புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே பிழைத்துச் சுகித்து நீடித்திருக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழிகளெல்லாவற்றிலும் நடக்கக் கடவீர்கள். உபாகமம் 5:33 கீழ்ப்படிதலைப் பற்றிய மிகவும் பிரபலமான வேதாகம கதைகளில் ஒன்று ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் கதை. ஒரு நாள், கர்த்தர் ஆபிரகாமைக் கூப்பிட்டு, “உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” என்றார். உலகில் உள்ள அனைத்தையும் விட ஆபிரகாம் ஈசாக்கை நேசித்ததால் அவர் கர்த்தர் சொன்னதைக் குறித்து மனம் உடைந்துப்போயிருக்கலாம். ஆனால், ஆபிரகாம் கர்த்தரையும் நேசித்ததால், கர்த்தர் தனக்கு எந்தத் தவறும் செய்ய மாட்டார் என்பதை அறிந்திருந்தார். எனவே ஆபிரகாம் ஈசாக்கை அழைத்துக்கொண்டு கர்த்தர் சொன்ன இடத்திற்குப் பயணம் செய்தார். ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினார். இந்த சம்பவம் ஆபிரகாமின் கீழ்ப்படிதலின் அளவைக் காட்டுகிறது. கர்த்தர் ஆபிரகாமின் கீழ்ப்படிதலைக் கண்டு, சரியான நேரத்தில் குறுக்கிட்டு, ஈசாக்கை மரணத்திலிருந்து காப்பாற்றினார். இன்று நாம் காணும் அனைத்து ஜாதிகளுக்கும் தகப்பனாய் கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதித்தார். கர்த்தருடைய வார்த்தைக்கு உங்கள் கீழ்ப்படிதலின் அளவை பகுப்பாய்வு செய்யுங்கள். 1. நீங்கள் கர்த்தருடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்த அல்லது அவருக்குக் கீழ்ப்படியாத நிகழ்வுகளை உங்களால் நினைவுபடுத்த முடியுமா? 2. சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், கர்த்தருக்கு முழுவதுமாய் கீழ்ப்படியும் குணத்தை நீங்கள் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கு கீழ்ப்படிதலுள்ள இருதயத்தைத் தந்தருளும். ஆமென்.
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட...
“ீழ்ப்படிதலைப் பற்றிய மிகவும் பிரபலமான வேதாகம கதைகளில் ஒன்று ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் கதை. ஒரு நாள், கர்த்தர் ஆபிரகாமைக் கூப்பிட்டு, "உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு" என்றார். உலகில் உள்ள அனைத்தையும் விட ஆபிரகாம் ஈசாக்கை நேசித்ததால் அவர் கர்த்தர் சொன்னதைக் குறித்து மனம் உடைந்துப்போயிருக்கலாம். ஆனால், ஆபிரகாம் கர்த்தரையும் நேசித்ததால், கர்த்தர் தனக்கு எந்தத் தவறும் செய்ய மாட்டார் என்பதை அறிந்திருந்தார். எனவே ஆபிரகாம் ஈசாக்கை அழைத்துக்கொண்டு கர்த்தர் சொன்ன இடத்திற்குப் பயணம் செய்தார். ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினார். இந்த சம்பவம் ஆபிரகாமின் கீழ்ப்படிதலின் அளவைக் காட்டுகிறது. கர்த்தர் ஆபிரகாமின் கீழ்ப்படிதலைக் கண்டு, சரியான நேரத்தில் குறுக்கிட்டு, ஈசாக்கை மரணத்திலிருந்து காப்பாற்றினார். இன்று நாம் காணும் அனைத்து ஜாதிகளுக்கும் தகப்பனாய் கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதித்தார். கர்த்தருடைய வார்த்தைக்கு உங்கள் கீழ்ப்படிதலின் அளவை பகுப்பாய்வு செய்யுங்கள். 1. நீங்கள் கர்த்தருடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்த அல்லது அவருக்குக் கீழ்ப்படியாத நிகழ்வுகளை உங்களால் நினைவுபடுத்த முடியுமா? 2. சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், கர்த்தருக்கு முழுவதுமாய் கீழ்ப்படியும் குணத்தை நீங்கள் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கு கீழ்ப்படிதலுள்ள இருதயத்தைத் தந்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

