை நீங்கள் ஒரு பாலைவனத்தில் சிக்கிக்கொண்டது போலவும், வறண்ட நிலமும் எரிக்கும் வெப்பமும் சூழ்ந்திருப்பதுபோலவும் உணரலாம். - ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், உங்கள் வாழ்க்கையில் உள்ள வறட்சியை நீரூற்றுகளாய்த் தேவனால் மாற்ற முடியும்.- அவர் இஸ்ரவேலர்களுக்குப் பாலைவனத்தில் ஒரு பாறையிலிருந்து தண்ணீரை வரவழைத்தது போல், உங்கள் ஆத்துமாவுக்கு ஜீவனையும் மன உற்சாகத்தையும் அவரால் தர முடியும். - உங்கள் சரீரம், ஆவி மற்றும் மனம் புத்துயிர் பெற, உங்கள் பரபரப்பான கால அட்டவணையிலிருந்து சற்று விலகி, தேவனுடன் அவர் பிரசன்னத்தில் அமர்ந்திருப்பதைப் பற்றி யோசியுங்கள்.- உங்கள் தற்போதைய நிலைமையை ஆராய்வதின் மூலமும், எதிர்காலத்திற்கான அவரது ஆலோசனையைப் பெறுவதன் மூலமும் உங்கள் வாழ்க்கையில் தெளிவையும் வழிகாட்டலையும் பெற்றுக்கொள்ளலாம்.- அவருக்காகக் காத்திருப்பது, புத்துணர்ச்சியூட்டும் நீரூற்றைப் போல உங்களுக்குப் புத்துயிர் அளித்து, உங்கள் சோர்வுற்ற ஆவிக்குப் புதிய ஜீவனைத் தருகிறது.- அவருடைய ஜீவத்தண்ணீரால் உங்களை நிரப்பவும் உங்கள் தாகத்தைத் தணிக்கவும் அவருக்கு இடங்கொடுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமது பலத்தையும் வழிகாட்டலையும் நாடி இன்று நான் உம்மிடம் வருகிறேன். தயவுகூர்ந்து, நீரூற்றைப் போல என்னை புத்துணர்ச்சியூட்டி புதுப்பியும். எனக்கு தெளிவு, மற்றும் மனச்சாமாதானம் தந்து, என் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டறிய உதவியருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

