← செய்திகளுக்குத் திரும்பு
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.

“சனிக்கிழமை, 11 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.கொலோசேயர் 3:2 * வாழ்க்கையில் நீங்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள்?* உங்களின் உடல் மற்றும் ஆத்துமாவின் ஆரோக்கியத்தைப் பணயம் வைத்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் செல்வத்தைக் குவிக்க அயராது உழைக்கிறீர்களா? * உங்களுக்கான கடவுளின் நோக்கத்தை தவிர்த்து, பூமிக்குரிய விஷயங்களின் பின்னாடி ஓடினால், கடவுள் உங்களுக்காக ஆயத்தம் செய்துள்ள பரலோக ஆசீர்வாதத்தை நீங்கள் இழக்க நேரிடும். * இவ்வுலகிலிருந்து யாராலும் எதையும் எடுத்துக் கொண்டு போக முடியாது.* எனினும், நாம் பூமியில் வாழும் நல்ல வாழ்க்கை பரலோகத்தில் செல்வத்தை உண்டாக்கும்.* உங்கள் நோக்கத்தையும், விருப்பத்தையும் ஆராய்ந்துப் பார்த்து சரியான வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுங்கள்.* காலப்போக்கில் அழிந்து போகும் விஷயங்களைக் காட்டிலும் மேலானவைகளில் உங்கள் எண்ணங்களைச் செலுத்துங்கள். * அப்பொழுது தேவன் உங்கள்மேல் பிரியப்படுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது நோக்கத்தின்படி என் வாழ்க்கையை ஒழுங்கமைக்க எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 11 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.கொலோசேயர் 3:2 * வாழ்க்கையில் நீங்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள்?* உங்களின் உடல் மற்றும் ஆத்துமாவின் ஆரோக்கியத்தைப் பணயம் வைத்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் செல்வத்தைக் குவிக்க அயராது உழைக்கிறீர்களா? * உங்களுக்கான கடவுளின் நோக்கத்தை தவிர்த்து, பூமிக்குரிய விஷயங்களின் பின்னாடி ஓடினால், கடவுள் உங்களுக்காக ஆயத்தம் செய்துள்ள பரலோக ஆசீர்வாதத்தை நீங்கள் இழக்க நேரிடும். * இவ்வுலகிலிருந்து யாராலும் எதையும் எடுத்துக் கொண்டு போக முடியாது.* எனினும், நாம் பூமியில் வாழும் நல்ல வாழ்க்கை பரலோகத்தில் செல்வத்தை உண்டாக்கும்.* உங்கள் நோக்கத்தையும், விருப்பத்தையும் ஆராய்ந்துப் பார்த்து சரியான வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுங்கள்.* காலப்போக்கில் அழிந்து போகும் விஷயங்களைக் காட்டிலும் மேலானவைகளில் உங்கள் எண்ணங்களைச் செலுத்துங்கள். * அப்பொழுது தேவன் உங்கள்மேல் பிரியப்படுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது நோக்கத்தின்படி என் வாழ்க்கையை ஒழுங்கமைக்க எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.