← செய்திகளுக்குத் திரும்பு
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து கொள்ளுங்கள், இந்த வழியில், கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றுவீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து கொள்ளுங்கள், இந்த வழியில்,...

“ர்களைப் பற்றியும் அவர்களின் தேவைகளைப் பற்றியும் கரிசனையோடிருப்பது ஒரு தேவப்பிள்ளையின் மற்றொரு உன்னத குணம். 'கர்த்தர் நம்மைக் கவனித்துக்கொள்கிறார்' என்பது எல்லா மனிதனுக்கும் உறுதியையும் ஆறுதலையும் அளிக்கும் ஒரு கூற்றாகும். ஆம்! கர்த்தராலும் மற்றவர்களாலும் பராமரிக்கப்படுகிறோம் என்ற உறுதி நம் அனைவருக்கும் தேவை. அதுபோல நாமும் மற்றவர்களிடம் அக்கறை காட்ட வேண்டும். ரூத் , நகோமியின் கதையைப் படிக்கும்போது, இருவரும் அவர்கள் மற்றவரின் தேவைகளைப் பற்றி எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதைக் காண்கிறோம். நகோமி தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தபோது, அவள் ரூத்தின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்தாள். எனவே, ரூத் தனது குடும்பத்துடன் சென்று தனது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் மீண்டும் கட்டியெழுப்ப நகோமி அவளுக்கு அறிவுரைக் கூறினாள். ஆனால் மறுபுறம், ரூத் தனது வயதான மாமியாரை கைவிட விரும்பவில்லை. அவளுடன் இருப்பதிலும் அவளை கவனித்துக்கொள்வதிலும் அவள் உறுதியாக இருந்தாள். 1. உங்கள் சகாக்கள், அண்டை வீட்டார் அல்லது குடும்பத்தினரின் தேவைகளுக்கு நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்கள்?2. தேவையில் இருக்கும் மற்றவர்களுக்காக உங்கள் வசதிகளை தியாகம் செய்ய நீங்கள் தயாரா?3. இயேசு அறிவுறுத்தியபடி, மற்றவர்களுக்கு உங்கள் அன்பை வெளிப்படுத்த நீங்கள் கூடுதல் முயற்சி செய்கிறீர்களா? # மற்றவர்களை குறித்து சிந்தனையுடன் இருப்பது தன்னலமற்ற மனநிலையைக் கோருகிறது.# ஒரு நல்ல தலைவனும், தேவனுடைய பிள்ளையும் தங்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் தங்களைச் சுற்றியுள்ளவர்களின் தேவைகளுக்காக கவனத்துடன் இருப்பார்கள்.# நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் மற்றவர் மீது சிந்தனையுடன் இருப்பதைப் பயிற்சி செய்யத் தொடங்குங்கள்.# நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு உள் மாற்றத்தை கவனிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களைக் கவனித்துக் கொள்ளவும், அவர்கள் தேவைகளைப் பற்றி சிந்திக்கவும் எனக்கு உதவிச் செய்யும் ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 25 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, அப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். கலாத்தியர் 6:2 (NIV) மற்றவர்களைப் பற்றியும் அவர்களின் தேவைகளைப் பற்றியும் கரிசனையோடிருப்பது ஒரு தேவப்பிள்ளையின் மற்றொரு உன்னத குணம். ‘கர்த்தர் நம்மைக் கவனித்துக்கொள்கிறார்’ என்பது எல்லா மனிதனுக்கும் உறுதியையும் ஆறுதலையும் அளிக்கும் ஒரு கூற்றாகும். ஆம்! கர்த்தராலும் மற்றவர்களாலும் பராமரிக்கப்படுகிறோம் என்ற உறுதி நம் அனைவருக்கும் தேவை. அதுபோல நாமும் மற்றவர்களிடம் அக்கறை காட்ட வேண்டும். ரூத் , நகோமியின் கதையைப் படிக்கும்போது, இருவரும் அவர்கள் மற்றவரின் தேவைகளைப் பற்றி எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதைக் காண்கிறோம். நகோமி தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தபோது, அவள் ரூத்தின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்தாள். எனவே, ரூத் தனது குடும்பத்துடன் சென்று தனது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் மீண்டும் கட்டியெழுப்ப நகோமி அவளுக்கு அறிவுரைக் கூறினாள். ஆனால் மறுபுறம், ரூத் தனது வயதான மாமியாரை கைவிட விரும்பவில்லை. அவளுடன் இருப்பதிலும் அவளை கவனித்துக்கொள்வதிலும் அவள் உறுதியாக இருந்தாள். 1. உங்கள் சகாக்கள், அண்டை வீட்டார் அல்லது குடும்பத்தினரின் தேவைகளுக்கு நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்கள்?2. தேவையில் இருக்கும் மற்றவர்களுக்காக உங்கள் வசதிகளை தியாகம் செய்ய நீங்கள் தயாரா?3. இயேசு அறிவுறுத்தியபடி, மற்றவர்களுக்கு உங்கள் அன்பை வெளிப்படுத்த நீங்கள் கூடுதல் முயற்சி செய்கிறீர்களா? # மற்றவர்களை குறித்து சிந்தனையுடன் இருப்பது தன்னலமற்ற மனநிலையைக் கோருகிறது.# ஒரு நல்ல தலைவனும், தேவனுடைய பிள்ளையும் தங்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் தங்களைச் சுற்றியுள்ளவர்களின் தேவைகளுக்காக கவனத்துடன் இருப்பார்கள்.# நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் மற்றவர் மீது சிந்தனையுடன் இருப்பதைப் பயிற்சி செய்யத் தொடங்குங்கள்.# நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு உள் மாற்றத்தை கவனிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களைக் கவனித்துக் கொள்ளவும், அவர்கள் தேவைகளைப் பற்றி சிந்திக்கவும் எனக்கு உதவிச் செய்யும் ஆமென்.