வியாழன், 28 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.சங்கீதம் 20:4 நீங்கள் தேவனிடமிருந்து பெற்றுக்கொண்டவைகளில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறீர்களா? தேவனின் இரக்கம், உதவி, வழிகாட்டுதல், பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளுக்காக நீங்கள் அவருக்கு நன்றியறிதல் உள்ளோராய் இருக்கிகிறீர்களா? இதுவரைச் சாதித்த கரியங்களில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்களா? அவருடைய கிருபையையும், ஆசீர்வாதத்தையும் நம் வாழ்வில் உண்மையாய் நினைவுகூறும்போது, எவ்வளவு சிறியதாய் இருந்தாலும் அதில் அவர் மகிழ்ச்சியடைந்து நம் இருதய விருப்பங்களை நிறைவேற்றுவார். அவர் கிருபையால் மட்டுமே நாம் இவ்வுலகில் வாழவும், செழிக்கவும் முடியும். நாம் இந்த கிருபையை முழுவதுமாய்ச் சார்ந்து நம் பங்கைச் செய்யும்போது, அவர் நம் முயற்சிகளை ஆசீர்வதிப்பார். நம் திட்டங்களை வெற்றியடையச் செய்வார். நீங்கள் வெற்றியடைவீர்கள். உங்கள் துக்கங்கள் சந்தோஷமாய் மாறும்; உங்கள் தோல்விகள் ஜெயமாய் மாறும். மகிழ்ச்சியாய் இருந்து தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் உங்களை வெற்றியடையச் செய்து, உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் மன விருப்பங்களை நிறைவேற்றுவீராக. ஆமென்.
உங்கள் மன விருப்பங்களைத் தேவன் நிறைவேற்றுவாராக
“வியாழன், 28 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.சங்கீதம் 20:4 நீங்கள் தேவனிடமிருந்து பெற்றுக்கொண்டவைகளில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறீர்களா? தேவனின் இரக்கம், உதவி, வழிகாட்டுதல், பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளுக்காக நீங்கள் அவருக்கு நன்றியறிதல் உள்ளோராய் இருக்கிகிறீர்களா? இதுவரைச் சாதித்த கரியங்களில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்களா? அவருடைய கிருபையையும், ஆசீர்வாதத்தையும் நம் வாழ்வில் உண்மையாய் நினைவுகூறும்போது, எவ்வளவு சிறியதாய் இருந்தாலும் அதில் அவர் மகிழ்ச்சியடைந்து நம் இருதய விருப்பங்களை நிறைவேற்றுவார். அவர் கிருபையால் மட்டுமே நாம் இவ்வுலகில் வாழவும், செழிக்கவும் முடியும். நாம் இந்த கிருபையை முழுவதுமாய்ச் சார்ந்து நம் பங்கைச் செய்யும்போது, அவர் நம் முயற்சிகளை ஆசீர்வதிப்பார். நம் திட்டங்களை வெற்றியடையச் செய்வார். நீங்கள் வெற்றியடைவீர்கள். உங்கள் துக்கங்கள் சந்தோஷமாய் மாறும்; உங்கள் தோல்விகள் ஜெயமாய் மாறும். மகிழ்ச்சியாய் இருந்து தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் உங்களை வெற்றியடையச் செய்து, உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் மன விருப்பங்களை நிறைவேற்றுவீராக. ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

