ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.2 நாளாகமம் 20:15 * உங்களை எதிர்ப்போரைக் கண்டு நீங்கள் அஞ்சுகிறீர்களா?* நீங்கள் செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியை நாடி உலக உதவியை நம்புகிறீர்களா? * சற்றுப் பொறுங்கள். தேவனைவிட மனிதர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்காதீர்கள்.* மாறாக, தேவனின் முகத்தைத் தேடி, துன்பத்தில் அவரை நோக்கிக் கூக்குரலிடுங்கள். * நம்முடைய தேவன் வல்லமையுள்ளவரும் தேசங்களையெல்லாம் ஆளுகிறவருமாய் இருக்கிறார். உங்கள் இன்னல்கனைகளைத் தேவனிடத்தில் கொடுத்து அவருடைய வழிகாட்டுதலைக் கேளுங்கள். உங்கள் கஷ்டங்களிலிருந்து உங்களை விடுவிப்பதில் அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் உங்களுக்கு எதிராயில்லாமல் உங்கள் பட்சத்தில் இருக்கிறார். * யுத்தம் உங்களுடையதல்ல, ஏனென்றால், தேவன் தம்முடைய அன்பையும், அக்கறையையும், வல்லமையையும் உங்கள் வாழ்வில்ல் வெளிப்படுத்த விரும்புகிறார்.* நீங்கள் அவரைத் தேடி, அவரை நம்பி, அவருக்கு நன்றி சொல்லும்போது, உங்கள் வாழ்க்கையில் அசாதாரணமான காரியங்களைச் செய்ய அவர் விரும்புகிறார். ஒருபொழுதும், எந்தச் சமயத்திலும் மனம் தளர்ந்துவிடாதீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் யுத்தங்களை உம்மிடத்தில் கொடுக்கிறேன். தயவுகூர்ந்து எனக்காக யுத்தம்பண்ணும். ஆமென்.
பயப்பட வேண்டாம்!
“ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.2 நாளாகமம் 20:15 * உங்களை எதிர்ப்போரைக் கண்டு நீங்கள் அஞ்சுகிறீர்களா?* நீங்கள் செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியை நாடி உலக உதவியை நம்புகிறீர்களா? * சற்றுப் பொறுங்கள். தேவனைவிட மனிதர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்காதீர்கள்.* மாறாக, தேவனின் முகத்தைத் தேடி, துன்பத்தில் அவரை நோக்கிக் கூக்குரலிடுங்கள். * நம்முடைய தேவன் வல்லமையுள்ளவரும் தேசங்களையெல்லாம் ஆளுகிறவருமாய் இருக்கிறார். உங்கள் இன்னல்கனைகளைத் தேவனிடத்தில் கொடுத்து அவருடைய வழிகாட்டுதலைக் கேளுங்கள். உங்கள் கஷ்டங்களிலிருந்து உங்களை விடுவிப்பதில் அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் உங்களுக்கு எதிராயில்லாமல் உங்கள் பட்சத்தில் இருக்கிறார். * யுத்தம் உங்களுடையதல்ல, ஏனென்றால், தேவன் தம்முடைய அன்பையும், அக்கறையையும், வல்லமையையும் உங்கள் வாழ்வில்ல் வெளிப்படுத்த விரும்புகிறார்.* நீங்கள் அவரைத் தேடி, அவரை நம்பி, அவருக்கு நன்றி சொல்லும்போது, உங்கள் வாழ்க்கையில் அசாதாரணமான காரியங்களைச் செய்ய அவர் விரும்புகிறார். ஒருபொழுதும், எந்தச் சமயத்திலும் மனம் தளர்ந்துவிடாதீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் யுத்தங்களை உம்மிடத்தில் கொடுக்கிறேன். தயவுகூர்ந்து எனக்காக யுத்தம்பண்ணும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

