← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் பிதா இரக்கமுள்ளவராய் இருப்பதைப் போல, நீங்களும் இரக்கமுள்ளவராக இருங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் பிதா இரக்கமுள்ளவராய் இருப்பதைப் போல, நீங்களும்...

“வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். லூக்கா 6:36 தேவனின் மிக முக்கியப் பண்புகளில் ஒன்று இரக்கம். தேவன் தம்முடைய இரக்கத்தினிமித்தம் இருளின் பிடியிலிருந்த நம்மை மீட்டு, தமது ஆச்சரியமான ஒளியினிடத்திற்குக் கொண்டுவந்தார். இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டு, அவருடைய இராஜ்யத்தில் குடியுரிமை பெற்ற நாம், இந்த உலகில் அவருடைய பிரதிநிதிகளாக வாழ்வது மிகவும் முக்கியமாகும். இது நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நம் தெய்வீக சுபாவத்தைக் காண்பிப்பதைக் குறிக்கிறது. உங்கள் இருண்ட நேரத்தில் அல்லது நீங்கள் குழப்பமடைந்திருந்த ஒவ்வொரு முறையும் கிடைத்த தேவ இரக்கத்தை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். மற்றவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள், மாறாகக் கருணையையும் இரக்கத்தையும் காட்டுங்கள். # ஒவ்வொரு முறையும் நீங்கள் மற்றவர்களிடம் இரக்கம் காட்டும்போது, அவர்களை இயேசுவிடம் ஒரு படி நெருக்கமாகக் கொண்டுவருகிறீர்கள்.# ஜனங்கள் நமது இரக்கம் மற்றும் மென்மைத் தன்மையை அடிக்கடித் தவறாய்ப் பயன்படுத்தக்கூடும்.# இருப்பினும், நாம் கனிவாகவும் இரக்கமாகவும் இருப்பதை நிறுத்தக் கூடாது.# இறுதியாய், நேர்மையற்றவர்களிடம் நாம் தொடர்ந்து இரக்கம் காட்டும்போது என்றோ ஒரு நாள் அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து தேவனிடத்தில் மனம் திரும்புவதற்கு நாம் வழிசெய்கிறோம்.# எனவே, நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருப்போமாக. # கிறிஸ்மஸ் காலம் என்பது மனுக்குலத்தின் மீதான தேவனுடைய இரக்கத்தின் அற்புதமான நினைவூட்டலாகும். அதை நாம் மற்றவர்களுக்கும் பிரதிபலிப்போமாக. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னிடத்தில் இரக்கம் காட்டியதைப் போலவே, நான் மற்றவர்களிடம் இரக்கமாயிருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர். யாத்திராகமம் 15:13 இங்கு 'கிருபையினாலே' என்றெழுதப்பட்ட வார்த்தை, உண்மையுள்ள அன்பு என்று ஒரு ஆங்கில மொழியாக்கம் குறிப்பிடுகிறது. "உண்மையான அன்பு" என்பதற்கான எபிரேய வார்த்தை "ஹெஸ்ட்" ஆகும். இது "தயவு", "உடன்படிக்கை அன்பு" அல்லது "உறுதியான அன்பு" என்றும் அர்த்தம். உணர்ச்சிகளைத் தாண்டிச் செயலில் தன்னை வெளிப்படுத்தும் காதலைப் பற்றி இந்த வார்த்தை பேசுகிறது. இது சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், அன்பினால் தூண்டப்பட்ட ஒரு தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. வேதத்தில் ரூத் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் இருக்கிறாள். அவள் தன் மாமியாரை உத்தம இருதயத்தோடு நேசித்தாள். அதைப் போல, எஸ்தர் இராஜாத்தி தனது மக்கள்மீதும் நிலத்தின் மீதும் கொண்ட அன்பு அவரது துணிச்சலான செயல்களில் வெளிப்பட்டது, அவர்களுக்கும் தேவனுக்கும் அவள் தனது விசுவாசத்தை(உத்தமத்தை) வெளிப்படுத்தினாள். யூதர்களின் விடுதலைக்காக ராஜாவிடம் மன்றாடத் தன் உயிரைப் பணயம் வைத்தாள். # நீங்கள் இயேசுவுக்கு எவ்வளவு விசுவாசமாய் இருக்கிறீர்கள்?# அவர் உங்களுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்து, பாவம் மற்றும் சாத்தானின் பிடியிலிருந்து உங்களை மீட்டார்.# ஆகவே, அந்த அன்பிற்கு ஈடாக உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி இந்த உலகில் அவருக்குச் சாட்சியாக வாழவேண்டும்.# உங்கள் வாழ்க்கையில் தேவபக்திக்குரிய உபதேசங்களைப் பின்பற்றுவதிலும் பிரகடனப்படுத்துவதிலும் தைரியமாயிருக்கப் பயப்படாதீர்கள்.