புதன், 6 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். எபேசியர் 4:25 பெந்தெகொஸ்தே நாளில் எழுந்த மறுமலர்ச்சிக்குப் பிறகு, விசுவாசிகள் தங்கள் உடைமைகளை விற்று, ஒவ்வொருவரின் அன்றாடத் தேவைகளையும் வழங்குவதற்காக பணத்தை அப்போஸ்தலர்களிடம் கொண்டு வந்தனர். அங்கு அனனியா, சப்பீராள் என்ற தம்பதியர் இருந்தனர். அவர்கள் தங்கள்காணியாட்சியை விற்று, தங்கள் சக விசுவாசிகளைப் போலவே பணத்தைக் கொடுக்க முன் வந்தனர். ஆனால், முழுக் கிரயத்தையும் கொடுப்பதாக பொய் சொல்லி, தங்களுக்கு ஒரு பங்கை வஞ்சித்துத் வைத்துக் கொண்டனர். அப்போஸ்தலனாகிய பேதுரு அவர்களிடம் அதைக்குறித்து கேட்டப்பொழுது, அவர்கள் இருவரும் பொய் சொன்னார்கள். துரதிர்ஷ்டவசமாக, அவர்களின் ஏமாற்றுதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. அவர்களின் பொய்கள் சடிதியாக அவர்களின் உயிரை இழக்கச் செய்தது, இந்தக் கதையானது, நேர்மையின்மை விசுவாசிகளின் சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான கடுமையான எச்சரிக்கையாகும். மற்றவர்களுடனான, குறிப்பாக கர்த்தருடையப் பிள்ளைகளுடனான நமது தொடர்புகளில் நேர்மை மற்றும் உண்மையின் அவசியத்தை இது வலியுறுத்துகிறது, பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களில், குறிப்பாக கர்த்தருக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்கள்?2. நேர்மையின்மை ஒரு சமூகத்திற்குள் அல்லது கர்த்தருடனான தொடர்புக்குள் எவ்வாறு பிரச்சினைகளை கொண்டு வரும் என்பதை சிந்தியுங்கள்.3. இந்தக் கதையின் படி, மற்றவர்களுடனும் கர்த்தருடனும், நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பேசும் பழக்கத்தை நீங்கள் எவ்வாறு வளர்த்துக் கொள்ள முடியும்? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து நான் நேர்மையாக இருக்க எனக்கு உதவிச் செய்யும், மற்றவர்களுக்கு நான் கொடுத்த வார்த்தைகள் அல்லது வாக்குறுதிகளைக் கடைப்பிடிப்பதில் உண்மையாக இருக்க எனக்கு உதவிச் செய்தருளும். ஆமென்.
பொய்யைக் களைந்து, பிறனுடன் மெய்யைப் பேசுங்கள்.
“புதன், 6 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். எபேசியர் 4:25 பெந்தெகொஸ்தே நாளில் எழுந்த மறுமலர்ச்சிக்குப் பிறகு, விசுவாசிகள் தங்கள் உடைமைகளை விற்று, ஒவ்வொருவரின் அன்றாடத் தேவைகளையும் வழங்குவதற்காக பணத்தை அப்போஸ்தலர்களிடம் கொண்டு வந்தனர். அங்கு அனனியா, சப்பீராள் என்ற தம்பதியர் இருந்தனர். அவர்கள் தங்கள்காணியாட்சியை விற்று, தங்கள் சக விசுவாசிகளைப் போலவே பணத்தைக் கொடுக்க முன் வந்தனர். ஆனால், முழுக் கிரயத்தையும் கொடுப்பதாக பொய் சொல்லி, தங்களுக்கு ஒரு பங்கை வஞ்சித்துத் வைத்துக் கொண்டனர். அப்போஸ்தலனாகிய பேதுரு அவர்களிடம் அதைக்குறித்து கேட்டப்பொழுது, அவர்கள் இருவரும் பொய் சொன்னார்கள். துரதிர்ஷ்டவசமாக, அவர்களின் ஏமாற்றுதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. அவர்களின் பொய்கள் சடிதியாக அவர்களின் உயிரை இழக்கச் செய்தது, இந்தக் கதையானது, நேர்மையின்மை விசுவாசிகளின் சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான கடுமையான எச்சரிக்கையாகும். மற்றவர்களுடனான, குறிப்பாக கர்த்தருடையப் பிள்ளைகளுடனான நமது தொடர்புகளில் நேர்மை மற்றும் உண்மையின் அவசியத்தை இது வலியுறுத்துகிறது, பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களில், குறிப்பாக கர்த்தருக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்கள்?2. நேர்மையின்மை ஒரு சமூகத்திற்குள் அல்லது கர்த்தருடனான தொடர்புக்குள் எவ்வாறு பிரச்சினைகளை கொண்டு வரும் என்பதை சிந்தியுங்கள்.3. இந்தக் கதையின் படி, மற்றவர்களுடனும் கர்த்தருடனும், நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பேசும் பழக்கத்தை நீங்கள் எவ்வாறு வளர்த்துக் கொள்ள முடியும்? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து நான் நேர்மையாக இருக்க எனக்கு உதவிச் செய்யும், மற்றவர்களுக்கு நான் கொடுத்த வார்த்தைகள் அல்லது வாக்குறுதிகளைக் கடைப்பிடிப்பதில் உண்மையாக இருக்க எனக்கு உதவிச் செய்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

