← செய்திகளுக்குத் திரும்பு
புத்திமான்கள் நீதிமொழிகளை கவனித்துக் கேட்டு அறிவில் தேறுவார்களாக.
படத்தைப் பதிவிறக்கு

புத்திமான்கள் நீதிமொழிகளை கவனித்துக் கேட்டு அறிவில் தேறுவார்களாக.

“செவ்வாய், 19 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்.நீதிமொழிகள் 1:5 கவனிப்பது என்பது ஒவ்வொருவருக்கும், குறிப்பாக தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஒரு முக்கியமான பண்பாகும். துரதிர்ஷ்டவசமாக, நம்மில் பெரும்பாலோர் கவனிப்பதற்கு விருப்பமின்றியும், பேசுவதிலோ முனைப்போடும் இருக்கிறோம். ஒரு சிறிய உரையாடலில் கூட, மக்கள் பெரும்பாலும் மற்றவர்களின் கருத்துக்களை கவனிப்பதை புறக்கணித்து, தங்கள் எண்ணங்களையும் யோசனைகளையும் பகிர்ந்து கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். # நீங்கள் நன்றாகக் கவனிப்பவரா?# இல்லையென்றால் இந்தப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளத் தொடங்குங்கள்.# உங்கள் எண்ணங்களைப் பேசுவதை விடக் கவனிப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்.# கவனமாகக் கேட்கவும், மற்றவர்களின் கருத்துக்களை உள்வாங்கவும், பகுப்பாய்வு செய்யவும், அதன் பின் பேசவும் உங்களைப் பயிற்றுவித்துக்கொள்ளுங்கள். # அப்படிச் செய்தால், உங்கள் பொறுப்புகளிலும் நண்பர்களை உருவாக்குவதிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.# நீங்கள் சரியாகக் கவனிக்கும்போது, மற்றவர்களின் வலிகளையும் சிரமங்களையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.# கவனிப்பது பல பிரச்சனைகளைத் தீர்க்கவும் உறவுகளை உருவாக்கவும் முறையான நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.# எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனுக்கும் அவருடைய வழிகாட்டுதலுக்கும் செவிசாய்ப்பதன் மூலம் அவர் முன்னிலையில் பொறுமையாய் நேரத்தைச் செலவிடுவது நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்களை வெற்றிபெறச் செய்யும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் பேசுவதைக் காட்டிலும் கவனிப்பதை வளர்க்க எனக்கு உதவும். உமது வழிகாட்டுதலுக்கு நான் உணர்வுடையவனாய் இருக்கவும், அதை என் வாழ்நாள் முழுவதும் பின்பற்றவும் அதில் அர்ப்பணிப்புடன் இருக்கவும் எனக்கு அருள்புரியும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 19 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்.நீதிமொழிகள் 1:5 கவனிப்பது என்பது ஒவ்வொருவருக்கும், குறிப்பாக தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஒரு முக்கியமான பண்பாகும். துரதிர்ஷ்டவசமாக, நம்மில் பெரும்பாலோர் கவனிப்பதற்கு விருப்பமின்றியும், பேசுவதிலோ முனைப்போடும் இருக்கிறோம். ஒரு சிறிய உரையாடலில் கூட, மக்கள் பெரும்பாலும் மற்றவர்களின் கருத்துக்களை கவனிப்பதை புறக்கணித்து, தங்கள் எண்ணங்களையும் யோசனைகளையும் பகிர்ந்து கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். # நீங்கள் நன்றாகக் கவனிப்பவரா?# இல்லையென்றால் இந்தப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளத் தொடங்குங்கள்.# உங்கள் எண்ணங்களைப் பேசுவதை விடக் கவனிப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்.# கவனமாகக் கேட்கவும், மற்றவர்களின் கருத்துக்களை உள்வாங்கவும், பகுப்பாய்வு செய்யவும், அதன் பின் பேசவும் உங்களைப் பயிற்றுவித்துக்கொள்ளுங்கள். # அப்படிச் செய்தால், உங்கள் பொறுப்புகளிலும் நண்பர்களை உருவாக்குவதிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.# நீங்கள் சரியாகக் கவனிக்கும்போது, மற்றவர்களின் வலிகளையும் சிரமங்களையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.# கவனிப்பது பல பிரச்சனைகளைத் தீர்க்கவும் உறவுகளை உருவாக்கவும் முறையான நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.# எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனுக்கும் அவருடைய வழிகாட்டுதலுக்கும் செவிசாய்ப்பதன் மூலம் அவர் முன்னிலையில் பொறுமையாய் நேரத்தைச் செலவிடுவது நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்களை வெற்றிபெறச் செய்யும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் பேசுவதைக் காட்டிலும் கவனிப்பதை வளர்க்க எனக்கு உதவும். உமது வழிகாட்டுதலுக்கு நான் உணர்வுடையவனாய் இருக்கவும், அதை என் வாழ்நாள் முழுவதும் பின்பற்றவும் அதில் அர்ப்பணிப்புடன் இருக்கவும் எனக்கு அருள்புரியும். ஆமென்.