வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. பிலிப்பியர் 4:13 * நீங்கள் பலவீனமாகவும் சோர்வுற்றதாகவும் உணருகிறீர்களா?* உங்கள் தற்போதைய முயற்சிகளை கைவிடும் தருவாயில் இருக்கிறீர்களா?* உங்களுக்கு முன்னால் இருக்கும் வேலையைப் பற்றிக் குழப்பமாகவும், பயமாகவும் குறுக்குச் சந்தியில் நிற்பதைப் போன்று உணருகிறீர்களா?* நீங்கள் தற்போது கையாளும் திட்டங்கள் அல்லது செயல்முறையை முடிக்க இயலாமை பற்றிய எண்ணங்களால் மூழ்கிப்போயிருக்கிறீர்களா?* நீங்கள் முன்னோக்கிச் செல்வதற்கான ஆற்றலும் எதிர்ப்புச் சக்தியும் இல்லாமல் துவண்டுபோய், சிக்கித் தவிக்கிறீர்களா? ஆம், இவ்வுலகம் நமது பலத்தை உறிஞ்சும் கடினமானதோர் இடமாய் இருக்கலாம். மனிதர்களாகிய நமக்குக் குறைந்த பலமே உள்ளது. ஆனால், தேவன் சர்வவல்லவர்; அவரால் எதையும், எல்லாவற்றையும் செய்யக்கூடும். கிறிஸ்துவிடம் வாருங்கள். உங்கள் வரம்புகள் மற்றும் சூழ்நிலைகளை அவரது கரங்களில் ஒப்புக்கொடுங்கள். உண்மையில், உங்களுக்குத் தேவையான யாவையும் நிறைவேற்றுவதற்கு அவர் உங்களுக்குப் பலத்தைத் தருவார். கிறிஸ்து நம் பட்சத்தில் இருப்பதால், நாம் அற்புதமான காரியங்களைச் சாதிக்கலாம். கடல்களைக் கடக்கலாம், மலைகளைப் பெயர்க்கலாம். அவர் மூலமாய் மட்டும் சகலத்தையும் செய்யக் கவனமாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்னைப் பலப்படுத்தி, என் வாழ்க்கையில் உம்முடைய திட்டத்தையும், நோக்கத்தையும் நிறைவேற்ற எனக்குக் கிருபையைத் தாரும். ஆமென்.
நீங்கள் கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய முடியும்
“வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. பிலிப்பியர் 4:13 * நீங்கள் பலவீனமாகவும் சோர்வுற்றதாகவும் உணருகிறீர்களா?* உங்கள் தற்போதைய முயற்சிகளை கைவிடும் தருவாயில் இருக்கிறீர்களா?* உங்களுக்கு முன்னால் இருக்கும் வேலையைப் பற்றிக் குழப்பமாகவும், பயமாகவும் குறுக்குச் சந்தியில் நிற்பதைப் போன்று உணருகிறீர்களா?* நீங்கள் தற்போது கையாளும் திட்டங்கள் அல்லது செயல்முறையை முடிக்க இயலாமை பற்றிய எண்ணங்களால் மூழ்கிப்போயிருக்கிறீர்களா?* நீங்கள் முன்னோக்கிச் செல்வதற்கான ஆற்றலும் எதிர்ப்புச் சக்தியும் இல்லாமல் துவண்டுபோய், சிக்கித் தவிக்கிறீர்களா? ஆம், இவ்வுலகம் நமது பலத்தை உறிஞ்சும் கடினமானதோர் இடமாய் இருக்கலாம். மனிதர்களாகிய நமக்குக் குறைந்த பலமே உள்ளது. ஆனால், தேவன் சர்வவல்லவர்; அவரால் எதையும், எல்லாவற்றையும் செய்யக்கூடும். கிறிஸ்துவிடம் வாருங்கள். உங்கள் வரம்புகள் மற்றும் சூழ்நிலைகளை அவரது கரங்களில் ஒப்புக்கொடுங்கள். உண்மையில், உங்களுக்குத் தேவையான யாவையும் நிறைவேற்றுவதற்கு அவர் உங்களுக்குப் பலத்தைத் தருவார். கிறிஸ்து நம் பட்சத்தில் இருப்பதால், நாம் அற்புதமான காரியங்களைச் சாதிக்கலாம். கடல்களைக் கடக்கலாம், மலைகளைப் பெயர்க்கலாம். அவர் மூலமாய் மட்டும் சகலத்தையும் செய்யக் கவனமாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்னைப் பலப்படுத்தி, என் வாழ்க்கையில் உம்முடைய திட்டத்தையும், நோக்கத்தையும் நிறைவேற்ற எனக்குக் கிருபையைத் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

