சனிக்கிழமை, 23 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும் உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். யோபு 8:7 எளிமையாய் இருப்பது என்பது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காமல் உங்கள் தோற்றத்தில் மகிழ்ச்சியாக இருப்பதைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் தாழ்மையிலும் மற்றும் ஆணவமின்மையிலும் வெளிப்படுத்தப்படுகிறது. சுய விளம்பரம் மற்றும் ஆடம்பரத்தை அடிக்கடிக் கொண்டாடும் இன்றைய உலகில், எளிமை என்ற வேதாகமக் கொள்கை, மனத்தாழ்மை, சேவை மற்றும் சுயத்தை விடத் தேவனை மகிமைப்படுத்துவதை மதிக்கும் வேறுபட்ட தரத்திற்கு நம்மை அழைக்கிறது. எளிமையைக் கடைபிடிப்பதென்பது, பெருமைக்குப் பதிலாய்ப் பணிவு, சுய விளம்பரத்திற்குப் பதிலாய்ச் சேவை மற்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்குப் பதிலாகக் கடவுளின் மகிமை ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதாகும். அவர் நம் வாழ்வில் பெருகுவதற்கு நாம் சிறுகுவதாகும். உங்கள் முயற்சிகளிலும் ஊழியத்திலும் எளிமையாயிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எளிமையாய் இருப்பது ஒருபோதும் பலவீனம் அல்ல. மாறாக, தேவனின் ஆசீர்வாதங்களால் நிரம்பிய மகிமையான எதிர்காலத்திற்கான ஒரு படிக்கட்டு. பூமியில் உள்ள எல்லோரையும் விட மிகவும் தாழ்மையானவர் என்று விவரிக்கப்பட்ட மோசே, அடக்கத்திற்கு ஓர் ஆழமான முன்மாதிரியை வைக்கிறார். இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று பத்துக் கட்டளைகளைப் பெறத் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், மோசே தனிப்பட்ட மகிமையை நாடவில்லை. உண்மையான மனத்தாழ்மையைக் காட்டி, தேவனுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் சேவை செய்வதே அவருடைய முன்னுரிமையாய் இருந்தது. # உங்கள் எண்ணங்கள், அணுகுமுறைகள் மற்றும் நடத்தையில் நீங்கள் எவ்வளவு எளிமையாய் இருக்கிறீர்கள் என்பதை மதிப்பிடுவதற்கு இன்று உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள்.# உங்களை ஒருபோதும் மகிமைப்படுத்தவோ அல்லது தேவனுடைய கனத்தை எடுத்துக்கொள்ளவோ வேண்டாம். உங்கள்மூலம் ஜனங்கள் இயேசுவைக் காண்பதற்கான வழிகாட்டிப் பலகையாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் எளிமையாயிருக்கவும், என் வாழ்க்கையில் உமது நாமத்தை மகிமைப்படுத்தவும் எனக்குத் தயவுகூர்ந்து உதவிச் செய்யும். ஆமென்.
உங்களுடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும் உங்களுடைய முடிவு...
“சனிக்கிழமை, 23 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும் உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். யோபு 8:7 எளிமையாய் இருப்பது என்பது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காமல் உங்கள் தோற்றத்தில் மகிழ்ச்சியாக இருப்பதைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் தாழ்மையிலும் மற்றும் ஆணவமின்மையிலும் வெளிப்படுத்தப்படுகிறது. சுய விளம்பரம் மற்றும் ஆடம்பரத்தை அடிக்கடிக் கொண்டாடும் இன்றைய உலகில், எளிமை என்ற வேதாகமக் கொள்கை, மனத்தாழ்மை, சேவை மற்றும் சுயத்தை விடத் தேவனை மகிமைப்படுத்துவதை மதிக்கும் வேறுபட்ட தரத்திற்கு நம்மை அழைக்கிறது. எளிமையைக் கடைபிடிப்பதென்பது, பெருமைக்குப் பதிலாய்ப் பணிவு, சுய விளம்பரத்திற்குப் பதிலாய்ச் சேவை மற்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்குப் பதிலாகக் கடவுளின் மகிமை ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதாகும். அவர் நம் வாழ்வில் பெருகுவதற்கு நாம் சிறுகுவதாகும். உங்கள் முயற்சிகளிலும் ஊழியத்திலும் எளிமையாயிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எளிமையாய் இருப்பது ஒருபோதும் பலவீனம் அல்ல. மாறாக, தேவனின் ஆசீர்வாதங்களால் நிரம்பிய மகிமையான எதிர்காலத்திற்கான ஒரு படிக்கட்டு. பூமியில் உள்ள எல்லோரையும் விட மிகவும் தாழ்மையானவர் என்று விவரிக்கப்பட்ட மோசே, அடக்கத்திற்கு ஓர் ஆழமான முன்மாதிரியை வைக்கிறார். இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று பத்துக் கட்டளைகளைப் பெறத் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், மோசே தனிப்பட்ட மகிமையை நாடவில்லை. உண்மையான மனத்தாழ்மையைக் காட்டி, தேவனுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் சேவை செய்வதே அவருடைய முன்னுரிமையாய் இருந்தது. # உங்கள் எண்ணங்கள், அணுகுமுறைகள் மற்றும் நடத்தையில் நீங்கள் எவ்வளவு எளிமையாய் இருக்கிறீர்கள் என்பதை மதிப்பிடுவதற்கு இன்று உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள்.# உங்களை ஒருபோதும் மகிமைப்படுத்தவோ அல்லது தேவனுடைய கனத்தை எடுத்துக்கொள்ளவோ வேண்டாம். உங்கள்மூலம் ஜனங்கள் இயேசுவைக் காண்பதற்கான வழிகாட்டிப் பலகையாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் எளிமையாயிருக்கவும், என் வாழ்க்கையில் உமது நாமத்தை மகிமைப்படுத்தவும் எனக்குத் தயவுகூர்ந்து உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

