திங்கட்கிழமை, 10 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்.யாத்திராகமம் 19:6 நீங்கள் இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, தேவன் உங்கள் கடந்தகாலப் பாவங்களை மன்னித்து, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அவருடைய பரிசுத்த ஜனங்களாய்ப் பிரித்தெடுக்கிறார். மற்றவர்களுக்கு நம்பிக்கையையும் ஒப்புரவாக்குதலையும் கொண்டுவரும் நோக்கத்துடன் இந்த உலகில் அவருடைய வாரிசாகவும் பிரதிநிதியாகவும் இருக்க அவர் உங்களைத் தேர்ந்தெடுத்தார். தம்முடைய ராஜ்யத்தில் ஓர் ஆசாரியராய் மற்றவர்களுக்காகப் பரிந்து பேசத் தேவன் உங்களைத் தெரிந்தெடுத்தார். அவர் உங்கள் ஜெபங்களையும் காணிக்கைகளையும் அங்கிகரித்து உங்களை ஆசீர்வதிப்பார். உண்மையில், நீங்கள் ஒரு விசுவாசி மட்டுமல்ல, ஒரு ஆசாரிய இராஜ்யமாயும் ஒரு பரிசுத்த ஜாதியாயும் இருக்கிறீர்கள். உங்கள் பங்கு முக்கியமானதும் தனித்துவமானதுமாகும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டு உங்கள் தெய்வீகப் பலன்களை அசட்டை பண்ணாதீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மில் எனக்குள்ள சிலாக்கியங்களைப் புரிந்துகொண்டு அவைகளின்படி வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.
நீங்கள் தேவனின் ஆசாரிய இராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய்...
“திங்கட்கிழமை, 10 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்.யாத்திராகமம் 19:6 நீங்கள் இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, தேவன் உங்கள் கடந்தகாலப் பாவங்களை மன்னித்து, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அவருடைய பரிசுத்த ஜனங்களாய்ப் பிரித்தெடுக்கிறார். மற்றவர்களுக்கு நம்பிக்கையையும் ஒப்புரவாக்குதலையும் கொண்டுவரும் நோக்கத்துடன் இந்த உலகில் அவருடைய வாரிசாகவும் பிரதிநிதியாகவும் இருக்க அவர் உங்களைத் தேர்ந்தெடுத்தார். தம்முடைய ராஜ்யத்தில் ஓர் ஆசாரியராய் மற்றவர்களுக்காகப் பரிந்து பேசத் தேவன் உங்களைத் தெரிந்தெடுத்தார். அவர் உங்கள் ஜெபங்களையும் காணிக்கைகளையும் அங்கிகரித்து உங்களை ஆசீர்வதிப்பார். உண்மையில், நீங்கள் ஒரு விசுவாசி மட்டுமல்ல, ஒரு ஆசாரிய இராஜ்யமாயும் ஒரு பரிசுத்த ஜாதியாயும் இருக்கிறீர்கள். உங்கள் பங்கு முக்கியமானதும் தனித்துவமானதுமாகும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டு உங்கள் தெய்வீகப் பலன்களை அசட்டை பண்ணாதீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மில் எனக்குள்ள சிலாக்கியங்களைப் புரிந்துகொண்டு அவைகளின்படி வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

