திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.நீதிமொழிகள் 24:5 அறிவே ஆற்றல் என்பது ஒரு பிரபலமான பழமொழி. ஆம்! அது எவ்வளவு உண்மை! புதுமை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இன்றைய உலகத்தை மிகவும் சிக்கலான, போட்டி நிறைந்ததாக மாற்றியுள்ளது. இவ்வுலகத்தின் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்துவதால், புதிய செயல்பாடுகளின் அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலம் மிகவும் சிக்கலானதாய் இருக்கும். சமையலறை சாதனங்களானாலும் அல்லது வேலை அல்லது பொது இட உபகரணங்களானாலும், அதன் அமைப்புகள், சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவு, தடையற்ற வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாகி வருகிறது. இந்த விஷயங்களுக்கு அப்பாற்பட்டு, தேவனுடைய நோக்கங்களையும் அவருடைய எதிர்காலத் திட்டங்களையும் புரிந்துகொள்வது நாம் சமாதானமாக உயிர்வாழ்வதற்கு இன்றியமையாததாகும். எனவே, வேத வாசிப்பு, புரிதல், கற்றல், ஆயத்தப்படுத்தல் மற்றும் அதிகாரம்பெறுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் புறக்கணிக்காதீர்கள். # தேவனே எல்லா ஞானத்திற்கும் அறிவிற்கும் ஊற்றாய் இருக்கிறார்.# உங்கள் சிரமங்களைச் சமாளிக்க அவருடைய உதவியைக் கேளுங்கள்.# அவர் நிச்சயமாய் உங்களுக்கு உதவி செய்வார்.# உங்களைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் பற்றி அறிந்திருங்கள்.# புத்திசாலியாகவும் ஞானமுள்ளவராகவும் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து நான் அறிவுள்ளவனாய் இருக்க எனக்கு உதவும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
வாசிப்பு, புரிதல், கற்றல், ஆயத்த படுத்தல் மற்றும்...
“# தேவனே எல்லா ஞானத்திற்கும் அறிவிற்கும் ஊற்றாய் இருக்கிறார்.# உங்கள் சிரமங்களைச் சமாளிக்க அவருடைய உதவியைக் கேளுங்கள்.# அவர் நிச்சயமாய் உங்களுக்கு உதவி செய்வார்.# உங்களைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் பற்றி அறிந்திருங்கள்.# புத்திசாலியாகவும் ஞானமுள்ளவராகவும் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து நான் அறிவுள்ளவனாய் இருக்க எனக்கு உதவும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

