← செய்திகளுக்குத் திரும்பு
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக.
படத்தைப் பதிவிறக்கு

சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக.

“1 தெசலோனிக்கேயர் 5:23 * "பரிசுத்தப்படுத்துதல்" என்பது பரிசுத்தத்திற்காக குறிப்பிட்ட எதையாவது ஒதுக்கி வைப்பது அல்லது பாவத்திலிருந்து தூய்மை படுத்துவதை குறிக்கிறது.* கர்த்தரின் பிள்ளைகளாகிய நாம், அவர் பரிசுத்தராய் இருப்பது போல் நாமும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும்..* "பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாது" என்று வேதாகமம் கூறுகிறது.* கடந்த கால தவறுகளை நீங்கள் நினைத்து வேதனைப்பட்டு, குற்ற உணர்ச்சியினாலும், மன வேதனையினாலும் உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள்.* அதற்குப் பதிலாக, நீங்கள் இருக்கும் வண்ணமே இயேசுவிடம் வாருங்கள். யோவான் 4 இல் கிணற்றின் அருகே நடந்த பெண்ணின் கதை, நாம் மனம் உடைந்து பாவத்தில் மூழ்கியிருந்தாலும் கூட, கர்த்தர் நம்மை பரிசுத்தப்படுத்தவும் மாற்றவும் முடியும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஒழுக்கக்கேடான வாழ்க்கையில் காணப்பட்ட அந்த பெண், அந்த நாட்களில் தேவனுடையப் ஜனங்களாக கருதப்படாத சமாரியா நாட்டைச் சேர்ந்தவராக இருந்தும் கூட, இயேசு அவளை நியாயந்தீர்க்கவில்லை. மாறாக, அவர் அவளுடைய வாழ்க்கையை மறுரூபப் படுத்துவதற்குரிய உரையாடலை அவளுடன் மேற்கொண்டார். அவளிடம் தன்னை யார் என்று வெளிப்படுத்தினார், அது அவள் வாழ்க்கையை அவரது சாட்சியாக மாற்றியது. அவள் தன் கிராமத்தாரிடம் இயேசுவைப் பற்றிச் சொன்னாள், அவர்களில் பலர் அவரை விசுவாசித்தார்கள். அவள் வாழ்க்கையில் தான் என்ன ஒரு அற்புதமான மாற்றம்! * அதே இயேசு, உங்கள் கடந்த கால மற்றும் நிகழ்கால பாவ அழுக்குகளிலிருந்தும் உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்* அவர் உங்களைப் பரிசுத்தப்படுத்த நீங்கள் அனுமதித்தால், அவர் உங்கள் மூலம் மற்றவர்களைத் தம்முடைய அன்பால் சந்திப்பார். * பிறர் உங்களை விமர்சிக்கும் விமர்சனங்களினாலோ அல்லது உங்களைக் கண்டிக்க முயற்சிச் செய்து உங்களை ஏளனமாக உணரச் செய்வதைக் குறித்தோ நீங்கள் சோர்வடையாதீர்கள்.* அதற்குப் பதிலாக, இயேசுவை நம்பி, உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைத்து, உங்கள் வாழ்க்கையை மாற்றும் அவருடைய பரிசுத்தமாக்குதலின் வல்லமையை அனுபவியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய எல்லா பாவங்களிலிருந்தும் என்னைப் பரிசுத்தப்படுத்தி, இறுதிவரை பரிசுத்தமாக வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 10 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. 1 தெசலோனிக்கேயர் 5:23 * “பரிசுத்தப்படுத்துதல்” என்பது பரிசுத்தத்திற்காக குறிப்பிட்ட எதையாவது ஒதுக்கி வைப்பது அல்லது பாவத்திலிருந்து தூய்மை படுத்துவதை குறிக்கிறது.* கர்த்தரின் பிள்ளைகளாகிய நாம், அவர் பரிசுத்தராய் இருப்பது போல் நாமும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும்..* “பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாது” என்று வேதாகமம் கூறுகிறது.* கடந்த கால தவறுகளை நீங்கள் நினைத்து வேதனைப்பட்டு, குற்ற உணர்ச்சியினாலும், மன வேதனையினாலும் உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள்.* அதற்குப் பதிலாக, நீங்கள் இருக்கும் வண்ணமே இயேசுவிடம் வாருங்கள். யோவான் 4 இல் கிணற்றின் அருகே நடந்த பெண்ணின் கதை, நாம் மனம் உடைந்து பாவத்தில் மூழ்கியிருந்தாலும் கூட, கர்த்தர் நம்மை பரிசுத்தப்படுத்தவும் மாற்றவும் முடியும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஒழுக்கக்கேடான வாழ்க்கையில் காணப்பட்ட அந்த பெண், அந்த நாட்களில் தேவனுடையப் ஜனங்களாக கருதப்படாத சமாரியா நாட்டைச் சேர்ந்தவராக இருந்தும் கூட, இயேசு அவளை நியாயந்தீர்க்கவில்லை. மாறாக, அவர் அவளுடைய வாழ்க்கையை மறுரூபப் படுத்துவதற்குரிய உரையாடலை அவளுடன் மேற்கொண்டார். அவளிடம் தன்னை யார் என்று வெளிப்படுத்தினார், அது அவள் வாழ்க்கையை அவரது சாட்சியாக மாற்றியது. அவள் தன் கிராமத்தாரிடம் இயேசுவைப் பற்றிச் சொன்னாள், அவர்களில் பலர் அவரை விசுவாசித்தார்கள். அவள் வாழ்க்கையில் தான் என்ன ஒரு அற்புதமான மாற்றம்! * அதே இயேசு, உங்கள் கடந்த கால மற்றும் நிகழ்கால பாவ அழுக்குகளிலிருந்தும் உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்* அவர் உங்களைப் பரிசுத்தப்படுத்த நீங்கள் அனுமதித்தால், அவர் உங்கள் மூலம் மற்றவர்களைத் தம்முடைய அன்பால் சந்திப்பார். * பிறர் உங்களை விமர்சிக்கும் விமர்சனங்களினாலோ அல்லது உங்களைக் கண்டிக்க முயற்சிச் செய்து உங்களை ஏளனமாக உணரச் செய்வதைக் குறித்தோ நீங்கள் சோர்வடையாதீர்கள்.* அதற்குப் பதிலாக, இயேசுவை நம்பி, உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைத்து, உங்கள் வாழ்க்கையை மாற்றும் அவருடைய பரிசுத்தமாக்குதலின் வல்லமையை அனுபவியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய எல்லா பாவங்களிலிருந்தும் என்னைப் பரிசுத்தப்படுத்தி, இறுதிவரை பரிசுத்தமாக வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.