சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார். 2 கொரிந்தியர் 9:10 உங்கள் உண்மையான முயற்சிகளின் மத்தியிலும் , நீங்கள் எதிர்பார்த்த பலனையும் அங்கீகாரத்தையும் பெறவில்லை என்று நீங்கள் விரக்தியடைந்திருக்கிறீர்களா? ஊழியம் அல்லது வியாபாரத்தில் உங்கள் தன்னலமற்ற முயற்சிகள், விரும்பிய பலனைத் தரவில்லை என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? முறையற்ற செயல்களைச் செய்யத் துணிந்தவர்கள் தங்கள் வெற்றியில் மகிழ்ச்சியடைவதைக் காண்பது, வேதனையாய் இருக்கலாம். ஆனால், உங்கள் நேர்மையான வாழ்க்கை முறையைக் கைவிடாதீர்கள். விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைத்திடுங்கள். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் என்று வேதாகமம் கூறுகிறது.தேவன் கொடுத்த வாய்ப்புகளை எப்பொழுதும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பஞ்சக் காலங்களில் கூட, ஈசாக்கு நம்பிக்கையுடன் விதைக்கத் தயாராயிருந்தார். எனவே, சூழ்நிலைகளைப் புறக்கணித்து, உங்கள் உண்மையும் நேர்மையுமான முயற்சியைத் தொடருங்கள். உங்களைப் பெருகச்செய்ய சரியான நேரத்தில் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.உங்கள் வாழ்க்கையானது எல்லாப் பகுதிகளிலும் பரிபூரண ஆசீர்வாதங்களால் நிரப்பப்படும். தேவன் உங்களுக்காக அற்புதமான காரியங்களைச் செய்வார், உங்கள் ஆசீர்வாதத்தின் நேரம் சீக்கிரம் வருகிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் முயற்சிகளுக்கு வெகுமதி அளித்து, ஏராளமாய் ஆசீர்வதித்தருளும். ஆமென்.
உங்கள் நீதியின் விளைச்சலைத் தேவன் வர்த்திக்கச் செய்வார்
“சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார். 2 கொரிந்தியர் 9:10 உங்கள் உண்மையான முயற்சிகளின் மத்தியிலும் , நீங்கள் எதிர்பார்த்த பலனையும் அங்கீகாரத்தையும் பெறவில்லை என்று நீங்கள் விரக்தியடைந்திருக்கிறீர்களா? ஊழியம் அல்லது வியாபாரத்தில் உங்கள் தன்னலமற்ற முயற்சிகள், விரும்பிய பலனைத் தரவில்லை என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? முறையற்ற செயல்களைச் செய்யத் துணிந்தவர்கள் தங்கள் வெற்றியில் மகிழ்ச்சியடைவதைக் காண்பது, வேதனையாய் இருக்கலாம். ஆனால், உங்கள் நேர்மையான வாழ்க்கை முறையைக் கைவிடாதீர்கள். விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைத்திடுங்கள். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் என்று வேதாகமம் கூறுகிறது.தேவன் கொடுத்த வாய்ப்புகளை எப்பொழுதும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பஞ்சக் காலங்களில் கூட, ஈசாக்கு நம்பிக்கையுடன் விதைக்கத் தயாராயிருந்தார். எனவே, சூழ்நிலைகளைப் புறக்கணித்து, உங்கள் உண்மையும் நேர்மையுமான முயற்சியைத் தொடருங்கள். உங்களைப் பெருகச்செய்ய சரியான நேரத்தில் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.உங்கள் வாழ்க்கையானது எல்லாப் பகுதிகளிலும் பரிபூரண ஆசீர்வாதங்களால் நிரப்பப்படும். தேவன் உங்களுக்காக அற்புதமான காரியங்களைச் செய்வார், உங்கள் ஆசீர்வாதத்தின் நேரம் சீக்கிரம் வருகிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் முயற்சிகளுக்கு வெகுமதி அளித்து, ஏராளமாய் ஆசீர்வதித்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

