← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்களுக்குப் புதுப்பெலனைத் தருவார்.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்களுக்குப் புதுப்பெலனைத் தருவார்.

“வியாழன், 25 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். ஏசாயா 40:31 வேகமானதும் போட்டி நிறைந்ததுமான இவ்வுலகில், தேய்ந்து போனதாகவும், முடங்கிவிட்டதாகவும் உணருவது எளிது. ஆனால் காரியங்கள் எவ்வளவு கடினமானதாய் இருந்தாலும், நம்முடைய வேலைகளை செய்வதற்கு, நம்முடைய மனம் மற்றும் உடல் நலனுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமாகும். நீங்கள் முன்னேறிச் செல்லச் சிரமப்படுகிறீர்கள் என்றால், வல்லமையின் ஆதாரமான தேவனிடம் திரும்புங்கள். உங்களுக்காக நேரமெடுத்து, அமைதியும் நிசப்தமுமான இடத்தில் தேவனுடன் இருக்கச் சற்ற நேரத்தை பிரத்யேகமாய் ஒதுக்குங்கள். சுறுசுறுப்பாய் எதையும் செய்து முடிக்காவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் இருதயத்தையும், ஆத்துமாவையும் அமைதிப்படுத்துவது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகளைக் கொடுக்கும். அது அவருடைய அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் கேட்க உதவி செய்யும். உங்கள் ஆத்துமாவில் நீங்கள் புத்துயிர் பெறுவதைக் காண்பீர்கள். மேலும், நீங்கள் கழுகுகளைப் போல் உயர எழும்ப முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இயற்கைக்கு அப்பாற்பட்ட பலத்தால் என்னைப் புதுப்பித்திடும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 25 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். ஏசாயா 40:31 வேகமானதும் போட்டி நிறைந்ததுமான இவ்வுலகில், தேய்ந்து போனதாகவும், முடங்கிவிட்டதாகவும் உணருவது எளிது. ஆனால் காரியங்கள் எவ்வளவு கடினமானதாய் இருந்தாலும், நம்முடைய வேலைகளை செய்வதற்கு, நம்முடைய மனம் மற்றும் உடல் நலனுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமாகும். நீங்கள் முன்னேறிச் செல்லச் சிரமப்படுகிறீர்கள் என்றால், வல்லமையின் ஆதாரமான தேவனிடம் திரும்புங்கள். உங்களுக்காக நேரமெடுத்து, அமைதியும் நிசப்தமுமான இடத்தில் தேவனுடன் இருக்கச் சற்ற நேரத்தை பிரத்யேகமாய் ஒதுக்குங்கள். சுறுசுறுப்பாய் எதையும் செய்து முடிக்காவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் இருதயத்தையும், ஆத்துமாவையும் அமைதிப்படுத்துவது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகளைக் கொடுக்கும். அது அவருடைய அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் கேட்க உதவி செய்யும். உங்கள் ஆத்துமாவில் நீங்கள் புத்துயிர் பெறுவதைக் காண்பீர்கள். மேலும், நீங்கள் கழுகுகளைப் போல் உயர எழும்ப முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இயற்கைக்கு அப்பாற்பட்ட பலத்தால் என்னைப் புதுப்பித்திடும். ஆமென்.