← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் விசுவாசித்தபடியே உங்களுக்கு ஆகக்கடவது..
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் விசுவாசித்தபடியே உங்களுக்கு ஆகக்கடவது.

“செவ்வாய், 11 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது. மத்தேயு 8:13 தன் வேலைக்காரனைக் குணமாக்கும்படி தம்மிடம் வந்த ரோம நூற்றுக்கு அதிபதியிடம் இயேசு இந்த வார்த்தைகளைச் சொன்னார். நூற்றுக்கு அதிபதி யூதன் அல்ல. ஆனாலும் தன்னுடைய தகுதியற்ற தன்மையை ஒப்புக்கொண்டவராக அவர் இயேசுவிடம் வந்து தனது வேலைக்காரனைக் குணப்படுத்துமாறு வேண்டிக் கொள்கிறார். இயேசு அவரது வார்த்தையால் தன் வேலைக்காரனை குணப்படுத்த முடியும் என்ற தனது நம்பிக்கையை கூறி, தனது மிகப்பெரிய விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார். நூற்றுக்கு அதிபதியின் விசுவாசத்தால் இயேசு ஆச்சரியப்பட்டு, அவன் வீட்டிற்குச் செல்லாமலேயே அவன் வேலைக்காரனை உடனடியாகக் குணமாக்கினார். * இந்தக் கதையின் மூலம் உங்கள் விசுவாச வாழ்க்கையை ஆராய்ந்துப் பாருங்கள்.* இயேசுவின் மீது உங்களுக்கு எவ்வளவு விசுவாசம் இருக்கிறது?* உங்கள் இருதயத்தின் விசுவாசம், உங்கள் எண்ணங்கள், நீங்கள் அறிக்கை செய்யும் வார்த்தைகள், மற்றும் உங்கள் செயல்கள் ஆகியவைகள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகிறதா?* விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாய் இருப்பது கூடாதகாரியம் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. * விசுவாசம் என்பது இயேசுவின் திட்டங்களும் நோக்கங்களும் பரிபூரணமானவை என்பதை அறிந்து, அவர்மீது உறுதியான நம்பிக்கையும், விசுவாசமும் வைப்பது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.* இது உங்கள் விருப்பத்தை அவருடைய சித்தத்துடன் இணைத்து, அவருடைய தெய்வீக ஞானத்தையும். அவருடைய நேரத்தையும் சார்ந்திருப்பதாகும்.* நீங்கள் அவரையும், அவருடைய வாக்குத்தத்தங்களையும் நம்பும்போது, அவருடைய கிருபையையும், செல்வங்களையும், வழிகாட்டுதலையும் அனுபவிக்க முடியும்.* நூற்றுக்கு அதிபதியின் விசுவாசம் அவனுடைய வேலைக்காரனை சுகமாக்கியது போல், உங்களுடைய விசுவாசம் மற்றவர்களின் வாழ்விலும் கர்த்தருடைய நோக்கங்களை நிறைவேற்றி ஆசீர்வாதங்களை கொண்டு வர முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மில் என் விசுவாசத்தில் உறுதியாக இருக்கவும், என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் உமது ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 11 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது. மத்தேயு 8:13 தன் வேலைக்காரனைக் குணமாக்கும்படி தம்மிடம் வந்த ரோம நூற்றுக்கு அதிபதியிடம் இயேசு இந்த வார்த்தைகளைச் சொன்னார். நூற்றுக்கு அதிபதி யூதன் அல்ல. ஆனாலும் தன்னுடைய தகுதியற்ற தன்மையை ஒப்புக்கொண்டவராக அவர் இயேசுவிடம் வந்து தனது வேலைக்காரனைக் குணப்படுத்துமாறு வேண்டிக் கொள்கிறார். இயேசு அவரது வார்த்தையால் தன் வேலைக்காரனை குணப்படுத்த முடியும் என்ற தனது நம்பிக்கையை கூறி, தனது மிகப்பெரிய விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார். நூற்றுக்கு அதிபதியின் விசுவாசத்தால் இயேசு ஆச்சரியப்பட்டு, அவன் வீட்டிற்குச் செல்லாமலேயே அவன் வேலைக்காரனை உடனடியாகக் குணமாக்கினார். * இந்தக் கதையின் மூலம் உங்கள் விசுவாச வாழ்க்கையை ஆராய்ந்துப் பாருங்கள்.* இயேசுவின் மீது உங்களுக்கு எவ்வளவு விசுவாசம் இருக்கிறது?* உங்கள் இருதயத்தின் விசுவாசம், உங்கள் எண்ணங்கள், நீங்கள் அறிக்கை செய்யும் வார்த்தைகள், மற்றும் உங்கள் செயல்கள் ஆகியவைகள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகிறதா?* விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாய் இருப்பது கூடாதகாரியம் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. * விசுவாசம் என்பது இயேசுவின் திட்டங்களும் நோக்கங்களும் பரிபூரணமானவை என்பதை அறிந்து, அவர்மீது உறுதியான நம்பிக்கையும், விசுவாசமும் வைப்பது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.* இது உங்கள் விருப்பத்தை அவருடைய சித்தத்துடன் இணைத்து, அவருடைய தெய்வீக ஞானத்தையும். அவருடைய நேரத்தையும் சார்ந்திருப்பதாகும்.* நீங்கள் அவரையும், அவருடைய வாக்குத்தத்தங்களையும் நம்பும்போது, அவருடைய கிருபையையும், செல்வங்களையும், வழிகாட்டுதலையும் அனுபவிக்க முடியும்.* நூற்றுக்கு அதிபதியின் விசுவாசம் அவனுடைய வேலைக்காரனை சுகமாக்கியது போல், உங்களுடைய விசுவாசம் மற்றவர்களின் வாழ்விலும் கர்த்தருடைய நோக்கங்களை நிறைவேற்றி ஆசீர்வாதங்களை கொண்டு வர முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மில் என் விசுவாசத்தில் உறுதியாக இருக்கவும், என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் உமது ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.