# உங்களை நேசிப்பதாலும், தமது பிள்ளைகளுக்கு உண்மையுள்ளவராய் இருப்பதாலும் தேவன் உங்களைத் தொடர்ந்து வழிநடத்தி ஆசீர்வதிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அன்பினால் என்னை பாதுகாத்து காப்பாற்றும். என் வாழ்நாள் முழுவதும் உம்மைப் போல் உத்தம அன்போடு வாழ எனக்கு உதவும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். லூக்கா 6:36 தேவனின் மிக முக்கியப் பண்புகளில் ஒன்று இரக்கம். தேவன் தம்முடைய இரக்கத்தினிமித்தம் இருளின் பிடியிலிருந்த நம்மை மீட்டு, தமது ஆச்சரியமான ஒளியினிடத்திற்குக் கொண்டுவந்தார். இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டு, அவருடைய இராஜ்யத்தில் குடியுரிமை பெற்ற நாம், இந்த உலகில் அவருடைய பிரதிநிதிகளாக வாழ்வது மிகவும் முக்கியமாகும். இது நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நம் தெய்வீக சுபாவத்தைக் காண்பிப்பதைக் குறிக்கிறது. உங்கள் இருண்ட நேரத்தில் அல்லது நீங்கள் குழப்பமடைந்திருந்த ஒவ்வொரு முறையும் கிடைத்த தேவ இரக்கத்தை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். மற்றவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள், மாறாகக் கருணையையும் இரக்கத்தையும் காட்டுங்கள். # ஒவ்வொரு முறையும் நீங்கள் மற்றவர்களிடம் இரக்கம் காட்டும்போது, அவர்களை இயேசுவிடம் ஒரு படி நெருக்கமாகக் கொண்டுவருகிறீர்கள்.# ஜனங்கள் நமது இரக்கம் மற்றும் மென்மைத் தன்மையை அடிக்கடித் தவறாய்ப் பயன்படுத்தக்கூடும்.# இருப்பினும், நாம் கனிவாகவும் இரக்கமாகவும் இருப்பதை நிறுத்தக் கூடாது.# இறுதியாய், நேர்மையற்றவர்களிடம் நாம் தொடர்ந்து இரக்கம் காட்டும்போது என்றோ ஒரு நாள் அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து தேவனிடத்தில் மனம் திரும்புவதற்கு நாம் வழிசெய்கிறோம்.# எனவே, நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருப்போமாக. # கிறிஸ்மஸ் காலம் என்பது மனுக்குலத்தின் மீதான தேவனுடைய இரக்கத்தின் அற்புதமான நினைவூட்டலாகும். அதை நாம் மற்றவர்களுக்கும் பிரதிபலிப்போமாக. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னிடத்தில் இரக்கம் காட்டியதைப் போலவே, நான் மற்றவர்களிடம் இரக்கமாயிருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர். யாத்திராகமம் 15:13 இங்கு ‘கிருபையினாலே’ என்றெழுதப்பட்ட வார்த்தை, உண்மையுள்ள அன்பு என்று ஒரு ஆங்கில மொழியாக்கம் குறிப்பிடுகிறது. “உண்மையான அன்பு” என்பதற்கான எபிரேய வார்த்தை “ஹெஸ்ட்” ஆகும். இது “தயவு”, “உடன்படிக்கை அன்பு” அல்லது “உறுதியான அன்பு” என்றும் அர்த்தம். உணர்ச்சிகளைத் தாண்டிச் செயலில் தன்னை வெளிப்படுத்தும் காதலைப் பற்றி இந்த வார்த்தை பேசுகிறது. இது சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், அன்பினால் தூண்டப்பட்ட ஒரு தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. வேதத்தில் ரூத் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் இருக்கிறாள். அவள் தன் மாமியாரை உத்தம இருதயத்தோடு நேசித்தாள். அதைப் போல, எஸ்தர் இராஜாத்தி தனது மக்கள்மீதும் நிலத்தின் மீதும் கொண்ட அன்பு அவரது துணிச்சலான செயல்களில் வெளிப்பட்டது, அவர்களுக்கும் தேவனுக்கும் அவள் தனது விசுவாசத்தை(உத்தமத்தை) வெளிப்படுத்தினாள். யூதர்களின் விடுதலைக்காக ராஜாவிடம் மன்றாடத் தன் உயிரைப் பணயம் வைத்தாள். # நீங்கள் இயேசுவுக்கு எவ்வளவு விசுவாசமாய் இருக்கிறீர்கள்?# அவர் உங்களுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்து, பாவம் மற்றும் சாத்தானின் பிடியிலிருந்து உங்களை மீட்டார்.# ஆகவே, அந்த அன்பிற்கு ஈடாக உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி இந்த உலகில் அவருக்குச் சாட்சியாக வாழவேண்டும்.# உங்கள் வாழ்க்கையில் தேவபக்திக்குரிய உபதேசங்களைப் பின்பற்றுவதிலும் பிரகடனப்படுத்துவதிலும் தைரியமாயிருக்கப் பயப்படாதீர்கள்.# உங்களை நேசிப்பதாலும், தமது பிள்ளைகளுக்கு உண்மையுள்ளவராய் இருப்பதாலும் தேவன் உங்களைத் தொடர்ந்து வழிநடத்தி ஆசீர்வதிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அன்பினால் என்னை பாதுகாத்து காப்பாற்றும். என் வாழ்நாள் முழுவதும் உம்மைப் போல் உத்தம அன்போடு வாழ எனக்கு உதவும். ஆமென்.