புதன், 5 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.யோசுவா 21:45 தம்முடைய வாக்குத்தத்தங்கள் ஒருபொழுதும் தவறிப்போவதில்லை என்பதை கர்த்தர் உங்களுக்கு மீண்டும் நினைப்பூட்டுகிறார். அவருடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வதால் நீங்கள் வியாகுலப்படுகிறீர்களா? ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் என்று வேதாகமம் சொல்கிறது. பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்களுக்கு இன்னது தேவை, எப்பொழுது தேவை என்பதை அறிந்திருக்கிறார். காத்திருப்பது சவாலானதாயிருக்கலாம். ஆனால், நம்மில் மனத்தாழ்மையையும், பொறுமையையும் பயிற்றுவிக்க இந்நேரத்தைத் தேவன் பயன்படுத்துகிறார். இறுதியில், சகலமும் உங்கள் நன்மைக்கேதுவாய்ச் செயல்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வாக்குத்தத்தங்கள் நிறைவேற நான் காத்திருக்கும் நேரத்தில், உம்மில் தொடர்ந்து நம்பிக்கை வைக்க எனக்குக் கிருபையையும் பலத்தையும் தந்தரும். ஆமென்.
தேவனின் வாக்குகள் தவறுவதில்லை.
“புதன், 5 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.யோசுவா 21:45 தம்முடைய வாக்குத்தத்தங்கள் ஒருபொழுதும் தவறிப்போவதில்லை என்பதை கர்த்தர் உங்களுக்கு மீண்டும் நினைப்பூட்டுகிறார். அவருடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வதால் நீங்கள் வியாகுலப்படுகிறீர்களா? ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் என்று வேதாகமம் சொல்கிறது. பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்களுக்கு இன்னது தேவை, எப்பொழுது தேவை என்பதை அறிந்திருக்கிறார். காத்திருப்பது சவாலானதாயிருக்கலாம். ஆனால், நம்மில் மனத்தாழ்மையையும், பொறுமையையும் பயிற்றுவிக்க இந்நேரத்தைத் தேவன் பயன்படுத்துகிறார். இறுதியில், சகலமும் உங்கள் நன்மைக்கேதுவாய்ச் செயல்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வாக்குத்தத்தங்கள் நிறைவேற நான் காத்திருக்கும் நேரத்தில், உம்மில் தொடர்ந்து நம்பிக்கை வைக்க எனக்குக் கிருபையையும் பலத்தையும் தந்தரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

