செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். 1 யோவான் 4:12 * நீங்கள் உங்கள் மீது காட்டும் அதே அன்பை மற்றவர்களுக்கும் காட்டுகிறீர்களா?* பிறர் மீது அன்பு காட்டுவது உங்களுக்குள் இயேசு கிறிஸ்து வாழ்ந்து கொண்டிருப்பதற்கான உறுதியான அறிகுறியாகும்.* இயேசு உங்களுக்குள் வாழ்ந்தால் அவருடைய எல்லையற்ற அன்பை நீங்கள் அனுபவிப்பீர்கள், மேலும் அவருடைய குணத்தை நீங்கள் இயல்பாக வெளிப்படுத்த முடியும்.* பகை மற்றும் சுயநலம் பிறரிடம் அன்புக் காட்டுவதை தொடர்ந்து தடுத்து நிறுத்தி இந்த புனிதமான குணத்தை அடக்க முற்படும். * இதற்காக நீங்கள் பரிசுத்த ஆவியிடம் உதவி கேட்டு உங்கள் மாம்சத்தின் ஆசைகளை எதிர்த்து போராட வேண்டும்.கிறிஸ்துவுடன் சேர்ந்து நாம் கருத்தோடு மாம்சத்தை சிலுவையில் அறைவதன் மூலம், அவருடைய அன்பு நமக்குள் இருந்து பொங்கி வழியும். நம் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் அவருடைய அன்பை வெளிப்படுத்துவது, இயேசு கிறிஸ்துவுக்கு நேராக மக்களை ஈர்க்கும்.* இப்படிப்பட்ட அன்பினால் பண்பட்ட வாழ்க்கையை வாழ்வதன் மூலம், நீங்கள் இயேசுவுக்கு ஒரு வல்லமையாக சேவை செய்து, அவரை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள்.* கர்த்தரின் அன்பு உங்களை நிரப்ப அனுமதியுங்கள், அதனால் நீங்கள் அந்த அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.* இதைச் செய்வதன் மூலம் அவருடைய அன்பு நம்மில் முழுமை அடைகிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அன்பினால் என்னை நிரப்பி, பாரபட்சமின்றி மற்றவர்களை நேசிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள்...
“1 யோவான் 4:12 * நீங்கள் உங்கள் மீது காட்டும் அதே அன்பை மற்றவர்களுக்கும் காட்டுகிறீர்களா?* பிறர் மீது அன்பு காட்டுவது உங்களுக்குள் இயேசு கிறிஸ்து வாழ்ந்து கொண்டிருப்பதற்கான உறுதியான அறிகுறியாகும்.* இயேசு உங்களுக்குள் வாழ்ந்தால் அவருடைய எல்லையற்ற அன்பை நீங்கள் அனுபவிப்பீர்கள், மேலும் அவருடைய குணத்தை நீங்கள் இயல்பாக வெளிப்படுத்த முடியும்.* பகை மற்றும் சுயநலம் பிறரிடம் அன்புக் காட்டுவதை தொடர்ந்து தடுத்து நிறுத்தி இந்த புனிதமான குணத்தை அடக்க முற்படும். * இதற்காக நீங்கள் பரிசுத்த ஆவியிடம் உதவி கேட்டு உங்கள் மாம்சத்தின் ஆசைகளை எதிர்த்து போராட வேண்டும்.*கிறிஸ்துவுடன் சேர்ந்து நாம் கருத்தோடு மாம்சத்தை சிலுவையில் அறைவதன் மூலம், அவருடைய அன்பு நமக்குள் இருந்து பொங்கி வழியும்.* நம் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் அவருடைய அன்பை வெளிப்படுத்துவது, இயேசு கிறிஸ்துவுக்கு நேராக மக்களை ஈர்க்கும்.* இப்படிப்பட்ட அன்பினால் பண்பட்ட வாழ்க்கையை வாழ்வதன் மூலம், நீங்கள் இயேசுவுக்கு ஒரு வல்லமையாக சேவை செய்து, அவரை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள்.* கர்த்தரின் அன்பு உங்களை நிரப்ப அனுமதியுங்கள், அதனால் நீங்கள் அந்த அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.* இதைச் செய்வதன் மூலம் அவருடைய அன்பு நம்மில் முழுமை அடைகிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அன்பினால் என்னை நிரப்பி, பாரபட்சமின்றி மற்றவர்களை நேசிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

