← செய்திகளுக்குத் திரும்பு
உங்களிடமிருந்து பறிக்கப்பட்ட யாவையும் நீங்கள் நிச்சயமாய் மீட்டெடுப்பீர்கள்
படத்தைப் பதிவிறக்கு

உங்களிடமிருந்து பறிக்கப்பட்ட யாவையும் நீங்கள் நிச்சயமாய்...

“புதன்கிழமை, 27 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சகலத்தையும் திருப்பிக்கொள்வாய். 1 சாமுவேல் 30:8 தாவீது, எதிரிகளிடம் தன் உடைமைகளை இழந்து ஆண்டவரைத் தேடியபோது, ​​தேவன் அவருக்குச் சகாயம் செய்வதாய் உறுதியளித்தார். இதைப் போன்ற போராட்டத்தை நீங்கள் சந்திக்கிறீர்களா?உங்கள் இழப்புகள் அல்லது தோல்விகளால் நீங்கள் விரக்தியடைகிறீர்களா? மனம் தளராதீர்கள். தேவன் சில நேரங்களில் இத்தகைய சூழ்நிலைகளை ஒரு மாபெரும் நோக்கத்திற்காக அனுமதிக்கிறார். தேவனைச் சந்திக்கவும், அவருடைய வழிகாட்டுதலைப் பெறவும் நேரம் ஒதுக்குங்கள்.உங்கள் கண்ணீரில் மூழ்காமல் எழுந்து உங்கள் இலக்குகளைத் தொடருங்கள். தேவன் உங்களுடன் இருப்பார். உங்களிடமிருந்து எடுக்கப்பட்ட எல்லாவற்றையும் நீங்கள் திரும்பப் பெறுவீர்கள். உங்கள் எதிர்காலம் மகிமையாகவும் மகிழ்சியால் நிறைந்ததாயும் இருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னிடமிருந்து பறிக்கப்பட்ட அனைத்தையும் மீட்டெடுக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 27 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சகலத்தையும் திருப்பிக்கொள்வாய். 1 சாமுவேல் 30:8 தாவீது, எதிரிகளிடம் தன் உடைமைகளை இழந்து ஆண்டவரைத் தேடியபோது, ​​தேவன் அவருக்குச் சகாயம் செய்வதாய் உறுதியளித்தார். இதைப் போன்ற போராட்டத்தை நீங்கள் சந்திக்கிறீர்களா?உங்கள் இழப்புகள் அல்லது தோல்விகளால் நீங்கள் விரக்தியடைகிறீர்களா? மனம் தளராதீர்கள். தேவன் சில நேரங்களில் இத்தகைய சூழ்நிலைகளை ஒரு மாபெரும் நோக்கத்திற்காக அனுமதிக்கிறார். தேவனைச் சந்திக்கவும், அவருடைய வழிகாட்டுதலைப் பெறவும் நேரம் ஒதுக்குங்கள்.உங்கள் கண்ணீரில் மூழ்காமல் எழுந்து உங்கள் இலக்குகளைத் தொடருங்கள். தேவன் உங்களுடன் இருப்பார். உங்களிடமிருந்து எடுக்கப்பட்ட எல்லாவற்றையும் நீங்கள் திரும்பப் பெறுவீர்கள். உங்கள் எதிர்காலம் மகிமையாகவும் மகிழ்சியால் நிறைந்ததாயும் இருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னிடமிருந்து பறிக்கப்பட்ட அனைத்தையும் மீட்டெடுக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.