← செய்திகளுக்குத் திரும்பு
தேவனின் இரட்சிக்கும் வல்லமை உங்களுக்காக எப்பொழுதும் இருக்கிறது.
படத்தைப் பதிவிறக்கு

தேவனின் இரட்சிக்கும் வல்லமை உங்களுக்காக எப்பொழுதும் இருக்கிறது.

“ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்குவதாக.சங்கீதம் 67:1 நம் தேவன் உண்மையில் ஆச்சரியமானவர். அவர் சர்வ வல்லமையுள்ளவர், மனிதப் புரிதலுக்கு அப்பாற்பட்டவர். ஒருபுறம், அவர் வல்லமைமிக்கவர்; மறுபுறம், அவர் அன்பும், இரக்கமும் நிறைந்தவர். உங்களையும் என்னையும் கவனித்துக்கொள்கிற அவர், நம்மீது வைத்திருக்கும் அன்பிற்கு எல்லையே இல்லை. எங்கும் நிறைந்தவராகிய அவர், எப்பொழுதும் தமது கண்களால் நம்மைக் கண்காணிக்கிறார். அவரது காப்பாற்றும் வல்லமை நம்மைத் தீங்கிலிருந்து பாதுகாக்கிறது. அவரால் முடியாதது எதுவுமில்லை. எந்தச் சூழ்நிலையிலும் நமக்கு உதவிட அவர் எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கிறார். நாம் செய்யவேண்டியதெல்லாம், நாம் எங்கு, எதைச் சந்தித்தாலும், அவரை நம்பி நாம் கூப்பிட வேண்டும். அவர் நமக்கு உதவிச் செய்வார். மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் இருங்கள். தேவன் மற்றவர்களைவிட உங்களை அதிகமாக நேசிக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது இரட்சிக்கிற கிருபைக்கும், வல்லமைக்கும் நன்றி. உமது வல்லமைமிக்கக் கரங்களின் கீழ் நான் எப்பொழுதும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்குவதாக.சங்கீதம் 67:1 நம் தேவன் உண்மையில் ஆச்சரியமானவர். அவர் சர்வ வல்லமையுள்ளவர், மனிதப் புரிதலுக்கு அப்பாற்பட்டவர். ஒருபுறம், அவர் வல்லமைமிக்கவர்; மறுபுறம், அவர் அன்பும், இரக்கமும் நிறைந்தவர். உங்களையும் என்னையும் கவனித்துக்கொள்கிற அவர், நம்மீது வைத்திருக்கும் அன்பிற்கு எல்லையே இல்லை. எங்கும் நிறைந்தவராகிய அவர், எப்பொழுதும் தமது கண்களால் நம்மைக் கண்காணிக்கிறார். அவரது காப்பாற்றும் வல்லமை நம்மைத் தீங்கிலிருந்து பாதுகாக்கிறது. அவரால் முடியாதது எதுவுமில்லை. எந்தச் சூழ்நிலையிலும் நமக்கு உதவிட அவர் எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கிறார். நாம் செய்யவேண்டியதெல்லாம், நாம் எங்கு, எதைச் சந்தித்தாலும், அவரை நம்பி நாம் கூப்பிட வேண்டும். அவர் நமக்கு உதவிச் செய்வார். மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் இருங்கள். தேவன் மற்றவர்களைவிட உங்களை அதிகமாக நேசிக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது இரட்சிக்கிற கிருபைக்கும், வல்லமைக்கும் நன்றி. உமது வல்லமைமிக்கக் கரங்களின் கீழ் நான் எப்பொழுதும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆமென்.