ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை.லேவியராகமம் 26:11 பரிசுத்த ஆவியினால் தேவன் உங்களுக்குள் வாழ்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆனபடியால், உங்கள் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள நீங்கள் போராட வேண்டும். தேவன் பாவிகளை நேசிக்கிறார், ஆனால் பாவத்தை வெறுக்கிறார். உங்கள் கடந்த காலத்தை அறிந்திருந்தாலும், அவர் இன்னும் உங்களை நேசித்து, உங்களை சிறந்ததோர் நபராய் வடிவமைக்கிறார். அவருடைய அன்பில் நம்பிக்கை வைத்து அவருடைய ஞானத்தைத் தேடுங்கள், உங்கள் ஒவ்வொரு அடியையும் அவர் வழிநடத்தும்படி அனுமதியுங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்கு உங்கள் வாழ்க்கையை ஒப்படைப்பதன் மூலம், அவர் வாக்குத்தத்தம்பண்ணின செழிப்பான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். மேலும் அது நோக்கம், மகிழ்ச்சி, நித்தியத்துவம் நிறைந்ததாயிருக்கும்.. இதை அற்பமாய் எடுத்துக்கொள்ளாதீர்கள். தேவனின் மகிமைக்காகப் பரிசுத்தமும் வெற்றியுமுள்ள வாழ்க்கை வாழ்ந்து முன்னேற ஆர்வமாயிருங்கள். மற்றவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை அன்புடன் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி செலுத்துகிறேன். தயவுகூர்ந்து உமக்குப் பிரியமான வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.
தேவன் உங்கள் நடுவில் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பார், அவர் ஆத்துமா...
“ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை.லேவியராகமம் 26:11 பரிசுத்த ஆவியினால் தேவன் உங்களுக்குள் வாழ்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆனபடியால், உங்கள் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள நீங்கள் போராட வேண்டும். தேவன் பாவிகளை நேசிக்கிறார், ஆனால் பாவத்தை வெறுக்கிறார். உங்கள் கடந்த காலத்தை அறிந்திருந்தாலும், அவர் இன்னும் உங்களை நேசித்து, உங்களை சிறந்ததோர் நபராய் வடிவமைக்கிறார். அவருடைய அன்பில் நம்பிக்கை வைத்து அவருடைய ஞானத்தைத் தேடுங்கள், உங்கள் ஒவ்வொரு அடியையும் அவர் வழிநடத்தும்படி அனுமதியுங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்கு உங்கள் வாழ்க்கையை ஒப்படைப்பதன் மூலம், அவர் வாக்குத்தத்தம்பண்ணின செழிப்பான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். மேலும் அது நோக்கம், மகிழ்ச்சி, நித்தியத்துவம் நிறைந்ததாயிருக்கும்.. இதை அற்பமாய் எடுத்துக்கொள்ளாதீர்கள். தேவனின் மகிமைக்காகப் பரிசுத்தமும் வெற்றியுமுள்ள வாழ்க்கை வாழ்ந்து முன்னேற ஆர்வமாயிருங்கள். மற்றவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை அன்புடன் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி செலுத்துகிறேன். தயவுகூர்ந்து உமக்குப் பிரியமான வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

