← செய்திகளுக்குத் திரும்பு
ஒருவருடன் ஒருவர் பொய் சொல்லாதிருங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

ஒருவருடன் ஒருவர் பொய் சொல்லாதிருங்கள்.

“வெள்ளிக்கிழமை, 7 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள். லேவியராகமம் 19:11 * கர்த்தர் உண்மையானவர், ஆனால் சாத்தான் பொய்களின் பிதா.* நீங்கள் மற்றவர்களிடம் பொய் சொல்கிறீர்களா?* பொய் சொல்வதற்கு தண்டனை இல்லை என்று நினைக்கிறீர்களோ?* அல்லது மக்களைப் பார்த்து பயந்து, குறிப்பிட்ட சில சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்காக பொய் சொல்கிறீர்களோ?* எதுவாக இருந்தாலும், கர்த்தர் பொய்யை வெறுக்கிறார்.* தன் பிள்ளைகள் உண்மையாக இருக்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அப்போஸ்தலர் 5-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனனியாவும் சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றனர், ஆனால் அதன் மூலம் கிடைத்த பணத்தைப் பற்றி பொய் சொன்னார்கள். விற்ற பணத்தில் ஒரு பகுதியை மட்டுமே அப்போஸ்தலர்களிடம் ஒப்படைத்து விட்டு, இதுவே முழுத் தொகை என்று பொய் சொன்னார்கள். பேதுரு அனனியாவுடைய உண்மையின்மையைக் குறித்து கண்டித்துப் பேசினபோது அனனியா சடிதியாக கீழே விழுந்து இறந்தான். அவன் மனைவியாகிய சபீராளும் வந்து அதேப் பொய்யை திரும்ப சொன்னபோது அவளும் இறந்து போனாள். * வஞ்சகம் மற்றும் நேர்மையின்மையின் பாதிப்பை இந்தக் கதை வலியுறுத்துகிறது, கர்த்தர் தம் மக்களின் செயல்பாட்டையும், அவர்களுடைய நோக்கத்தையும் குறித்து கணக்குக் கேட்கிறார் என்பதை நிரூபிக்கிறது.* பொய் சொல்லும் பழக்கம் இருந்தால் இப்பொழுதே நிறுத்தி விடுங்கள்.* மனந்திரும்பி எல்லா சூழ்நிலைகளிலும் உண்மையாக இருக்க கர்த்தருடைய உதவியை நாடுங்கள்.* உங்களுடைய வார்த்தைகள் விழிப்புடனும், கிறிஸ்துவைப் பிரதிபலிக்கிறதாகவும் இருக்கட்டும் . ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து நான் உண்மையைப் பேசவும், உமது சாயலைப் பிரதிபலிக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 7 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள். லேவியராகமம் 19:11 * கர்த்தர் உண்மையானவர், ஆனால் சாத்தான் பொய்களின் பிதா.* நீங்கள் மற்றவர்களிடம் பொய் சொல்கிறீர்களா?* பொய் சொல்வதற்கு தண்டனை இல்லை என்று நினைக்கிறீர்களோ?* அல்லது மக்களைப் பார்த்து பயந்து, குறிப்பிட்ட சில சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்காக பொய் சொல்கிறீர்களோ?* எதுவாக இருந்தாலும், கர்த்தர் பொய்யை வெறுக்கிறார்.* தன் பிள்ளைகள் உண்மையாக இருக்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அப்போஸ்தலர் 5-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனனியாவும் சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றனர், ஆனால் அதன் மூலம் கிடைத்த பணத்தைப் பற்றி பொய் சொன்னார்கள். விற்ற பணத்தில் ஒரு பகுதியை மட்டுமே அப்போஸ்தலர்களிடம் ஒப்படைத்து விட்டு, இதுவே முழுத் தொகை என்று பொய் சொன்னார்கள். பேதுரு அனனியாவுடைய உண்மையின்மையைக் குறித்து கண்டித்துப் பேசினபோது அனனியா சடிதியாக கீழே விழுந்து இறந்தான். அவன் மனைவியாகிய சபீராளும் வந்து அதேப் பொய்யை திரும்ப சொன்னபோது அவளும் இறந்து போனாள். * வஞ்சகம் மற்றும் நேர்மையின்மையின் பாதிப்பை இந்தக் கதை வலியுறுத்துகிறது, கர்த்தர் தம் மக்களின் செயல்பாட்டையும், அவர்களுடைய நோக்கத்தையும் குறித்து கணக்குக் கேட்கிறார் என்பதை நிரூபிக்கிறது.* பொய் சொல்லும் பழக்கம் இருந்தால் இப்பொழுதே நிறுத்தி விடுங்கள்.* மனந்திரும்பி எல்லா சூழ்நிலைகளிலும் உண்மையாக இருக்க கர்த்தருடைய உதவியை நாடுங்கள்.* உங்களுடைய வார்த்தைகள் விழிப்புடனும், கிறிஸ்துவைப் பிரதிபலிக்கிறதாகவும் இருக்கட்டும் . ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து நான் உண்மையைப் பேசவும், உமது சாயலைப் பிரதிபலிக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.