வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.நீதிமொழிகள் 4:23 மனிதனுடைய இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. உங்கள் இருதயம் தேவனிடத்தில் செம்மையாய் இருந்தால், உங்கள் வாழ்க்கை பூமியில் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருக்கும். நீங்கள் பிறர்க்கு ஆசீர்வாதமாய் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் அதே சமயத்தில் நீங்கள் உலகத்தால் இழுக்கப்பட்டு விடுவது மிகவும் எளிதானதாக காணப்படுகிறது. தேவ பிள்ளையாக தேவனுடன் நேரத்தைச் செலவிடுவதன் மூலம் உங்கள் இருதயத்தையும் சிந்தையையும் தீமைக்கு விலக்கிப் பாதுகாக்க வேண்டும். தெய்வீக சூழ்நிலையை உங்களை சுற்றிலும் உருவாக்கி, நீதியினின்று உங்களைத் திசைதிருப்பும் சோதனைகளை எதிர்த்திடுங்கள். அப்பொழுது, உங்கள் இருதயத்திலிருந்தும் வாழ்விலிருந்தும் உயிர் கொடுக்கும் வார்த்தைகளையும் கிரியைகளையும் நீங்கள் காண்பீர்கள். தேவனின் அன்பும் உண்மையும் நிறைந்த இருதயம், இயல்பாகவே இரக்கத்தினாலும், மனதுருக்கத்தினாலும், நற்கிரியைகளாலும் நிரம்பி வழியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, துன்மார்க்கத்திற்கு விலக்கி என் இருதயத்தைக் காத்தருளும். நான் பலருக்கு ஆசீர்வாதமாய் இருப்பேனாக. ஆமென்.
எல்லாக் காவலோடும் உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
“வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.நீதிமொழிகள் 4:23 மனிதனுடைய இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. உங்கள் இருதயம் தேவனிடத்தில் செம்மையாய் இருந்தால், உங்கள் வாழ்க்கை பூமியில் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருக்கும். நீங்கள் பிறர்க்கு ஆசீர்வாதமாய் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் அதே சமயத்தில் நீங்கள் உலகத்தால் இழுக்கப்பட்டு விடுவது மிகவும் எளிதானதாக காணப்படுகிறது. தேவ பிள்ளையாக தேவனுடன் நேரத்தைச் செலவிடுவதன் மூலம் உங்கள் இருதயத்தையும் சிந்தையையும் தீமைக்கு விலக்கிப் பாதுகாக்க வேண்டும். தெய்வீக சூழ்நிலையை உங்களை சுற்றிலும் உருவாக்கி, நீதியினின்று உங்களைத் திசைதிருப்பும் சோதனைகளை எதிர்த்திடுங்கள். அப்பொழுது, உங்கள் இருதயத்திலிருந்தும் வாழ்விலிருந்தும் உயிர் கொடுக்கும் வார்த்தைகளையும் கிரியைகளையும் நீங்கள் காண்பீர்கள். தேவனின் அன்பும் உண்மையும் நிறைந்த இருதயம், இயல்பாகவே இரக்கத்தினாலும், மனதுருக்கத்தினாலும், நற்கிரியைகளாலும் நிரம்பி வழியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, துன்மார்க்கத்திற்கு விலக்கி என் இருதயத்தைக் காத்தருளும். நான் பலருக்கு ஆசீர்வாதமாய் இருப்பேனாக. ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

