சனிக்கிழமை, 16 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும். சங்கீதம் 89:14 # நம்முடைய தேவன் நீதியும் நியாயமுமானவர்.# நீதி என்பது தேவனுடைய இராஜ்யத்தின் தனிச்சிறப்பம்சமாகும்.# நாம் இயேசுவை நம் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டபோது, அவர் நம்முடைய பாவங்களைத் தமது இரத்தத்தால் கழுவி, தம்முடைய இராஜ்யத்தின் குடிமக்களாய் நம்மை ஏற்றுக்கொண்டார்.# நாம் இப்போது அவருக்கும் அவருடைய இராஜ்யத்திற்கும் சொந்தமானவர்கள். # தேவ இராஜ்யத்தின் குடிமக்களாக, நம் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் நீதியையும் நியாயத்தையும் நாம் கடைபிடிக்க வேண்டும்.# கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்துக்கொண்டு நம் மனம் மறுரூபமாக வேண்டும். # பரிசுத்த ஆவியானவர் உங்கள் மனதையும் எண்ணங்களையும் ஆட்கொள்ள அனுமதியுங்கள்.# அப்போது, நீங்கள் இயேசுவைப் போலச் சிந்திக்கத் தொடங்குவீர்கள். மேலும் உங்கள் எண்ணங்கள், கண்ணோட்டங்கள் மற்றும் செயல்களில் நேர்மையாயிருப்பீர்கள்.# நீதியுள்ள நபராய் உலகினில் அறியப்பட பிரயாசப்படுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீதியுள்ள நபராய் இருக்க எனக்கு உதவும். ஆமென்.
நீதியுள்ள நபராக இருங்கள்.
“சனிக்கிழமை, 16 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும். சங்கீதம் 89:14 # நம்முடைய தேவன் நீதியும் நியாயமுமானவர்.# நீதி என்பது தேவனுடைய இராஜ்யத்தின் தனிச்சிறப்பம்சமாகும்.# நாம் இயேசுவை நம் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டபோது, அவர் நம்முடைய பாவங்களைத் தமது இரத்தத்தால் கழுவி, தம்முடைய இராஜ்யத்தின் குடிமக்களாய் நம்மை ஏற்றுக்கொண்டார்.# நாம் இப்போது அவருக்கும் அவருடைய இராஜ்யத்திற்கும் சொந்தமானவர்கள். # தேவ இராஜ்யத்தின் குடிமக்களாக, நம் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் நீதியையும் நியாயத்தையும் நாம் கடைபிடிக்க வேண்டும்.# கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்துக்கொண்டு நம் மனம் மறுரூபமாக வேண்டும். # பரிசுத்த ஆவியானவர் உங்கள் மனதையும் எண்ணங்களையும் ஆட்கொள்ள அனுமதியுங்கள்.# அப்போது, நீங்கள் இயேசுவைப் போலச் சிந்திக்கத் தொடங்குவீர்கள். மேலும் உங்கள் எண்ணங்கள், கண்ணோட்டங்கள் மற்றும் செயல்களில் நேர்மையாயிருப்பீர்கள்.# நீதியுள்ள நபராய் உலகினில் அறியப்பட பிரயாசப்படுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீதியுள்ள நபராய் இருக்க எனக்கு உதவும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

