← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் அறியாத பெரிய காரியங்களை கர்த்தர் உங்களுக்கு அறிவிப்பார்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் அறியாத பெரிய காரியங்களை கர்த்தர் உங்களுக்கு அறிவிப்பார்.

“செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். எரேமியா 33:3 வேதாகமத்தின்படி, கர்த்தர் தம்முடைய உண்மையுள்ள சீடர்களுக்கு எதையும் மறைத்து வைப்பதில்லை. அவர் தனது பிள்ளைகளுடன் தொடர்புகொள்வதில் மகிழ்ச்சியடைகிறார், அவர் உங்களுடன் பேச ஆவலாயிருக்கிறார். கர்த்தருடைய சந்நிதியில் இருக்க நேரம் ஒதுக்கி இருக்கிறீர்களா?அவருடனான உங்கள் தொடர்புகளில் நீங்கள் வெளிப்படையாக இருக்கிறீர்களா? உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டு, எப்படி நடந்துகொள்வது என்பது குறித்த நம்பகமான வழிகாட்டுதலைத் தேடுகிறீர்களானால், உங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறுவதற்குப் பதிலாக, இயேசுவின் முன்னிலையில் அமர்ந்து, அவருடன் அமைதியாகச் சிறிது நேரம் செலவிடுங்கள். தைரியமாக அவரிடம் வழிகாட்டுதலைக் கேளுங்கள், அவர் உங்களுக்கு குறிப்பிடத்தக்க இரகசியங்களைத் தெளிவாக வெளிப்படுத்துவார். உங்கள் எதிர்காலத்திற்காக அற்புதமான, உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட மற்றும் பெரிதான விஷயங்களை கர்த்தர் திட்டமிட்டுள்ளார். இருப்பினும், உங்கள் மனதிலும் இருதயத்திலும் குழப்பத்தைத் தவிர்க்க நீங்கள் அவருடைய வழிகாட்டுதலை நாட வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் அவருடைய பிள்ளை, அவர் உங்களுக்காக அற்புதமான விஷயங்களைச் செய்ய ஆர்வமாக இருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்காக வைத்திருக்கும் திட்டங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். எரேமியா 33:3 வேதாகமத்தின்படி, கர்த்தர் தம்முடைய உண்மையுள்ள சீடர்களுக்கு எதையும் மறைத்து வைப்பதில்லை. அவர் தனது பிள்ளைகளுடன் தொடர்புகொள்வதில் மகிழ்ச்சியடைகிறார், அவர் உங்களுடன் பேச ஆவலாயிருக்கிறார். கர்த்தருடைய சந்நிதியில் இருக்க நேரம் ஒதுக்கி இருக்கிறீர்களா?அவருடனான உங்கள் தொடர்புகளில் நீங்கள் வெளிப்படையாக இருக்கிறீர்களா? உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டு, எப்படி நடந்துகொள்வது என்பது குறித்த நம்பகமான வழிகாட்டுதலைத் தேடுகிறீர்களானால், உங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறுவதற்குப் பதிலாக, இயேசுவின் முன்னிலையில் அமர்ந்து, அவருடன் அமைதியாகச் சிறிது நேரம் செலவிடுங்கள். தைரியமாக அவரிடம் வழிகாட்டுதலைக் கேளுங்கள், அவர் உங்களுக்கு குறிப்பிடத்தக்க இரகசியங்களைத் தெளிவாக வெளிப்படுத்துவார். உங்கள் எதிர்காலத்திற்காக அற்புதமான, உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட மற்றும் பெரிதான விஷயங்களை கர்த்தர் திட்டமிட்டுள்ளார். இருப்பினும், உங்கள் மனதிலும் இருதயத்திலும் குழப்பத்தைத் தவிர்க்க நீங்கள் அவருடைய வழிகாட்டுதலை நாட வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் அவருடைய பிள்ளை, அவர் உங்களுக்காக அற்புதமான விஷயங்களைச் செய்ய ஆர்வமாக இருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்காக வைத்திருக்கும் திட்டங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.