சனிக்கிழமை, 8 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார். ஏசாயா 12:6 (NKJV) * மகா பரிசுத்தமான நம்முடைய தேவன், உண்மையிலேயே அற்புதமானவர்.* பரிசுத்த ஆவியின் மூலம் அவர் உங்களுக்குள் வாழ்கிறார், இது மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது.* நீங்கள் மறுரூபமாக்கப்பட்டு, அவரைப் போல பரிசுத்தமாயிருப்பதற்கு முயற்சிச் செய்வது மிகவும் முக்கியம். * எனவே, அவருடைய பிரசன்னத்தை எளிதாக எடுத்துக் கொண்டு அவரை அலட்சியப் படுத்தக் கூடாது.அவர் உங்களுக்குள் இருப்பதின் ஐசுவரியம் என்பது, உன்னதமான கர்த்தருடன் நீங்கள் ஐக்கியத்தை அனுபவிப்பதும் அவருடைய நிரந்தரமான வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் பெறுவதுமே. நீங்கள் மிகவும் மோசமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது கூட, நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானியேல் புத்தகத்தில், சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ ஆகியோரைப் பற்றி நாம் படிக்கிறோம், அவர்கள் சிலைக்கு முன் பணிய வேண்டும் என்ற ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படியாததற்காக கட்டப்ப்பட்டு சாதாரண சூட்டை விட ஏழு மடங்கு அதிகமாக சூடாக்கப்பட்ட அக்கினி சூளையில் வீசப்பட்டனர். அவர்களை உள்ளே தூக்கி எறிந்த வீரர்களை அக்கினி கொன்று போட்டது. இருப்பினும், இந்த மூவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதற்கு பதிலாக, அக்கினி சூளையின் நடுவில் நான்காவது நபராக உலாவிய தேவபுத்திரனின் சாயலை ராஜா கவனித்தார். ஆம்! கர்த்தர் தன் பிள்ளைகளை கைவிடவில்லை. அவர்களைப் பாதுகாக்க அவர் அங்கு இருந்தார். இன்றும், அதே தேவன் உங்கள் நடுவில் இருக்கிறார். * அவர் உங்களை ஒருபொழுதும் கைவிடமாட்டார், விட்டு விலகமாட்டார்.* அவர் உங்களிடம் அன்புகூர்ந்து, உங்கள் ஐக்கியத்தை விரும்புகிறார்.* உங்கள் வாழ்வில் அவருக்கு முன்னுரிமை அளித்து அவருடைய வழிகாட்டுதலின்படி வாழ முயற்சி செய்யுங்கள்.* அவ்வாறு செய்து, அவரது மகத்துவத்தையும் அன்பான குணத்தையும் உங்கள் சொந்த வாழ்க்கையின் மூலம் உலகிற்கு நிரூபியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வில் நீர் இருப்பதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை சுற்றியுள்ளவர்களுக்கு உமது பிரசன்னத்தை பிரதிபலிக்கும் பரிசுத்தமான வாழ்க்கை வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
இஸ்ரவேலின் பரிசுத்தர் உங்கள் நடுவில் பெரியவராயிருக்கிறார்.
“சனிக்கிழமை, 8 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார். ஏசாயா 12:6 (NKJV) * மகா பரிசுத்தமான நம்முடைய தேவன், உண்மையிலேயே அற்புதமானவர்.* பரிசுத்த ஆவியின் மூலம் அவர் உங்களுக்குள் வாழ்கிறார், இது மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது.* நீங்கள் மறுரூபமாக்கப்பட்டு, அவரைப் போல பரிசுத்தமாயிருப்பதற்கு முயற்சிச் செய்வது மிகவும் முக்கியம். * எனவே, அவருடைய பிரசன்னத்தை எளிதாக எடுத்துக் கொண்டு அவரை அலட்சியப் படுத்தக் கூடாது.*அவர் உங்களுக்குள் இருப்பதின் ஐசுவரியம் என்பது, உன்னதமான கர்த்தருடன் நீங்கள் ஐக்கியத்தை அனுபவிப்பதும் அவருடைய நிரந்தரமான வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் பெறுவதுமே.* நீங்கள் மிகவும் மோசமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது கூட, நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானியேல் புத்தகத்தில், சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ ஆகியோரைப் பற்றி நாம் படிக்கிறோம், அவர்கள் சிலைக்கு முன் பணிய வேண்டும் என்ற ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படியாததற்காக கட்டப்ப்பட்டு சாதாரண சூட்டை விட ஏழு மடங்கு அதிகமாக சூடாக்கப்பட்ட அக்கினி சூளையில் வீசப்பட்டனர். அவர்களை உள்ளே தூக்கி எறிந்த வீரர்களை அக்கினி கொன்று போட்டது. இருப்பினும், இந்த மூவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதற்கு பதிலாக, அக்கினி சூளையின் நடுவில் நான்காவது நபராக உலாவிய தேவபுத்திரனின் சாயலை ராஜா கவனித்தார். ஆம்! கர்த்தர் தன் பிள்ளைகளை கைவிடவில்லை. அவர்களைப் பாதுகாக்க அவர் அங்கு இருந்தார். இன்றும், அதே தேவன் உங்கள் நடுவில் இருக்கிறார். * அவர் உங்களை ஒருபொழுதும் கைவிடமாட்டார், விட்டு விலகமாட்டார்.* அவர் உங்களிடம் அன்புகூர்ந்து, உங்கள் ஐக்கியத்தை விரும்புகிறார்.* உங்கள் வாழ்வில் அவருக்கு முன்னுரிமை அளித்து அவருடைய வழிகாட்டுதலின்படி வாழ முயற்சி செய்யுங்கள்.* அவ்வாறு செய்து, அவரது மகத்துவத்தையும் அன்பான குணத்தையும் உங்கள் சொந்த வாழ்க்கையின் மூலம் உலகிற்கு நிரூபியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வில் நீர் இருப்பதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை சுற்றியுள்ளவர்களுக்கு உமது பிரசன்னத்தை பிரதிபலிக்கும் பரிசுத்தமான வாழ்க்கை வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

