← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்.

“வெள்ளிக்கிழமை, 10 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார். 2 கொரிந்தியர் 9:10 * நீங்கள் உண்மையாய் உழைத்தும், எதிர்பார்த்த பலனையும் அங்கீகாரத்தையும் பெற முடியவில்லை என்று விரக்தியடைந்திருக்கிறீர்களோ?* ஊழியம் அல்லது வியாபாரத்தில் உங்களுடைய தன்னலமற்ற முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லையே என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களோ? * அநீதியான முறையில் செயல்பட்டு வெற்றிப் பெறுகிறவர்கள் மகிழ்ச்சி அடைவதைப் பார்ப்பது வேதனையாக இருக்கலாம்.* இருப்பினும், உங்கள் நேர்மையான வாழ்க்கை முறையை கைவிடாதீர்கள்.* விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழையுங்கள். * உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் என்று வேதாகமம் கூறுகிறது. * கர்த்தர் தருகிற வாய்ப்புகளை எப்பொழுதும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.* பஞ்ச காலங்களில் கூட, ஈசாக்கு விசுவாசத்துடன் விதை விதைத்தார்.* எனவே, சூழ்நிலைகளைப் புறக்கணித்து, உங்கள் நீதியான மற்றும் நேர்மையான முயற்சியைத் தொடர்ந்துச் செய்யுங்கள். * உங்கள் விளைச்சலை அதிகரிக்க சரியான நேரத்தில் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.* உங்கள் வாழ்க்கை எல்லாத் துறைகளிலும் ஏராளமான ஆசீர்வாதங்களால் நிரப்பப்படும்.* கர்த்தர் உங்களுக்காக அற்புதமான காரியங்களைச் செய்வார்.* உங்கள் ஆசீர்வாதத்தின் காலம் வருகிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் முயற்சிகளை ஆசீர்வதித்து, ஏராளமான விளைச்சலைத் தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 10 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார். 2 கொரிந்தியர் 9:10 * நீங்கள் உண்மையாய் உழைத்தும், எதிர்பார்த்த பலனையும் அங்கீகாரத்தையும் பெற முடியவில்லை என்று விரக்தியடைந்திருக்கிறீர்களோ?* ஊழியம் அல்லது வியாபாரத்தில் உங்களுடைய தன்னலமற்ற முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லையே என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களோ? * அநீதியான முறையில் செயல்பட்டு வெற்றிப் பெறுகிறவர்கள் மகிழ்ச்சி அடைவதைப் பார்ப்பது வேதனையாக இருக்கலாம்.* இருப்பினும், உங்கள் நேர்மையான வாழ்க்கை முறையை கைவிடாதீர்கள்.* விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழையுங்கள். * உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் என்று வேதாகமம் கூறுகிறது. * கர்த்தர் தருகிற வாய்ப்புகளை எப்பொழுதும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.* பஞ்ச காலங்களில் கூட, ஈசாக்கு விசுவாசத்துடன் விதை விதைத்தார்.* எனவே, சூழ்நிலைகளைப் புறக்கணித்து, உங்கள் நீதியான மற்றும் நேர்மையான முயற்சியைத் தொடர்ந்துச் செய்யுங்கள். * உங்கள் விளைச்சலை அதிகரிக்க சரியான நேரத்தில் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.* உங்கள் வாழ்க்கை எல்லாத் துறைகளிலும் ஏராளமான ஆசீர்வாதங்களால் நிரப்பப்படும்.* கர்த்தர் உங்களுக்காக அற்புதமான காரியங்களைச் செய்வார்.* உங்கள் ஆசீர்வாதத்தின் காலம் வருகிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் முயற்சிகளை ஆசீர்வதித்து, ஏராளமான விளைச்சலைத் தந்தருளும். ஆமென்.