← செய்திகளுக்குத் திரும்பு
மனுஷகுமாரன் வருவார், ஆயத்தமாகுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

மனுஷகுமாரன் வருவார், ஆயத்தமாகுங்கள்.

“சனிக்கிழமை, 17 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். மத்தேயு 24:44 முதலில் மனிதனாய்ப் பூமிக்கு வந்த இயேசு, தனது நித்திய இராஜ்யத்தை ஸ்தாபிக்க மீண்டும் ஒருமுறை வருவார். வேதாகமத்தின்படி, இரவில் திருடனைப் போலத் திடீரென்று வருவார். நாளோ, மணிநேரமோ யாருக்கும் தெரியாது. பரலோகத்தில் உள்ள தூதர்களுக்கும், குமாரனுக்குங்கூடத் தெரியாது. பிதா ஒருவரே அவ்வேளையை அறிந்திருக்கிறார். வரவிருக்கும் இராஜாவைச் சந்திக்க ஆயத்தமாய் இருப்பது அவசியம். இந்த உலகின் கவர்ச்சியினாலும், தவறான வஞ்சிக்கும் உபதேசங்களாலும் இழுப்புண்டு போகாமல், நாம் மனந்திரும்பி நீதியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். நாம் கவனமாயிருக்க வேண்டும். எச்சரிப்பாயிருந்து விழித்திருக்க வேண்டும். அவரைச் சந்திக்க நம்மைத் தகுதிபடுத்திக்கொள்ள வேண்டும். * பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்துகொண்டு இயேசுவுக்குச் சாட்சியாய் வாழுங்கள்.* ஆயத்தப்பட்டு விழித்திருங்கள்.* இயேசு சீக்கிரம் வருகிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மைச் சந்திக்க என்னை ஆயத்தப்படுத்தும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 17 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். மத்தேயு 24:44 முதலில் மனிதனாய்ப் பூமிக்கு வந்த இயேசு, தனது நித்திய இராஜ்யத்தை ஸ்தாபிக்க மீண்டும் ஒருமுறை வருவார். வேதாகமத்தின்படி, இரவில் திருடனைப் போலத் திடீரென்று வருவார். நாளோ, மணிநேரமோ யாருக்கும் தெரியாது. பரலோகத்தில் உள்ள தூதர்களுக்கும், குமாரனுக்குங்கூடத் தெரியாது. பிதா ஒருவரே அவ்வேளையை அறிந்திருக்கிறார். வரவிருக்கும் இராஜாவைச் சந்திக்க ஆயத்தமாய் இருப்பது அவசியம். இந்த உலகின் கவர்ச்சியினாலும், தவறான வஞ்சிக்கும் உபதேசங்களாலும் இழுப்புண்டு போகாமல், நாம் மனந்திரும்பி நீதியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். நாம் கவனமாயிருக்க வேண்டும். எச்சரிப்பாயிருந்து விழித்திருக்க வேண்டும். அவரைச் சந்திக்க நம்மைத் தகுதிபடுத்திக்கொள்ள வேண்டும். * பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்துகொண்டு இயேசுவுக்குச் சாட்சியாய் வாழுங்கள்.* ஆயத்தப்பட்டு விழித்திருங்கள்.* இயேசு சீக்கிரம் வருகிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மைச் சந்திக்க என்னை ஆயத்தப்படுத்தும். ஆமென்.