திங்கட்கிழமை, 26 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.நீதிமொழிகள் 11: 25 “நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுப்பீர்கள்” என்பது ஒரு பிரபலமான பழமொழி. இது உண்மையும் சக்தி வாய்ந்ததுமான வாக்கியம் அல்லவா? நீங்கள் தாராள மனப்பான்மையுடன் இருக்கும்போது, பிறருக்கு ஒரு ஊக்கத்தின் ஆதாரமாகவும், நம்பிக்கையின் விளக்காவும் மாறுகிறீர்கள். அதிக நண்பர்களும் , நலம் விரும்புகிறவர்களும் உங்களுக்கு இருப்பார்கள். * தாராள மனப்பான்மையின் ஒவ்வொரு செயலும் உங்கள் எதிர்காலத்திற்காக நீங்கள் விதைக்கும் ஆசீர்வாதத்தின் விதை போன்றது.“ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான், அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்” என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. தேவன் உங்கள் இரக்கத்திற்கும் தாராள மனப்பான்மைக்கும் சம்பூரணமாய் பலனளிப்பார். நிரம்பி வழியும் ஆசீர்வாதங்களையும் நீங்கள் பெறுவீர்கள்.* தேவன் உங்கள் தேவைகள் அனைத்தையும் சரியான நேரத்தில் நிறைவேற்றுவார்.* நீங்கள் கொஞ்சத்தில் உண்மையாய் இருக்கும்போது, தேவன் உங்களை ஆசீர்வதித்துச் செழிக்கச் செய்வார். மேலும், நீங்கள் அநேகத்தின்மேல் அதிகாரியாவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தாராள மனப்பான்மையோடு, மற்றவர்களுக்கு உதவிச் செய்ய எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.
உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்.
“திங்கட்கிழமை, 26 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.நீதிமொழிகள் 11: 25 "நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுப்பீர்கள்" என்பது ஒரு பிரபலமான பழமொழி. இது உண்மையும் சக்தி வாய்ந்ததுமான வாக்கியம் அல்லவா? நீங்கள் தாராள மனப்பான்மையுடன் இருக்கும்போது, பிறருக்கு ஒரு ஊக்கத்தின் ஆதாரமாகவும், நம்பிக்கையின் விளக்காவும் மாறுகிறீர்கள். அதிக நண்பர்களும் , நலம் விரும்புகிறவர்களும் உங்களுக்கு இருப்பார்கள். * தாராள மனப்பான்மையின் ஒவ்வொரு செயலும் உங்கள் எதிர்காலத்திற்காக நீங்கள் விதைக்கும் ஆசீர்வாதத்தின் விதை போன்றது.*"ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான், அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்" என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.* தேவன் உங்கள் இரக்கத்திற்கும் தாராள மனப்பான்மைக்கும் சம்பூரணமாய் பலனளிப்பார். நிரம்பி வழியும் ஆசீர்வாதங்களையும் நீங்கள் பெறுவீர்கள்.* தேவன் உங்கள் தேவைகள் அனைத்தையும் சரியான நேரத்தில் நிறைவேற்றுவார்.* நீங்கள் கொஞ்சத்தில் உண்மையாய் இருக்கும்போது, தேவன் உங்களை ஆசீர்வதித்துச் செழிக்கச் செய்வார். மேலும், நீங்கள் அநேகத்தின்மேல் அதிகாரியாவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தாராள மனப்பான்மையோடு, மற்றவர்களுக்கு உதவிச் செய்ய எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

