← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் இருதயத்தை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ளுங்கள்
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் இருதயத்தை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ளுங்கள்

“ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். நீதிமொழிகள் 4:23 * எல்லாக் காவலோடும் இருதயத்தைக் காத்துக் கொள்வது என்பது வாழ்க்கையில் நாம் வளரவும், கற்றுக்கொள்ளவும், பெரிய காரியங்களை சாதிக்கவும் உதவுகிற ஒரு முக்கியமான குணாதிசயமாகும்.* இதில் உறுதி, விடாமுயற்சி, வேலையில் கவனம் செலுத்துதல், பொறுப்பை நிர்வகித்தல் மற்றும் சவாலான கடினமான நேரங்களிலும் நம்மால் முடிந்ததைச் செய்வது போன்றவையும் அடங்கும். * உங்கள் உணர்ச்சிகளில் உங்கள் இருதயம் முக்கியப் பங்கு வகிக்கிறது, குறிப்பாக வெற்றி, ஏமாற்றம் மற்றும் தோல்வியின் போது இருதயம் எளிதாக உணர்ச்சி வசப்படும்.* எனவே, உங்கள் இருதயத்தை எல்லா காவலோடும் காத்துக்கொள்வது மிகவும் அவசியம். * வேதாகமம் கடினமான சூழ்நிலைகளை சந்தித்த தைரியமான ஆண்களையும் பெண்களையும் குறித்து கூறுகிறது.* உணர்ச்சிகரமான கஷ்டங்களைச் சகித்தபோதிலும், அவர்கள் எல்லாக் காவலோடும் தங்கள் இருதயத்தைக் காத்துக்கொண்டு, கர்த்தர் மீது தங்கள் விசுவாசத்தைக் உறுதிபடுத்திக்கொண்டார்கள். இதற்கு யோசேப்பு ஒரு உதாரணம். அவர் ஆரம்பத்தில் தனது சகோதரர்களாலும் பின்னர் அந்நிய தேசத்தில் வெவ்வேறு மனிதர்களாலும் நினைத்துப் பார்க்க முடியாத துன்பங்களுக்கு ஆளானார். அவரது உத்தமத்தினிமித்தம் அநியாயமாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும், யோசேப்பு தனது விசுவாசத்திலும் உத்தமத்திலும் அசையாதவராக இருந்தார். கர்த்தரோ யோசேப்போடு இருந்து அவரை ஆசீர்வதித்து, இறுதியில் யோசேப்பை எகிப்துக்கு அதிகாரியாக உயர்த்தினார். * நம் இருதயங்களை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்வது என்பது, நம் எண்ணங்கள், ஆசைகள் மற்றும் செயல்கள் யாவும் கர்த்தருடைய வார்த்தைக்கு ஒத்துப்போவதும், அவருடைய வழிகாட்டுதலைத் தேடி, அவருடையப் பலத்தால் சோதனையை எதிர்த்து நிற்பதுமாகும்.* விடாமுயற்சியுடன் இருப்பதன்மூலம், வெற்றியை சுதந்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்து, நம் வாழ்வில் விரும்பிய பலன்களை அடைகிறோம்.* மேலும், கர்த்தரின் பரிபூரணமான ஆசீர்வாதங்களை அனுபவித்து, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அவருடைய மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் வெளிப்படுத்துவோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் இருதயத்தை எல்லாக் காவலோடும் காத்துக்கொள்ளவும், உமது பிரசன்னத்தையும் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். நீதிமொழிகள் 4:23 * எல்லாக் காவலோடும் இருதயத்தைக் காத்துக் கொள்வது என்பது வாழ்க்கையில் நாம் வளரவும், கற்றுக்கொள்ளவும், பெரிய காரியங்களை சாதிக்கவும் உதவுகிற ஒரு முக்கியமான குணாதிசயமாகும்.* இதில் உறுதி, விடாமுயற்சி, வேலையில் கவனம் செலுத்துதல், பொறுப்பை நிர்வகித்தல் மற்றும் சவாலான கடினமான நேரங்களிலும் நம்மால் முடிந்ததைச் செய்வது போன்றவையும் அடங்கும். * உங்கள் உணர்ச்சிகளில் உங்கள் இருதயம் முக்கியப் பங்கு வகிக்கிறது, குறிப்பாக வெற்றி, ஏமாற்றம் மற்றும் தோல்வியின் போது இருதயம் எளிதாக உணர்ச்சி வசப்படும்.* எனவே, உங்கள் இருதயத்தை எல்லா காவலோடும் காத்துக்கொள்வது மிகவும் அவசியம். * வேதாகமம் கடினமான சூழ்நிலைகளை சந்தித்த தைரியமான ஆண்களையும் பெண்களையும் குறித்து கூறுகிறது.* உணர்ச்சிகரமான கஷ்டங்களைச் சகித்தபோதிலும், அவர்கள் எல்லாக் காவலோடும் தங்கள் இருதயத்தைக் காத்துக்கொண்டு, கர்த்தர் மீது தங்கள் விசுவாசத்தைக் உறுதிபடுத்திக்கொண்டார்கள். இதற்கு யோசேப்பு ஒரு உதாரணம். அவர் ஆரம்பத்தில் தனது சகோதரர்களாலும் பின்னர் அந்நிய தேசத்தில் வெவ்வேறு மனிதர்களாலும் நினைத்துப் பார்க்க முடியாத துன்பங்களுக்கு ஆளானார். அவரது உத்தமத்தினிமித்தம் அநியாயமாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும், யோசேப்பு தனது விசுவாசத்திலும் உத்தமத்திலும் அசையாதவராக இருந்தார். கர்த்தரோ யோசேப்போடு இருந்து அவரை ஆசீர்வதித்து, இறுதியில் யோசேப்பை எகிப்துக்கு அதிகாரியாக உயர்த்தினார். * நம் இருதயங்களை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்வது என்பது, நம் எண்ணங்கள், ஆசைகள் மற்றும் செயல்கள் யாவும் கர்த்தருடைய வார்த்தைக்கு ஒத்துப்போவதும், அவருடைய வழிகாட்டுதலைத் தேடி, அவருடையப் பலத்தால் சோதனையை எதிர்த்து நிற்பதுமாகும்.* விடாமுயற்சியுடன் இருப்பதன்மூலம், வெற்றியை சுதந்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்து, நம் வாழ்வில் விரும்பிய பலன்களை அடைகிறோம்.* மேலும், கர்த்தரின் பரிபூரணமான ஆசீர்வாதங்களை அனுபவித்து, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அவருடைய மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் வெளிப்படுத்துவோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் இருதயத்தை எல்லாக் காவலோடும் காத்துக்கொள்ளவும், உமது பிரசன்னத்தையும் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.