← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதேயுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதேயுங்கள்.

“ர் 12:5 * கர்த்தர், இரக்கமுள்ள தகப்பன். ஆனால் நீங்கள் ஒழுக்கமும் கீழ்ப்படிதலும் இல்லாதிருந்தால், உங்களை ஒழுங்குபடுத்தத் தயங்க மாட்டார்.* அவர் பாரபட்சமற்றவராகவும் நேர்மையாகவும் இருப்பதால், அவருடைய ஒழுக்க முறைமையின் படி உங்களை நியாயமாக நடத்துவார்.* நீங்கள் சாத்தானோடு அழிக்கப்படுவதை அவர் விரும்பாததால், அவர் உங்களை சிட்சித்து ஒழுக்கத்திற்கு நேராக வழிநடத்துகிறார். அது‌ உங்கள் மேல் அவருக்கு இருக்கும் அவருடைய பாசத்தை வெளிக்காட்டுவதாகும். * நீங்கள் மனிதர்களை ஏமாற்றலாம், ஆனால் கர்த்தரை ஒருபோதும் ஏமாற்ற முடியாது.* அவர் உங்களையும், உங்கள் எண்ணங்களையும், உங்கள் செயல்களையும் மிகுந்த அக்கறையுடன் கவனிக்கிறார்.* அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது.* எனவே, நீங்கள் சிட்சிக்கப்படும்போது மனம் பதறக்கூடாது.* மேலும் அவருடைய சிட்சையைப் அற்பமாக எண்ணாதீர்கள்.* மாறாக, அவருக்கு முன் பணிந்து, அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திருத்த நடவடிக்கைகளை எடுத்து, அவருக்கு உண்மையாக இருங்கள்.* அப்போது, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நேரத்திலும் அவருடையக் கரம் உங்களை வழிநடத்தி ஆசீர்வதிப்பதைக் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது விதிகளைப் பின்பற்றி, உமக்கு பிரியமாக வாழ எனக்குப் பலத்தைத் தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளி, 26 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே. எபிரெயர் 12:5 * கர்த்தர், இரக்கமுள்ள தகப்பன். ஆனால் நீங்கள் ஒழுக்கமும் கீழ்ப்படிதலும் இல்லாதிருந்தால், உங்களை ஒழுங்குபடுத்தத் தயங்க மாட்டார்.* அவர் பாரபட்சமற்றவராகவும் நேர்மையாகவும் இருப்பதால், அவருடைய ஒழுக்க முறைமையின் படி உங்களை நியாயமாக நடத்துவார்.* நீங்கள் சாத்தானோடு அழிக்கப்படுவதை அவர் விரும்பாததால், அவர் உங்களை சிட்சித்து ஒழுக்கத்திற்கு நேராக வழிநடத்துகிறார். அது‌ உங்கள் மேல் அவருக்கு இருக்கும் அவருடைய பாசத்தை வெளிக்காட்டுவதாகும். * நீங்கள் மனிதர்களை ஏமாற்றலாம், ஆனால் கர்த்தரை ஒருபோதும் ஏமாற்ற முடியாது.* அவர் உங்களையும், உங்கள் எண்ணங்களையும், உங்கள் செயல்களையும் மிகுந்த அக்கறையுடன் கவனிக்கிறார்.* அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது.* எனவே, நீங்கள் சிட்சிக்கப்படும்போது மனம் பதறக்கூடாது.* மேலும் அவருடைய சிட்சையைப் அற்பமாக எண்ணாதீர்கள்.* மாறாக, அவருக்கு முன் பணிந்து, அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திருத்த நடவடிக்கைகளை எடுத்து, அவருக்கு உண்மையாக இருங்கள்.* அப்போது, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நேரத்திலும் அவருடையக் கரம் உங்களை வழிநடத்தி ஆசீர்வதிப்பதைக் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது விதிகளைப் பின்பற்றி, உமக்கு பிரியமாக வாழ எனக்குப் பலத்தைத் தந்தருளும். ஆமென்.