← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் இழந்ததை கர்த்தர் உங்களுக்குத் திரும்பத் தருவார்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் இழந்ததை கர்த்தர் உங்களுக்குத் திரும்பத் தருவார்.

“வியாழன், 9 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.யோவேல் 2:25 (NLT)6 * உங்கள் குடும்பத்திலோ அல்லது உங்கள் தொழிலிலோ ஏற்பட்ட இழப்பால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களோ?* இழப்பின் வேதனையை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வது மிகவும் கடினமான காரியம். மேலும் உங்களுடைய இழப்பின் வேதனையைப் பலருக்கு புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். * ஆனால், மற்றவர்களை விட உங்களை அதிகமாக நேசிக்கும் கடவுள், அதை உங்களுக்கு அனுமதித்தற்கு ஒரு நோக்கம் உண்டு.* இன்று அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். * துன்பத்தையும் இழப்பையும் சகித்துக்கொள்ள உங்களை அனுமதித்ததற்கான காரணங்கள் கர்த்தரிடம் உண்டு .* பல நேரங்களில் அதற்கான காரணத்தை நாம் உணராமல் இருக்கலாம். * எனினும், நீங்கள் நம்பிக்கையுடன் இயேசுவைப் பற்றிக்கொண்டால், அவர் உங்கள் கண்ணீரைத் துடைத்து, உங்கள் இருதயத்தைக் ஆற்றித் தேற்றுவார்.* அவர் நீங்கள் இழந்ததை இரண்டு மடங்காகத் திரும்பத் தந்து‌, உங்கள் தேவைகளையும் சந்திப்பார். * இயேசுவே உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஆதாரம்.* அவருடைய வார்த்தைகள் ஜீவனும் வல்லமையுமானவை.* நீங்கள் இழந்ததை நிச்சயமாக அவர் உங்களுக்குத் திரும்பத் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் இழந்ததை இரண்டு மடங்காக எனக்கு திரும்பத் தந்து என்னை ஆசீர்வதியும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 9 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.யோவேல் 2:25 (NLT)6 * உங்கள் குடும்பத்திலோ அல்லது உங்கள் தொழிலிலோ ஏற்பட்ட இழப்பால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களோ?* இழப்பின் வேதனையை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வது மிகவும் கடினமான காரியம். மேலும் உங்களுடைய இழப்பின் வேதனையைப் பலருக்கு புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். * ஆனால், மற்றவர்களை விட உங்களை அதிகமாக நேசிக்கும் கடவுள், அதை உங்களுக்கு அனுமதித்தற்கு ஒரு நோக்கம் உண்டு.* இன்று அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். * துன்பத்தையும் இழப்பையும் சகித்துக்கொள்ள உங்களை அனுமதித்ததற்கான காரணங்கள் கர்த்தரிடம் உண்டு .* பல நேரங்களில் அதற்கான காரணத்தை நாம் உணராமல் இருக்கலாம். * எனினும், நீங்கள் நம்பிக்கையுடன் இயேசுவைப் பற்றிக்கொண்டால், அவர் உங்கள் கண்ணீரைத் துடைத்து, உங்கள் இருதயத்தைக் ஆற்றித் தேற்றுவார்.* அவர் நீங்கள் இழந்ததை இரண்டு மடங்காகத் திரும்பத் தந்து‌, உங்கள் தேவைகளையும் சந்திப்பார். * இயேசுவே உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஆதாரம்.* அவருடைய வார்த்தைகள் ஜீவனும் வல்லமையுமானவை.* நீங்கள் இழந்ததை நிச்சயமாக அவர் உங்களுக்குத் திரும்பத் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் இழந்ததை இரண்டு மடங்காக எனக்கு திரும்பத் தந்து என்னை ஆசீர்வதியும். ஆமென்