← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் மீதான தேவனின் அன்பு ஒருபொழுதும் மாறாது. அவருடைய சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராது.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் மீதான தேவனின் அன்பு ஒருபொழுதும் மாறாது.

“புதன், 10 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும்.ஏசாயா 54:10 யாரும்உங்களை நேசிப்பதில்லை என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? சில நேரங்களில், எந்தக் காரணமும் இல்லாமல் மக்கள் உங்களை வெறுக்கத் தொடங்கலாம். ஆனால், தேவனின் அன்பு ஒருபொழுதும் முடிவடையாது. எனவே, மனித நேசத்தைத் தேடுவதற்குப் பதிலாக, இயேசுவின் மேல் கவனம் செலுத்தி, அவரை உங்கள் வாழ்வின் அன்பராய் ஆக்குங்கள். அவருடைய அன்பு நித்தியமானதும் நிபந்தனையற்றதுமாம். மேலும், அவருடைய சமாதான உடன்படிக்கை என்றென்றும் நிலைத்திருக்கும் என்று அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். உங்கள் மீதான அவர் அன்பை யாராலும் மாற்ற முடியாது. அமைதியாய் உட்கார்ந்து அவருடைய அன்பையும் சமாதானத்தையும் அனுபவிக்கச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அவருடைய பிரசன்னம் உங்கள் இருதயத்தையும் சிந்தையையும் நிரப்பட்டும். தேவைப்படும் நேரங்களில் ஆறுதலையும் வல்லமையையும் அளிக்கட்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தேவனின் விலகாத கிருபையை அனுபவியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது நிபந்தனையற்ற அன்பிற்காகவும், எனக்குச் சமாதானத்தை தந்ததற்காகவும் உமக்கு நன்றி. ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 10 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும்.ஏசாயா 54:10 யாரும்உங்களை நேசிப்பதில்லை என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? சில நேரங்களில், எந்தக் காரணமும் இல்லாமல் மக்கள் உங்களை வெறுக்கத் தொடங்கலாம். ஆனால், தேவனின் அன்பு ஒருபொழுதும் முடிவடையாது. எனவே, மனித நேசத்தைத் தேடுவதற்குப் பதிலாக, இயேசுவின் மேல் கவனம் செலுத்தி, அவரை உங்கள் வாழ்வின் அன்பராய் ஆக்குங்கள். அவருடைய அன்பு நித்தியமானதும் நிபந்தனையற்றதுமாம். மேலும், அவருடைய சமாதான உடன்படிக்கை என்றென்றும் நிலைத்திருக்கும் என்று அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். உங்கள் மீதான அவர் அன்பை யாராலும் மாற்ற முடியாது. அமைதியாய் உட்கார்ந்து அவருடைய அன்பையும் சமாதானத்தையும் அனுபவிக்கச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அவருடைய பிரசன்னம் உங்கள் இருதயத்தையும் சிந்தையையும் நிரப்பட்டும். தேவைப்படும் நேரங்களில் ஆறுதலையும் வல்லமையையும் அளிக்கட்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தேவனின் விலகாத கிருபையை அனுபவியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது நிபந்தனையற்ற அன்பிற்காகவும், எனக்குச் சமாதானத்தை தந்ததற்காகவும் உமக்கு நன்றி. ஆமென்.