வெள்ளி, 5 மே 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக. ரூத் 2:12 மோவாபியப் பெண்ணான ரூத், தன் சொந்த நாட்டை விட்டு விட்டு, இஸ்ரேலுக்குத் திரும்ப முடிவு செய்த தன் மாமியார் நகோமியோடு போக முடிவு செய்தாள். ரூத் நகோமியுடன் இருப்பது மட்டுமல்லாமல், இஸ்ரவேலின் கர்த்தரையும் பின்பற்ற முடிவுச் செய்தாள். அவர்கள் இஸ்ரவேலுக்குத் திரும்பியபோது, ரூத் வயல்களில் வேலைக்குச் சென்றாள், வயலின் உரிமையாளரான போவாஸ் அவளிடம் இந்த வார்த்தைகளை சொல்லி ஆசீர்வதித்தார். அந்நியர்களிடையே வாழ்வது, பாதுகாப்பான நிலமை இல்லாமல் வெளிநாட்டில் வசிப்பது, நிலையான வருமானம் அல்லது வேலை இல்லாதது போன்ற சூழ்நிலையை நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் ரூத் செய்தது போல், உங்கள் எல்லா வழிகளிலும் இயேசுவைப் பின்பற்றுவதில் நீங்கள் உறுதியாக இருந்தால், அவர் உங்களை கைவிடமாட்டார். உங்கள் நம்பிக்கை, நேர்மை மற்றும் விசுவாசத்திற்காக இயேசு உங்களுக்கு வெகுமதி அளிப்பார். உங்கள் வாழ்க்கையில் எல்லா நல்ல விஷயங்களும் முடிந்துவிட்டன என்று நீங்கள் நினைக்கிறீர்களோ? மனம் தளர்ந்து விடாதேயுங்கள். இயேசுவை பற்றிக்கொண்டு . அவருடைய சிறகுகளின் கீழ், அடைக்கலம் தேடுங்கள். உங்களைச் சுற்றி இருள் போன்ற சூழ்நிலை இருந்தாலும், எந்த வேலையையும் நடக்காதது போன்று இருந்தாலும், கர்த்தர் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் உங்களுக்கான திட்டங்களை சரியான நேரத்தில் நிறைவேற்றுவார், அது ஆச்சரியமாகவும் உங்கள் வாழ்க்கைக்கு இன்பமான ஆசீர்வாதமாகவும் இருக்கும். எனவே, உங்கள் பணியை உண்மையோடும், உத்தமத்தோடும் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் கைகளின் உழைப்பு வீண் போகாது. ஆம், உங்கள் உழைப்புக்கு சரியான நேரத்தில் வெகுமதி கிடைக்கும், மேலும் அதில் வரும் மகிழ்ச்சி உங்கள் புரிதலுக்கும் எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் உமது சிறகுகளின் கீழ் வருகிறேன். உமது வாக்குறுதியின்படி எனக்கு வெகுமதி அளித்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய்...
“ரூத் 2:12 மோவாபியப் பெண்ணான ரூத், தன் சொந்த நாட்டை விட்டு விட்டு, இஸ்ரேலுக்குத் திரும்ப முடிவு செய்த தன் மாமியார் நகோமியோடு போக முடிவு செய்தாள். ரூத் நகோமியுடன் இருப்பது மட்டுமல்லாமல், இஸ்ரவேலின் கர்த்தரையும் பின்பற்ற முடிவுச் செய்தாள். அவர்கள் இஸ்ரவேலுக்குத் திரும்பியபோது, ரூத் வயல்களில் வேலைக்குச் சென்றாள், வயலின் உரிமையாளரான போவாஸ் அவளிடம் இந்த வார்த்தைகளை சொல்லி ஆசீர்வதித்தார். அந்நியர்களிடையே வாழ்வது, பாதுகாப்பான நிலமை இல்லாமல் வெளிநாட்டில் வசிப்பது, நிலையான வருமானம் அல்லது வேலை இல்லாதது போன்ற சூழ்நிலையை நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் ரூத் செய்தது போல், உங்கள் எல்லா வழிகளிலும் இயேசுவைப் பின்பற்றுவதில் நீங்கள் உறுதியாக இருந்தால், அவர் உங்களை கைவிடமாட்டார். உங்கள் நம்பிக்கை, நேர்மை மற்றும் விசுவாசத்திற்காக இயேசு உங்களுக்கு வெகுமதி அளிப்பார். உங்கள் வாழ்க்கையில் எல்லா நல்ல விஷயங்களும் முடிந்துவிட்டன என்று நீங்கள் நினைக்கிறீர்களோ? மனம் தளர்ந்து விடாதேயுங்கள். இயேசுவை பற்றிக்கொண்டு . அவருடைய சிறகுகளின் கீழ், அடைக்கலம் தேடுங்கள். உங்களைச் சுற்றி இருள் போன்ற சூழ்நிலை இருந்தாலும், எந்த வேலையையும் நடக்காதது போன்று இருந்தாலும், கர்த்தர் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் உங்களுக்கான திட்டங்களை சரியான நேரத்தில் நிறைவேற்றுவார், அது ஆச்சரியமாகவும் உங்கள் வாழ்க்கைக்கு இன்பமான ஆசீர்வாதமாகவும் இருக்கும். எனவே, உங்கள் பணியை உண்மையோடும், உத்தமத்தோடும் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் கைகளின் உழைப்பு வீண் போகாது. ஆம், உங்கள் உழைப்புக்கு சரியான நேரத்தில் வெகுமதி கிடைக்கும், மேலும் அதில் வரும் மகிழ்ச்சி உங்கள் புரிதலுக்கும் எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் உமது சிறகுகளின் கீழ் வருகிறேன். உமது வாக்குறுதியின்படி எனக்கு வெகுமதி அளித்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

