← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் கனவுகளை நனவாக்கக் கடினமாய் உழைத்திடுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் கனவுகளை நனவாக்கக் கடினமாய் உழைத்திடுங்கள்.

“ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். நீதிமொழிகள் 12:11 ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்தபோது அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக் கொண்டனர். ஆனால் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாதபோது, அவர்கள் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டுத் தங்கள் வாழ்க்கைக்காகக் கடினமாய் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர். இது ஒரு வேதனையான அனுபவம். கடின உழைப்புக்கு இணை எதுவுமில்லை. வெறும் பகல் கனவு உங்கள் இலக்குகளை அடைய உதவாது. மாறாக, உங்கள் கனவுகளை நனவாக்க கடினமாய் உழைக்க வேண்டும். நீங்கள் முயற்சி செய்யத் தயாராயிருந்தால், தேவன் சந்தேகத்திற்கிடமின்றி உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிப்பார். மற்றும் ஏராளமான ஆசீர்வாதங்களை உங்களுக்குத் தருவார். எனவே, விழித்தெழுந்து, படுக்கையில் இருந்து எழுந்து, உங்கள் இலக்குகளை நோக்கிச் செயல்பட வேண்டிய நேரம் இது. நீங்கள் முன்னெடுத்துச் செல்லும் ஒவ்வொரு அடியும் ஆசீர்வதிக்கப்பட்ட எதிர்காலத்தை அடைய அவசியமானது. உங்கள் இலக்குகளை நோக்கிச் செயல்படும்போது தேவ உதவியையும், வழிகாட்டுதலையும் சார்ந்திருங்கள் . அவர் உங்களைத் தோல்வியடையச் செய்யமாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, கடினமாகவும், விடாமுயற்சியுடனும் உழைக்க எனக்குப் பலத்தையும், மன உறுதியையும் தாரும். எனது முயற்சிகளை ஆசீர்வதித்து, வெற்றியைத் தந்து உமக்கு மகிமை வரச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். நீதிமொழிகள் 12:11 ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்தபோது அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக் கொண்டனர். ஆனால் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாதபோது, அவர்கள் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டுத் தங்கள் வாழ்க்கைக்காகக் கடினமாய் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர். இது ஒரு வேதனையான அனுபவம். கடின உழைப்புக்கு இணை எதுவுமில்லை. வெறும் பகல் கனவு உங்கள் இலக்குகளை அடைய உதவாது. மாறாக, உங்கள் கனவுகளை நனவாக்க கடினமாய் உழைக்க வேண்டும். நீங்கள் முயற்சி செய்யத் தயாராயிருந்தால், தேவன் சந்தேகத்திற்கிடமின்றி உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிப்பார். மற்றும் ஏராளமான ஆசீர்வாதங்களை உங்களுக்குத் தருவார். எனவே, விழித்தெழுந்து, படுக்கையில் இருந்து எழுந்து, உங்கள் இலக்குகளை நோக்கிச் செயல்பட வேண்டிய நேரம் இது. நீங்கள் முன்னெடுத்துச் செல்லும் ஒவ்வொரு அடியும் ஆசீர்வதிக்கப்பட்ட எதிர்காலத்தை அடைய அவசியமானது. உங்கள் இலக்குகளை நோக்கிச் செயல்படும்போது தேவ உதவியையும், வழிகாட்டுதலையும் சார்ந்திருங்கள் . அவர் உங்களைத் தோல்வியடையச் செய்யமாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, கடினமாகவும், விடாமுயற்சியுடனும் உழைக்க எனக்குப் பலத்தையும், மன உறுதியையும் தாரும். எனது முயற்சிகளை ஆசீர்வதித்து, வெற்றியைத் தந்து உமக்கு மகிமை வரச் செய்யும். ஆமென்.