← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்களுக்குப் பலனுள்ளதோர் வாழ்வைத் தருவார்.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்களுக்குப் பலனுள்ளதோர் வாழ்வைத் தருவார்.

“சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவன் தனிமையில் வாழும் ஜனங்களுக்கு வீட்டைக் கொடுக்கிறார். தேவன் அவரது ஜனங்களைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறார். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். சங்கீதம் 68:6 (TERV) நிறைவான நல்ல வாழ்வை வாழவிடாமல் தடுத்திட்ட பழைய பழக்கங்களோடு நீங்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் தனித் திறன்கள், திறமைகள், நேரம், செல்வங்கள் மற்றும் பிற ஆசீர்வாதங்களை அவைகளின் முழுத் திறனுக்கும் பயன்படுத்துகிறீர்களா? உங்கள் உற்பத்தித்திறன், செயல்திறன் அல்லது சமாதானத்துக்குத் தடையாயிருக்கும் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள், மக்கள் அல்லது சூழ்நிலைகள் ஏதேனும் உள்ளதா? உங்கள் வாழ்க்கைக்குத் தேவன் ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார். ஜெபித்து உங்கள் வாழ்க்கையில் தேவ வழிகாட்டுதலைத் தேட நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் நீங்கள் மிகுந்த செழிப்பாயும், திறமையுமாய் மாற உதவி செய்யுமாறு கர்த்தரிடம் கேளுங்கள். நீங்கள் உங்களை முழுவதுமாய் அவரிடம் ஒப்படைத்தால், அவர் உங்களை எல்லாக் கட்டுகளிலிருந்தும், அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவித்து, அவருக்குப் பலனுள்ள பாத்திரமாய் உங்களை மாற்றுவார். அவர் உங்களைத் தமக்குள்ளாகப் புதுப்பித்து, இழந்த மகிமையைத் திரும்பத்தருவார். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுச் செழித்திருப்பீர்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வாழ்வில் மிகுந்த பலன்கொடுக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவன் தனிமையில் வாழும் ஜனங்களுக்கு வீட்டைக் கொடுக்கிறார். தேவன் அவரது ஜனங்களைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறார். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். சங்கீதம் 68:6 (TERV) நிறைவான நல்ல வாழ்வை வாழவிடாமல் தடுத்திட்ட பழைய பழக்கங்களோடு நீங்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் தனித் திறன்கள், திறமைகள், நேரம், செல்வங்கள் மற்றும் பிற ஆசீர்வாதங்களை அவைகளின் முழுத் திறனுக்கும் பயன்படுத்துகிறீர்களா? உங்கள் உற்பத்தித்திறன், செயல்திறன் அல்லது சமாதானத்துக்குத் தடையாயிருக்கும் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள், மக்கள் அல்லது சூழ்நிலைகள் ஏதேனும் உள்ளதா? உங்கள் வாழ்க்கைக்குத் தேவன் ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார். ஜெபித்து உங்கள் வாழ்க்கையில் தேவ வழிகாட்டுதலைத் தேட நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் நீங்கள் மிகுந்த செழிப்பாயும், திறமையுமாய் மாற உதவி செய்யுமாறு கர்த்தரிடம் கேளுங்கள். நீங்கள் உங்களை முழுவதுமாய் அவரிடம் ஒப்படைத்தால், அவர் உங்களை எல்லாக் கட்டுகளிலிருந்தும், அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவித்து, அவருக்குப் பலனுள்ள பாத்திரமாய் உங்களை மாற்றுவார். அவர் உங்களைத் தமக்குள்ளாகப் புதுப்பித்து, இழந்த மகிமையைத் திரும்பத்தருவார். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுச் செழித்திருப்பீர்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வாழ்வில் மிகுந்த பலன்கொடுக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.