சனிக்கிழமை, 24 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம் பண்ணினார். சங்கீதம் 9:7 நாம் தேவன் என்று அழைக்கும் சர்வவல்லமையுள்ளவர், எல்லையற்றதும் அளவிட முடியாததுமான வல்லமை, மகிமை மற்றும் மகத்துவத்தைத் தமக்குள்ளே கொண்டிருக்கிறவராவார். அவர் அன்பு, தயவு, இரக்கம் மற்றும் கிருபையுள்ளவர். அவரது மனதுருக்கத்திற்கு அளவேயில்லை. அதே நேரத்தில், அவர் பாரபட்சமற்ற வைராக்கியமுள்ளதொரு தேவன். மேலும் வல்லமைமிக்க நீதிக் கொண்டவர். “தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம் பண்ணினார்” என்ற சொற்றொடர், அவர் சரியானதையும் தவறையும் பிரித்தறியும் ஒரு விசேஷித்த திறனைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும், (அவரது) நியாயத்தைப் புரட்டவோ தவிர்க்கவோ முடியாது. அதற்குரிய சரியான தண்டனைகளையும் வெகுமதிகளையும் வழங்குவதில் அவர் பாரபட்சமற்றவர். அவருடைய பரிசுத்தம் அளவிட முடியாதது. மேலும் அவர் அண்டசராசரம் முழுவதையும் முழுமையாய்க் கட்டுப்படுத்துகிறார். நீதியின் உருவமாயிருக்கிற அவர் துன்மார்க்கரைத் தண்டனையினின்று தப்புவிக்கமாட்டார். ஒவ்வொரு நபரையும் அவர்களின் கிரியைகளுக்கும் செயல்களுக்குமேற்ப நியாயந்தீர்க்க வருகிற இந்தச் சர்வ வல்லமையுள்ள தேவனை நேருக்கு நேர் சந்திக்கத் தயாராயிருப்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாததாகும். வேலையிலோ அல்லது குடும்பத்திலோ நீங்கள் அநியாயமாய் நடத்தப்பட்டால், நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள்.தேவன் உங்களுக்காக நியாயம் செய்து உங்களை மீண்டும் நிலைநாட்டுவார். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமக்கும் மற்ற மனிதர்களுக்கும் முன்பாக நீதியான வாழ்க்கை வாழ எனக்கு உதவிச் செய்யும். உமது நீதியை என் வாழ்வில் நிலைநாட்டி என்னை ஆசீர்வதியும். ஆமென்.
தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம்...
“் 9:7 நாம் தேவன் என்று அழைக்கும் சர்வவல்லமையுள்ளவர், எல்லையற்றதும் அளவிட முடியாததுமான வல்லமை, மகிமை மற்றும் மகத்துவத்தைத் தமக்குள்ளே கொண்டிருக்கிறவராவார். அவர் அன்பு, தயவு, இரக்கம் மற்றும் கிருபையுள்ளவர். அவரது மனதுருக்கத்திற்கு அளவேயில்லை. அதே நேரத்தில், அவர் பாரபட்சமற்ற வைராக்கியமுள்ளதொரு தேவன். மேலும் வல்லமைமிக்க நீதிக் கொண்டவர். "தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம் பண்ணினார்" என்ற சொற்றொடர், அவர் சரியானதையும் தவறையும் பிரித்தறியும் ஒரு விசேஷித்த திறனைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும், (அவரது) நியாயத்தைப் புரட்டவோ தவிர்க்கவோ முடியாது. அதற்குரிய சரியான தண்டனைகளையும் வெகுமதிகளையும் வழங்குவதில் அவர் பாரபட்சமற்றவர். அவருடைய பரிசுத்தம் அளவிட முடியாதது. மேலும் அவர் அண்டசராசரம் முழுவதையும் முழுமையாய்க் கட்டுப்படுத்துகிறார். நீதியின் உருவமாயிருக்கிற அவர் துன்மார்க்கரைத் தண்டனையினின்று தப்புவிக்கமாட்டார். ஒவ்வொரு நபரையும் அவர்களின் கிரியைகளுக்கும் செயல்களுக்குமேற்ப நியாயந்தீர்க்க வருகிற இந்தச் சர்வ வல்லமையுள்ள தேவனை நேருக்கு நேர் சந்திக்கத் தயாராயிருப்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாததாகும். வேலையிலோ அல்லது குடும்பத்திலோ நீங்கள் அநியாயமாய் நடத்தப்பட்டால், நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள்.தேவன் உங்களுக்காக நியாயம் செய்து உங்களை மீண்டும் நிலைநாட்டுவார். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமக்கும் மற்ற மனிதர்களுக்கும் முன்பாக நீதியான வாழ்க்கை வாழ எனக்கு உதவிச் செய்யும். உமது நீதியை என் வாழ்வில் நிலைநாட்டி என்னை ஆசீர்வதியும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

