வியாழன், 25 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.1 கொரிந்தியர் 2:9 பரலோகம் எப்படி இருக்கும் என்று நாம் அடிக்கடி கற்பனை செய்ய முயற்சி செய்கிறோம், ஆனால் உண்மை என்னவென்றால், தேவ சமுகத்தில் நமக்குக் காத்திருக்கும் மகிழ்ச்சி, அழகு மற்றும் சமாதானத்தை நம் மனித அறிவால் புரிந்துகொள்ள முடியாது. இது நம் ஆழ்ந்த கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதாகும். ஆனால் பரலோகத்தில் மட்டுமல்லாமல், பூமியிலும் தேவன் நமக்கு ஆசீர்வாதங்களையும் வாய்ப்புகளையும் ஆயத்தமாய் வைத்திருக்கிறார். நாம் அவரை நேசித்துப் பின்தொடரும்போது, நாம் கற்பனை செய்வதை விட மிகச் சிறப்பானதொரு திட்டத்தை அவர் நம் வாழ்வில் வைத்திருக்கிறார் என்று நம்மால் விசுவாசிக்க முடியும். எனவே, அவருடைய வாக்குத்தத்தங்களில் நம்பிக்கை வைத்து, உங்களுக்கான அவருடைய திட்டங்கள் நல்லவை, பரிபூரணமானவை என்று நம்புங்கள். சிறந்தவை இனிமேல் தான் வருகின்றன என்பதை அறிந்து, தொடர்ந்து அவரை நேசித்துப் பின்பற்றுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதங்களுக்கும், வாய்ப்புகளுக்கும் நன்றிசெலுத்துகிறேன். என் வாழ்க்கைக்கான உம்முடைய திட்டங்களை நம்பவும், நீர் என் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவர் என்று உம்மீது விசுவாசம் வைக்கவும் எனக்கு கிருபைத் தாரும். உம்மேலுள்ள என்னுடைய அன்பை பலப்படுத்தி, நீர் எனக்கு முன் வைத்த பாதையில் என்னை வழிநடத்தும். ஆமென்.
உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதத்தைத் தேவன்...
“வியாழன், 25 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.1 கொரிந்தியர் 2:9 பரலோகம் எப்படி இருக்கும் என்று நாம் அடிக்கடி கற்பனை செய்ய முயற்சி செய்கிறோம், ஆனால் உண்மை என்னவென்றால், தேவ சமுகத்தில் நமக்குக் காத்திருக்கும் மகிழ்ச்சி, அழகு மற்றும் சமாதானத்தை நம் மனித அறிவால் புரிந்துகொள்ள முடியாது. இது நம் ஆழ்ந்த கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதாகும். ஆனால் பரலோகத்தில் மட்டுமல்லாமல், பூமியிலும் தேவன் நமக்கு ஆசீர்வாதங்களையும் வாய்ப்புகளையும் ஆயத்தமாய் வைத்திருக்கிறார். நாம் அவரை நேசித்துப் பின்தொடரும்போது, நாம் கற்பனை செய்வதை விட மிகச் சிறப்பானதொரு திட்டத்தை அவர் நம் வாழ்வில் வைத்திருக்கிறார் என்று நம்மால் விசுவாசிக்க முடியும். எனவே, அவருடைய வாக்குத்தத்தங்களில் நம்பிக்கை வைத்து, உங்களுக்கான அவருடைய திட்டங்கள் நல்லவை, பரிபூரணமானவை என்று நம்புங்கள். சிறந்தவை இனிமேல் தான் வருகின்றன என்பதை அறிந்து, தொடர்ந்து அவரை நேசித்துப் பின்பற்றுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதங்களுக்கும், வாய்ப்புகளுக்கும் நன்றிசெலுத்துகிறேன். என் வாழ்க்கைக்கான உம்முடைய திட்டங்களை நம்பவும், நீர் என் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவர் என்று உம்மீது விசுவாசம் வைக்கவும் எனக்கு கிருபைத் தாரும். உம்மேலுள்ள என்னுடைய அன்பை பலப்படுத்தி, நீர் எனக்கு முன் வைத்த பாதையில் என்னை வழிநடத்தும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

