← செய்திகளுக்குத் திரும்பு
வலி மற்றும் துன்பத்தில் இருப்பவர்களுடன் பச்சாதாபமாக இருங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

வலி மற்றும் துன்பத்தில் இருப்பவர்களுடன் பச்சாதாபமாக இருங்கள்.

“ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். எபிரெயர் 13:3 இன்றைய உலகம் மிகவும் பரபரப்பாயுள்ளது. மக்கள் மிகுந்த மன அழுத்தத்திலும் வேதனையிலும் வாழ்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறரது துயரத்தை நம்முடையது போலப் புரிந்துகொள்வது கடினம். இருப்பினும், இது ஏற்றுக்கொள்ளத் தக்க விளக்கம் அல்ல. ஏனென்றால் தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் மற்றவர்களுக்கு முதலிடம் கொடுக்கும்படி வேதாகமம் வலியுறுத்துகிறது. இயேசு மற்றவர்களிடம் பச்சாதாபம் காட்டுவதை முன்மாதிரியாகக் கொண்டிருந்தார், மேலும் பல வரலாற்றுத் தலைவர்கள் தங்கள் பச்சாதாபத்திற்காக நன்கு அறியப்பட்டவர்களாவர். அப்போஸ்தலர் புத்தகத்தில், தொற்காள் விசுவாசமுள்ள ஒரு முன்மாதிரியான பெண்ணாகச் சித்தரிக்கப்படுகிறார். அவளுடைய மனதுருக்கம், பெருந்தன்மை மற்றும் அசைக்க முடியாத இரக்கத்தினிமித்தமும், குறிப்பாக இஸ்ரேலின் கடற்கரை நகரமான யோப்பாவின் விதவைகளுக்குச் சேவை செய்வதற்கும் அவர் நன்கு அறியப்பட்டவர். அவர்கள் புறக்கணிக்கப்படாமல் அல்லது மறக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்து, அவர்களின் தேவைகளைச் சந்திப்பதற்கு அவர் தனது நேரத்தையும் வளங்களையும் அயராது அர்ப்பணித்தார். அவளுடைய செயல்கள் அவர்களின் பாதிப்புகள்பற்றிய ஆழமான புரிதலையும், அவர்களின் துயரத்தைப் போக்குவதற்கான உண்மையான விருப்பத்தையும் பிரதிபலித்தது. அவளுடைய பச்சாதாபம் பொருள் ஆதரவுக்கு அப்பாற்பட்டது. இழப்பு மற்றும் தனிமையின் ஆழமான தாக்கத்தை அவள் புரிந்துகொண்டாள். மேலும் துக்கத்திலும் தனிமையிலும் இருப்பவர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தர முயன்றாள். பச்சாதாபம் என்பது வெறும் உணர்வு அல்லது ஒரு சட்டென்ற உணர்ச்சி அல்ல என்பதை அவரது கதை நினைப்பூட்டுகிறது; இது ஒரு உந்து சக்தியாகும். இது, செயல்படவும், மற்றவர்களை அணுகவும், அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் நம்மைக் கட்டாயப்படுத்துகிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வேதனையிலும் துன்பத்திலும் உள்ளவர்களிடம் பச்சாதாபம் காட்ட எனக்கு உதவும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். எபிரெயர் 13:3 இன்றைய உலகம் மிகவும் பரபரப்பாயுள்ளது. மக்கள் மிகுந்த மன அழுத்தத்திலும் வேதனையிலும் வாழ்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறரது துயரத்தை நம்முடையது போலப் புரிந்துகொள்வது கடினம். இருப்பினும், இது ஏற்றுக்கொள்ளத் தக்க விளக்கம் அல்ல. ஏனென்றால் தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் மற்றவர்களுக்கு முதலிடம் கொடுக்கும்படி வேதாகமம் வலியுறுத்துகிறது. இயேசு மற்றவர்களிடம் பச்சாதாபம் காட்டுவதை முன்மாதிரியாகக் கொண்டிருந்தார், மேலும் பல வரலாற்றுத் தலைவர்கள் தங்கள் பச்சாதாபத்திற்காக நன்கு அறியப்பட்டவர்களாவர். அப்போஸ்தலர் புத்தகத்தில், தொற்காள் விசுவாசமுள்ள ஒரு முன்மாதிரியான பெண்ணாகச் சித்தரிக்கப்படுகிறார். அவளுடைய மனதுருக்கம், பெருந்தன்மை மற்றும் அசைக்க முடியாத இரக்கத்தினிமித்தமும், குறிப்பாக இஸ்ரேலின் கடற்கரை நகரமான யோப்பாவின் விதவைகளுக்குச் சேவை செய்வதற்கும் அவர் நன்கு அறியப்பட்டவர். அவர்கள் புறக்கணிக்கப்படாமல் அல்லது மறக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்து, அவர்களின் தேவைகளைச் சந்திப்பதற்கு அவர் தனது நேரத்தையும் வளங்களையும் அயராது அர்ப்பணித்தார். அவளுடைய செயல்கள் அவர்களின் பாதிப்புகள்பற்றிய ஆழமான புரிதலையும், அவர்களின் துயரத்தைப் போக்குவதற்கான உண்மையான விருப்பத்தையும் பிரதிபலித்தது. அவளுடைய பச்சாதாபம் பொருள் ஆதரவுக்கு அப்பாற்பட்டது. இழப்பு மற்றும் தனிமையின் ஆழமான தாக்கத்தை அவள் புரிந்துகொண்டாள். மேலும் துக்கத்திலும் தனிமையிலும் இருப்பவர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தர முயன்றாள். பச்சாதாபம் என்பது வெறும் உணர்வு அல்லது ஒரு சட்டென்ற உணர்ச்சி அல்ல என்பதை அவரது கதை நினைப்பூட்டுகிறது; இது ஒரு உந்து சக்தியாகும். இது, செயல்படவும், மற்றவர்களை அணுகவும், அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் நம்மைக் கட்டாயப்படுத்துகிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வேதனையிலும் துன்பத்திலும் உள்ளவர்களிடம் பச்சாதாபம் காட்ட எனக்கு உதவும். ஆமென்.