← செய்திகளுக்குத் திரும்பு
ஆவியிலே அனலாயிருங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

ஆவியிலே அனலாயிருங்கள்.

“புதன், 12 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள். ரோமர் 12:11 * "அனலாயிருங்கள்" என்ற சொல் ஒருவரின் ஆவியில் ஒரு மும்முரமான ஆர்வத்தைக் காட்டுவதையோ அல்லது ஏதாவது மதச் சம்பந்தமான காரியங்களில் குறிப்பான ஒரு அர்ப்பணிப்பைக் கொண்டிருப்பதையோக் குறிக்கிறது.* இந்த வேதபகுதியின் ஆக்கியோன் நாம் உற்சாகமான ஆவியோடு இருக்க வேண்டும் என்று ஊக்குவிக்கிறார்.* நீங்கள் பிரச்சனைகள் அல்லது ஏமாற்றங்களை சந்திக்கும் போது, உற்சாகமாக இருப்பது எளிதல்ல என்பது உண்மைதான்.* இருப்பினும், ஏமாற்றங்கள் உங்கள் மனதை மேற்கொள்ள அனுமதித்தால், அது உங்களை ஆழ்ந்த மனச்சோர்வுக்கு இழுத்துச் செல்லும்.* பிசாசு உங்களை அசைக்க மற்றும் பலவீனப்படுத்த இதுபோன்ற வாய்ப்புகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறான்.* ஆனால் பலவீனமான தருணங்களில் உங்களுக்கு உதவிச் செய்ய பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் தயாராக இருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல், ஏராளமான பின்னடைவுகளைச் சந்தித்த போதிலும், தன் ஆவியில் உற்சாகத்தைத் தக்கவைத்துக் கொண்ட ஒரு முன்மாதிரியாகக் காணப்படுகிறார். அவர் துன்பங்கள், உடல் ரீதியான தாக்குதல்கள், பொய்யான குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை அனுபவித்தார், மேலும் பல்வேறு அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார். ஆயினும்கூட, அவர் இயேசுவின் மீது கவனம் செலுத்துவதில் உறுதியாக இருந்து தனது வாழ்க்கையை வெற்றியுடன் முடித்தார், அவர் தனது ஓட்டத்தை முடித்துவிட்டதாகவும், அவருடைய பரலோக வெகுமதிக்காக காத்திருப்பதாகவும் நம்பிக்கையுடன் கூறினார். * உங்கள் வாழ்க்கைக்கு கர்த்தர் கொடுத்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் நீங்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள்?.* கஷ்டங்கள் மற்றும் தோல்விகள் காரணமாக உங்கள் நம்பிக்கையை விட்டு விலகுவதைப் பற்றி சிந்திக்கிறீர்களா?* மனம் தளர்ந்து விடாதேயுங்கள்.* அதற்குப் பதிலாக, எப்பொழுதும் இயேசுவிடம் வந்து, உங்கள் துக்கங்களை அவர் முன் ஊற்றி விடுங்கள்.* அவரைச் சார்ந்து, அவருடைய தயவையும் இரக்கத்தையும் நாடுங்கள்.* அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்.* வாழ்க்கை இப்பொழுது தோல்வியாகத் தோன்றினாலும், நீங்கள் இயேசுவுக்கு உண்மையாக இருந்தால், நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வழிகளைப் பின்பற்றுவதிலும், என் வாழ்க்கைக்கான உமது நோக்கத்தை நிறைவேற்றுவதிலும் உற்சாகமாய் இருக்க என் ஆவியைப் பலப்படுத்தும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 12 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள். ரோமர் 12:11 * “அனலாயிருங்கள்” என்ற சொல் ஒருவரின் ஆவியில் ஒரு மும்முரமான ஆர்வத்தைக் காட்டுவதையோ அல்லது ஏதாவது மதச் சம்பந்தமான காரியங்களில் குறிப்பான ஒரு அர்ப்பணிப்பைக் கொண்டிருப்பதையோக் குறிக்கிறது.* இந்த வேதபகுதியின் ஆக்கியோன் நாம் உற்சாகமான ஆவியோடு இருக்க வேண்டும் என்று ஊக்குவிக்கிறார்.* நீங்கள் பிரச்சனைகள் அல்லது ஏமாற்றங்களை சந்திக்கும் போது, உற்சாகமாக இருப்பது எளிதல்ல என்பது உண்மைதான்.* இருப்பினும், ஏமாற்றங்கள் உங்கள் மனதை மேற்கொள்ள அனுமதித்தால், அது உங்களை ஆழ்ந்த மனச்சோர்வுக்கு இழுத்துச் செல்லும்.* பிசாசு உங்களை அசைக்க மற்றும் பலவீனப்படுத்த இதுபோன்ற வாய்ப்புகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறான்.* ஆனால் பலவீனமான தருணங்களில் உங்களுக்கு உதவிச் செய்ய பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் தயாராக இருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல், ஏராளமான பின்னடைவுகளைச் சந்தித்த போதிலும், தன் ஆவியில் உற்சாகத்தைத் தக்கவைத்துக் கொண்ட ஒரு முன்மாதிரியாகக் காணப்படுகிறார். அவர் துன்பங்கள், உடல் ரீதியான தாக்குதல்கள், பொய்யான குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை அனுபவித்தார், மேலும் பல்வேறு அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார். ஆயினும்கூட, அவர் இயேசுவின் மீது கவனம் செலுத்துவதில் உறுதியாக இருந்து தனது வாழ்க்கையை வெற்றியுடன் முடித்தார், அவர் தனது ஓட்டத்தை முடித்துவிட்டதாகவும், அவருடைய பரலோக வெகுமதிக்காக காத்திருப்பதாகவும் நம்பிக்கையுடன் கூறினார். * உங்கள் வாழ்க்கைக்கு கர்த்தர் கொடுத்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் நீங்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள்?.* கஷ்டங்கள் மற்றும் தோல்விகள் காரணமாக உங்கள் நம்பிக்கையை விட்டு விலகுவதைப் பற்றி சிந்திக்கிறீர்களா?* மனம் தளர்ந்து விடாதேயுங்கள்.* அதற்குப் பதிலாக, எப்பொழுதும் இயேசுவிடம் வந்து, உங்கள் துக்கங்களை அவர் முன் ஊற்றி விடுங்கள்.* அவரைச் சார்ந்து, அவருடைய தயவையும் இரக்கத்தையும் நாடுங்கள்.* அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்.* வாழ்க்கை இப்பொழுது தோல்வியாகத் தோன்றினாலும், நீங்கள் இயேசுவுக்கு உண்மையாக இருந்தால், நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வழிகளைப் பின்பற்றுவதிலும், என் வாழ்க்கைக்கான உமது நோக்கத்தை நிறைவேற்றுவதிலும் உற்சாகமாய் இருக்க என் ஆவியைப் பலப்படுத்தும். ஆமென்.