← செய்திகளுக்குத் திரும்பு
பூமியிலுள்ள சகல தேசங்களிலும் தேவன் உங்களுக்குப் புகழையும் கீர்த்தியையும் தருவார்
படத்தைப் பதிவிறக்கு

பூமியிலுள்ள சகல தேசங்களிலும் தேவன் உங்களுக்குப் புகழையும்...

“திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன். செப்பனியா 3:20 * எஞ்சியிருக்கும் இஸ்ரவேல் மக்களுக்குத் தேவன் இவ்வாக்குறுதியைக் கொடுத்தார். அவர்களைச் சீர்ப்படுத்துவதற்கும், சுத்திகரிப்பிற்குமான தமது அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். இந்த வாக்குத்தத்தம் அவருடைய நித்திய சிநேகத்தையும், தமது ஜனங்களைத் தம்மிடம் இழுத்துக்கொள்வதற்கான விருப்பத்தையும் வெளிக்காட்டுகிறது. * நீங்கள் பாவத்தில் சிக்கிக்கொண்டு அதன் பாரச் சுமையால் கஷ்டப்படுகிறீர்களா? * இயேசுவிடம் திரும்பி வாருங்கள். அவருடைய இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுங்கள். இது உண்மையாய் மன்னிப்பைத் தேடும் அனைவரையும் சுத்திகரிக்கிறது. * உங்கள் போராட்டங்களில் நீங்கள் தனியாக இல்லை; தேவன் உங்களை மீண்டும் தமது மந்தைக்கு அழைக்க விரும்புகிறார். * உங்கள் சந்தேகங்கள் மற்றும் சுமைகளுடன் இயேசுவிடம் வாருங்கள். பாசாங்கு செய்யாமல், பரிபூரணமாய் இல்லாமல் இருக்கிற வண்ணமாகவே அவரிடம் வரமுடியும். * உங்கள் தவறுகளையும் பிழைகளையும் ஒப்புக்கொள்ள நேரம் ஒதுக்கி, உண்மையாய் அவரை அணுகுங்கள். * தேவன் உங்கள் நல்வாழ்வை மீட்டெடுத்து உங்களை மரியாதைக்கும் கனத்தும் உரியவராய் மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் வாக்குக் கொடுத்தபடியே என்னை மீட்டெடுத்து ஆசீர்வதியும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன். செப்பனியா 3:20 * எஞ்சியிருக்கும் இஸ்ரவேல் மக்களுக்குத் தேவன் இவ்வாக்குறுதியைக் கொடுத்தார். அவர்களைச் சீர்ப்படுத்துவதற்கும், சுத்திகரிப்பிற்குமான தமது அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். இந்த வாக்குத்தத்தம் அவருடைய நித்திய சிநேகத்தையும், தமது ஜனங்களைத் தம்மிடம் இழுத்துக்கொள்வதற்கான விருப்பத்தையும் வெளிக்காட்டுகிறது. * நீங்கள் பாவத்தில் சிக்கிக்கொண்டு அதன் பாரச் சுமையால் கஷ்டப்படுகிறீர்களா? * இயேசுவிடம் திரும்பி வாருங்கள். அவருடைய இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுங்கள். இது உண்மையாய் மன்னிப்பைத் தேடும் அனைவரையும் சுத்திகரிக்கிறது. * உங்கள் போராட்டங்களில் நீங்கள் தனியாக இல்லை; தேவன் உங்களை மீண்டும் தமது மந்தைக்கு அழைக்க விரும்புகிறார். * உங்கள் சந்தேகங்கள் மற்றும் சுமைகளுடன் இயேசுவிடம் வாருங்கள். பாசாங்கு செய்யாமல், பரிபூரணமாய் இல்லாமல் இருக்கிற வண்ணமாகவே அவரிடம் வரமுடியும். * உங்கள் தவறுகளையும் பிழைகளையும் ஒப்புக்கொள்ள நேரம் ஒதுக்கி, உண்மையாய் அவரை அணுகுங்கள். * தேவன் உங்கள் நல்வாழ்வை மீட்டெடுத்து உங்களை மரியாதைக்கும் கனத்தும் உரியவராய் மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் வாக்குக் கொடுத்தபடியே என்னை மீட்டெடுத்து ஆசீர்வதியும். ஆமென்.