← செய்திகளுக்குத் திரும்பு
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருங்கள், ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருங்கள்,...

“்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். எபேசியர் 4:32. யோசேப்பின் கதையில், தனது தந்தையான யாக்கோபிடம் தயவுப் பெற்ற யோசேப்பு, பொறாமை கொண்ட சகோதரர்களால் அடிமையாக விற்கப்படப்பட்டதைப் பார்க்கிறோம். யோசேப்பு கர்த்தருக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். எனவே, வேதனைமிகுந்த அவருடையப் பயணம் அவருக்குச் சாதகமாக மாறி, அவர் எகிப்தில் அதிபதியாக உயர்த்தப்பட்டார். எகிப்திலும் அண்டைப் பகுதிகளிலும் பஞ்சம் ஏற்பட்டபோது, அவருடைய சகோதரர்கள் தங்கள் பெரிய குடும்பத்திற்கு உணவுக்காக எகிப்துக்குச் சென்றனர். அங்கு அவர்கள் யோசேப்பைச் சந்தித்தனர், ஆனாலும் அவரை அவர்கள் அடையாளம் கண்டுக் கொள்ளவில்லை. யோசேப்புக்கு பழிவாங்கும் சக்தி இருந்தபோதிலும், அவர் அப்படிச் செய்யாமல், வேறு முயற்சியில் ஈடுப்பட்டுத், தன்னைத் தன் சகோதரர்களுக்கு வெளிப்படுத்தினார், மேலும் தனது சகோதரர்களை மன்னித்தார், அவர்கள் தீங்கு செய்ய நினைத்ததை, கர்த்தர் நன்மையாக மாற்றினார் என்று அவர்களுக்குத் தெளிவுப்படுத்தினார். இந்த மன்னிப்புச் செயல் அவர்களது முறிந்த உறவைச் சரிச்செய்து, கண்ணீருடன் மீண்டும் ஒருவருக்கொருவர் இணைவதற்கும், குடும்ப ஐக்கியத்தை மீட்டெடுப்பதற்கும் வழிவகுத்தது. யோசேப்பின் கதை, மன்னிப்பதன் மூலம் காரியங்களை எப்படி மாற்ற முடியும் என்பதையும், பயங்கர துரோக செயலுக்குப் பிறகும் எப்படி மீட்பு சாத்தியமாகும் என்பதையும் காட்டுகிறது. தனிப்பட்ட சிந்தனைக்கான கேள்விகள்: 1. யோசேப்பு தன் சகோதரர்களிடம் அன்பையும் இரக்கத்தையும் காட்டியது போல, உங்களைப் புண்படுத்தியவர்களிடம் நீங்கள் எப்படி அன்பையும் இரக்கத்தையும் காட்டலாம்?3. யோசேப்பின் கதையைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் போது, கிறிஸ்து உங்களை மன்னித்ததைப் போல, நீங்கள் உங்கள் கடந்தகால வேதனைகளை களைந்துப்போட்டு அவைகளை மன்னிப்பது எப்படி? எபேசியர் 4:32 இன் இந்த உதாரணத்தைப் பற்றி நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் சிந்தித்து, கிறிஸ்துவின் மன்னிப்பையும், இரக்கத்தையும் செயல்படுத்த முற்படுவீர்களாக, உங்கள் உறவுகளைச் சீர்படுத்தி குணப்படுத்துவீர்களாக. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கு தீங்கு செய்ய முயற்சித்தவர்களை மன்னித்து, உமது அன்பைக் காட்ட எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 1 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். எபேசியர் 4:32. யோசேப்பின் கதையில், தனது தந்தையான யாக்கோபிடம் தயவுப் பெற்ற யோசேப்பு, பொறாமை கொண்ட சகோதரர்களால் அடிமையாக விற்கப்படப்பட்டதைப் பார்க்கிறோம். யோசேப்பு கர்த்தருக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். எனவே, வேதனைமிகுந்த அவருடையப் பயணம் அவருக்குச் சாதகமாக மாறி, அவர் எகிப்தில் அதிபதியாக உயர்த்தப்பட்டார். எகிப்திலும் அண்டைப் பகுதிகளிலும் பஞ்சம் ஏற்பட்டபோது, அவருடைய சகோதரர்கள் தங்கள் பெரிய குடும்பத்திற்கு உணவுக்காக எகிப்துக்குச் சென்றனர். அங்கு அவர்கள் யோசேப்பைச் சந்தித்தனர், ஆனாலும் அவரை அவர்கள் அடையாளம் கண்டுக் கொள்ளவில்லை. யோசேப்புக்கு பழிவாங்கும் சக்தி இருந்தபோதிலும், அவர் அப்படிச் செய்யாமல், வேறு முயற்சியில் ஈடுப்பட்டுத், தன்னைத் தன் சகோதரர்களுக்கு வெளிப்படுத்தினார், மேலும் தனது சகோதரர்களை மன்னித்தார், அவர்கள் தீங்கு செய்ய நினைத்ததை, கர்த்தர் நன்மையாக மாற்றினார் என்று அவர்களுக்குத் தெளிவுப்படுத்தினார். இந்த மன்னிப்புச் செயல் அவர்களது முறிந்த உறவைச் சரிச்செய்து, கண்ணீருடன் மீண்டும் ஒருவருக்கொருவர் இணைவதற்கும், குடும்ப ஐக்கியத்தை மீட்டெடுப்பதற்கும் வழிவகுத்தது. யோசேப்பின் கதை, மன்னிப்பதன் மூலம் காரியங்களை எப்படி மாற்ற முடியும் என்பதையும், பயங்கர துரோக செயலுக்குப் பிறகும் எப்படி மீட்பு சாத்தியமாகும் என்பதையும் காட்டுகிறது. தனிப்பட்ட சிந்தனைக்கான கேள்விகள்: 1. யோசேப்பு தன் சகோதரர்களிடம் அன்பையும் இரக்கத்தையும் காட்டியது போல, உங்களைப் புண்படுத்தியவர்களிடம் நீங்கள் எப்படி அன்பையும் இரக்கத்தையும் காட்டலாம்?3. யோசேப்பின் கதையைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் போது, கிறிஸ்து உங்களை மன்னித்ததைப் போல, நீங்கள் உங்கள் கடந்தகால வேதனைகளை களைந்துப்போட்டு அவைகளை மன்னிப்பது எப்படி? எபேசியர் 4:32 இன் இந்த உதாரணத்தைப் பற்றி நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் சிந்தித்து, கிறிஸ்துவின் மன்னிப்பையும், இரக்கத்தையும் செயல்படுத்த முற்படுவீர்களாக, உங்கள் உறவுகளைச் சீர்படுத்தி குணப்படுத்துவீர்களாக. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கு தீங்கு செய்ய முயற்சித்தவர்களை மன்னித்து, உமது அன்பைக் காட்ட எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.