வியாழன், 28 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். வெளிபடுத்தல் 3:20 ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான். அவன் மிகவும் ஊழல் நிறைந்த மனிதனாகவும் இருந்தான். எரிகோ நகர் மக்கள் அவனை வெறுத்தனர். ஒரு நாள், இயேசு எரிகோவுக்கு வந்தார். சகேயு இயேசுவைப் பார்க்க விரும்பினான், அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: “சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும்” என்றார். சகேயு அதிர்ச்சியடைந்தான். இயேசு தன்னுடன் தங்க விரும்புவார் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான். சகேயுவின் இருதயம் மாறியது, அவன் இயேசுவிடம், “ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்” என்றான். ஆம்! சகேயு தனது இருதயத்திலும், ஆவியிலும் கர்த்தரின் அழைப்புக்கு செவிக்கொடுக்கும் அளவுக்கு உணர்திறன் உடையவனாக இருந்தான். அவன் உடனடியாக இயேசுவைத் தம் வாழ்வில் ஏற்றுக்கொண்டு, கர்த்தரைப் பிரியப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுத்தான். உங்கள் கடந்த காலத்தை நினைத்துப் பாருங்கள், கர்த்தர் உங்கள் இருதயத்தைத் தட்டிய நிகழ்வுகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? 1. நீங்கள் அவருடைய அழைப்பிற்கு பதிலளித்தீர்களா அல்லது அவரை நிராகரித்தீர்களா, அதற்குப் பிறகு நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? 2. கர்த்தரின் அழைப்பு மற்றும் அவரது குரலுக்கு நீங்கள் எவ்வாறு அதிக உணர்திறன் உடையவராக வளர முடியும்? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து, எல்லா வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும் உமது சத்தத்துக்கு செவிக்கொடுக்கும் நிலையில் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் உங்கள் இருதயத்தைத் தட்டும்போது, அவரை...
“ள் அவருடைய அழைப்பிற்கு பதிலளித்தீர்களா அல்லது அவரை நிராகரித்தீர்களா, அதற்குப் பிறகு நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? 2. கர்த்தரின் அழைப்பு மற்றும் அவரது குரலுக்கு நீங்கள் எவ்வாறு அதிக உணர்திறன் உடையவராக வளர முடியும்? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து, எல்லா வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும் உமது சத்தத்துக்கு செவிக்கொடுக்கும் நிலையில் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

