செவ்வாய், 4 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். 2 தீமோத்தேயு 1:7 அன்பு தேவ பிள்ளையே, விசுவாசமே வெற்றியின் திறவுகோலாகும். இது சத்தியமாகிய தேவ வார்த்தையிலிருந்து உருவாகிறது. சத்தியத்தைப் (தேவனுடைய வார்த்தையை) படியுங்கள், அதைப் புரிந்துகொள்ளுங்கள், அதை உங்கள் இருதயத்திலும் சிந்தையிலும் உள்வாங்குங்கள். வாழ்க்கையின் எல்லா ஏமாற்றங்களிலிருந்தும் குழப்பங்களிலிருந்தும் சத்தியம் மட்டுமே உங்களை விடுதலையாக்கும். ஒரு உண்மை என்னவென்றால், தேவன் உங்களுக்குப் பயத்தின் ஆவியைக் கொடுக்கவில்லை. மாறாக, பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். அதன் மூலம் அவருடைய இருதயத்தையும் உங்களுக்கான அவருடைய திட்டத்தையும் புரிந்துக்கொள்ள முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, விசுவாசத்தினால் பயத்தை மேற்கொள்ளவும், வெற்றியடையவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்களுக்குப் பயத்தின் ஆவியைக் கொடுக்கவில்லை.
“மாறாக, பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். அதன் மூலம் அவருடைய இருதயத்தையும் உங்களுக்கான அவருடைய திட்டத்தையும் புரிந்துக்கொள்ள முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, விசுவாசத்தினால் பயத்தை மேற்கொள்ளவும், வெற்றியடையவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

