← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தரின் அன்பான இரக்கம்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தரின் அன்பான இரக்கம்.

“வியாழன், 6 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது. சங்கீதம் 26:3 * கர்த்தர் அன்பும் இரக்கமுமானவர்.* தம்முடைய ஒரே குமாரனான இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்தில் அனுப்பினதுமல்லாமல், உங்களையும் என்னையும் மீட்கும் பொருளாக இயேசு கொல்லப்பட்டார். அதன்மூலம் நம்மை அவருடன் ஒப்புரவு ஆகச் செய்தார். இது அவருடைய அன்பின் ஆழத்தை எடுத்துக்காட்டுகிறது.* நீங்கள் கர்த்தரில் அன்பு கூருகிறீர்களா?* அவருடைய அன்பைப் பற்றி நீங்கள் எத்தனை முறை நினைவுக்கூருகிறீர்கள்?* கர்த்தரின் அன்பான கிருபை அவருடைய கண்களுக்கு முன்பாக இருப்பதாக சங்கீதக்காரன் கூறுகிறார். லூக்கா 15 இல் சொல்லப்பட்ட கெட்ட குமாரனின் உவமை, தகப்பனின் மிகப் பெரிய அன்பையும், இரக்கத்தையும் சித்தரிக்கிறது. இளையக்குமாரன், தகப்பனின் ஆஸ்தியில் தனது பங்கை கேட்டு அதை வாங்கிக் கொண்டு தூர தேசத்திற்குப் பிரயாணப்படுகிறான். அங்கு துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி தனது ஆஸ்தியை அழித்துப் போடுகிறான். ஏழ்மையாகி, புத்தி தெளிந்த போது, தனது வீட்டை நினைத்துப் பார்த்து, தனது தந்தை தன்னை கூலிக்காரரில் ஒருவனாக ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் திரும்பி வரத் தீர்மானிக்கிறான். வீட்டை நெருங்கும்போதோ, தூரத்தில் வரும்போதே அவனுடையத் தகப்பன் தனது மகனைக் கவனித்து, மனதுருகி ஓடி அவனைக் கட்டித் தழுவிக் கொள்கிறார். மகனைக் கண்டித்து, நிராகரிப்பதற்குப் பதிலாக, குற்றவாளியான மகனுக்கு மன்னிப்பு அளித்து, குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொள்கிறார். இந்த உவமை நமது பரலோகத் தகப்பனின் மனதுருக்கத்தையும், அன்பையும் பிரதிபலிக்கிறது. * நாம் எவ்வளவு தூரம் வழி தவறி மிகப் பெரிய குற்றங்கள் செய்திருந்தாலும், பரந்த அணைக்கும் கரங்களுடனும், மிகுந்த கிருபையுடனும் அவர் நம் வருகைக்காகக் காத்திருக்கிறார்.* நாம் ஒருபோதும் கர்த்தருடைய வரம்பிற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதையும், உண்மைமையான மனந்திரும்புதலும், மன்னிப்பும் பரலோகத்தில் அளவிட முடியாத மகிழ்ச்சியை கொண்டு வருகிறது என்பதையும் இது நமக்கு நினைப்பூட்டுகிறது.* கர்த்தரின் அன்பை ருசிப்பதிலும், பிரதிபலிப்பதிலும் நேரத்தை செலவிடுங்கள்; அது உங்கள் நோக்கம், யோசனை, செயல் மற்றும் அவருடனான தொடர்பை செழிப்புறச் செய்யும்.* கர்த்தரின் அன்பை நினைவுகூருவது, அவருடன் தினமும் நம்பிக்கையுடன் நடக்க உதவிச் செய்யும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது கிருபைக்கு நன்றி. இதை மனதில் வைத்து எப்போதும் நன்றியுடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 6 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது. சங்கீதம் 26:3 * கர்த்தர் அன்பும் இரக்கமுமானவர்.* தம்முடைய ஒரே குமாரனான இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்தில் அனுப்பினதுமல்லாமல், உங்களையும் என்னையும் மீட்கும் பொருளாக இயேசு கொல்லப்பட்டார். அதன்மூலம் நம்மை அவருடன் ஒப்புரவு ஆகச் செய்தார். இது அவருடைய அன்பின் ஆழத்தை எடுத்துக்காட்டுகிறது.* நீங்கள் கர்த்தரில் அன்பு கூருகிறீர்களா?* அவருடைய அன்பைப் பற்றி நீங்கள் எத்தனை முறை நினைவுக்கூருகிறீர்கள்?* கர்த்தரின் அன்பான கிருபை அவருடைய கண்களுக்கு முன்பாக இருப்பதாக சங்கீதக்காரன் கூறுகிறார். லூக்கா 15 இல் சொல்லப்பட்ட கெட்ட குமாரனின் உவமை, தகப்பனின் மிகப் பெரிய அன்பையும், இரக்கத்தையும் சித்தரிக்கிறது. இளையக்குமாரன், தகப்பனின் ஆஸ்தியில் தனது பங்கை கேட்டு அதை வாங்கிக் கொண்டு தூர தேசத்திற்குப் பிரயாணப்படுகிறான். அங்கு துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி தனது ஆஸ்தியை அழித்துப் போடுகிறான். ஏழ்மையாகி, புத்தி தெளிந்த போது, தனது வீட்டை நினைத்துப் பார்த்து, தனது தந்தை தன்னை கூலிக்காரரில் ஒருவனாக ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் திரும்பி வரத் தீர்மானிக்கிறான். வீட்டை நெருங்கும்போதோ, தூரத்தில் வரும்போதே அவனுடையத் தகப்பன் தனது மகனைக் கவனித்து, மனதுருகி ஓடி அவனைக் கட்டித் தழுவிக் கொள்கிறார். மகனைக் கண்டித்து, நிராகரிப்பதற்குப் பதிலாக, குற்றவாளியான மகனுக்கு மன்னிப்பு அளித்து, குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொள்கிறார். இந்த உவமை நமது பரலோகத் தகப்பனின் மனதுருக்கத்தையும், அன்பையும் பிரதிபலிக்கிறது. * நாம் எவ்வளவு தூரம் வழி தவறி மிகப் பெரிய குற்றங்கள் செய்திருந்தாலும், பரந்த அணைக்கும் கரங்களுடனும், மிகுந்த கிருபையுடனும் அவர் நம் வருகைக்காகக் காத்திருக்கிறார்.* நாம் ஒருபோதும் கர்த்தருடைய வரம்பிற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதையும், உண்மைமையான மனந்திரும்புதலும், மன்னிப்பும் பரலோகத்தில் அளவிட முடியாத மகிழ்ச்சியை கொண்டு வருகிறது என்பதையும் இது நமக்கு நினைப்பூட்டுகிறது.* கர்த்தரின் அன்பை ருசிப்பதிலும், பிரதிபலிப்பதிலும் நேரத்தை செலவிடுங்கள்; அது உங்கள் நோக்கம், யோசனை, செயல் மற்றும் அவருடனான தொடர்பை செழிப்புறச் செய்யும்.* கர்த்தரின் அன்பை நினைவுகூருவது, அவருடன் தினமும் நம்பிக்கையுடன் நடக்க உதவிச் செய்யும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது கிருபைக்கு நன்றி. இதை மனதில் வைத்து எப்போதும் நன்றியுடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.