← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார், நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார், நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு...

“புதன், 4 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது. சகரியா 8: 13 * நீங்கள் இதுவரை வாழ்ந்து வரும் கேவலமான வாழ்க்கையால் உங்களை நீங்களே திட்டிக் கொள்கிறீர்களா?* உங்கள் கடந்த காலத்தைப் பற்றிய வெட்கத்தால், இன்று மற்றவர்களை எதிர்கொள்ள சிரமப்படுகிறீர்களா? * உங்கள் கடந்த காலம் எவ்வளவு மோசமானதாக இருந்திருந்தாலும், உங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இயேசுவால் மறுரூபமாக்க முடியும்.* அவர் உங்கள் எண்ணங்களையும், வழிகளையும் புதுப்பித்து நீங்கள் இழந்த கண்ணியத்தை மீட்டெடுக்க முடியும். * இயேசுவை நம்பி, நீங்கள் இருக்கும் வண்ணமாகவே அவரிடம் வாருங்கள்.* உங்கள் தவறுகளை ஒத்துக்கொண்டு, மன்னிப்பு கேளுங்கள்.* உங்கள் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்படைத்து அவருடைய தெய்வீக நற்பண்புகளைப் பின்பற்றுங்கள். * கர்த்தர் உங்களை தண்டனையிலிருந்துக் காப்பாற்றி மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது சித்தத்தின்படி என் வாழ்க்கையை மாற்றி, மற்றவர்களுக்கு என்னை ஆசீர்வாதமாக வைத்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 4 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது. சகரியா 8: 13 * நீங்கள் இதுவரை வாழ்ந்து வரும் கேவலமான வாழ்க்கையால் உங்களை நீங்களே திட்டிக் கொள்கிறீர்களா?* உங்கள் கடந்த காலத்தைப் பற்றிய வெட்கத்தால், இன்று மற்றவர்களை எதிர்கொள்ள சிரமப்படுகிறீர்களா? * உங்கள் கடந்த காலம் எவ்வளவு மோசமானதாக இருந்திருந்தாலும், உங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இயேசுவால் மறுரூபமாக்க முடியும்.* அவர் உங்கள் எண்ணங்களையும், வழிகளையும் புதுப்பித்து நீங்கள் இழந்த கண்ணியத்தை மீட்டெடுக்க முடியும். * இயேசுவை நம்பி, நீங்கள் இருக்கும் வண்ணமாகவே அவரிடம் வாருங்கள்.* உங்கள் தவறுகளை ஒத்துக்கொண்டு, மன்னிப்பு கேளுங்கள்.* உங்கள் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்படைத்து அவருடைய தெய்வீக நற்பண்புகளைப் பின்பற்றுங்கள். * கர்த்தர் உங்களை தண்டனையிலிருந்துக் காப்பாற்றி மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது சித்தத்தின்படி என் வாழ்க்கையை மாற்றி, மற்றவர்களுக்கு என்னை ஆசீர்வாதமாக வைத்தருளும். ஆமென்.