திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள். ரூத் 3:11 ரூத் என்ற மோவாபிய பெண் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறாள். மிக இளம் வயதிலேயே கணவனை இழந்தவள். இருந்தபோதிலும், அவள் தனது கணவரின் தாய்க்கு விசுவாசமாயிருந்தாள். அவள் தன் மாமியாருடன் இருக்கவும், அவளுடைய தேவனையும் அவளது வாழ்க்கை முறையையும் பின்பற்றவும் மிகவும் தைரியமான முடிவை எடுத்தாள். ஆம், அவள் இஸ்ரவேலின் தேவனின் வழிகளைப் பின்பற்ற முடிவு செய்தாள். அவள் நன்னடத்தைச் சிறப்பிற்கு முன்மாதிரியாக இருந்து, வாழ்வில் நோக்கத்துடன் வாழ்ந்தாள். தேவனுக்கும் அவளது மாமியாருக்கும் பணிவு மற்றும் கருணையுடன் சேவை செய்தாள். அவள் பக்தியுடனும், நேர்மையாகவும், புதிய இடத்தில் கடின உழைப்பாளியாகவும் இருந்தாள். அவள் தன்னுடைய மென்மையை ஒருபோதும் கைவிடாதவளாகவும் இருந்தாள். புதிய இடத்தில் வாழ்க்கையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தனக்கு வழிகாட்டும் மாமியாரின் அறிவுறுத்தல்களை அவள் கவனமாகப் பின்பற்றினாள். பல ஆண்டுகளுக்குப் பின்பு, இயேசு அவளுடைய சந்ததியில் பிறந்ததைக் காண்கிறோம். # இன்று, இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் நாம், ரூத்தை நினைத்து, அவளைப் போல் உன்னத வாழ்வு வாழ உறுதி கொள்வோம்.# இப்படிப்பட்ட வாழ்க்கை இயற்கையாகவே இயேசுவின் நறுமணத்தை வீசும். மேலும் பலருக்கு நீங்கள் ஆசீர்வாதமாயிருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உன்னதமான நபராகவும், உமக்கு உண்மையுள்ள சாட்சியாகவும் இருக்க எனக்கு உதவும். ஆமென்.
உன்னத குணம் கொண்ட நபராக இருங்கள்.
“திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள். ரூத் 3:11 ரூத் என்ற மோவாபிய பெண் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறாள். மிக இளம் வயதிலேயே கணவனை இழந்தவள். இருந்தபோதிலும், அவள் தனது கணவரின் தாய்க்கு விசுவாசமாயிருந்தாள். அவள் தன் மாமியாருடன் இருக்கவும், அவளுடைய தேவனையும் அவளது வாழ்க்கை முறையையும் பின்பற்றவும் மிகவும் தைரியமான முடிவை எடுத்தாள். ஆம், அவள் இஸ்ரவேலின் தேவனின் வழிகளைப் பின்பற்ற முடிவு செய்தாள். அவள் நன்னடத்தைச் சிறப்பிற்கு முன்மாதிரியாக இருந்து, வாழ்வில் நோக்கத்துடன் வாழ்ந்தாள். தேவனுக்கும் அவளது மாமியாருக்கும் பணிவு மற்றும் கருணையுடன் சேவை செய்தாள். அவள் பக்தியுடனும், நேர்மையாகவும், புதிய இடத்தில் கடின உழைப்பாளியாகவும் இருந்தாள். அவள் தன்னுடைய மென்மையை ஒருபோதும் கைவிடாதவளாகவும் இருந்தாள். புதிய இடத்தில் வாழ்க்கையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தனக்கு வழிகாட்டும் மாமியாரின் அறிவுறுத்தல்களை அவள் கவனமாகப் பின்பற்றினாள். பல ஆண்டுகளுக்குப் பின்பு, இயேசு அவளுடைய சந்ததியில் பிறந்ததைக் காண்கிறோம். # இன்று, இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் நாம், ரூத்தை நினைத்து, அவளைப் போல் உன்னத வாழ்வு வாழ உறுதி கொள்வோம்.# இப்படிப்பட்ட வாழ்க்கை இயற்கையாகவே இயேசுவின் நறுமணத்தை வீசும். மேலும் பலருக்கு நீங்கள் ஆசீர்வாதமாயிருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உன்னதமான நபராகவும், உமக்கு உண்மையுள்ள சாட்சியாகவும் இருக்க எனக்கு உதவும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

